30/07/2018

சிலுவை யுத்தங்கள் − 7...


ஐரோப்பிய யாத்திரிகர்களின் இட்டுக்கட்டு.....

ஐரோப்பிய யாத்திரிகா்களில் சிலர், ஜெரூஸலத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் தம்மை மானபங்கப்படுத்தித் துன்புறுத்தினர் என்று பொய்யாகக் கூறிய கதையும் கிறித்துவர்கள் சிலுவைப் போரை ஆரம்பிக்கும் எண்ணத்துக்கு உரமிட்டது.

கி.பி.−11ஆம் நூற்றாண்டளவில் ஜெரூஸலம்,சிரியா ஆகிய பிரதேசங்கள் ஸல்ஜூக்கிய ஆதிக்கத்தின் கீழ் இருந்தன.இக்காலப்பிரிவில் ஐரோப்பாவிலிருந்து ஜெரூஸலத்துக்கு வந்த கிறித்துவ யாத்திரிகர்கள், இஸ்லாத்தின் கட்டுப்பாட்டை விட்டும் வெளியேறிவிட்ட முஸ்லிம் பெயர் தாங்கிய கொள்ளைக்காரா்களால் சில துன்புறுத்தல்களுக்கு ஆளாயினர்.

அக்கொள்ளையா்களுக்கும் முஸ்லிம் அரசுக்கும் எந்தவித சம்பந்தமும் இருக்கவில்லை என்பது கவனிக்க வேண்டிய ஒன்று. ஆனால்,நாடு திரும்பிய கிறித்தவா்கள் ஜெரூஸலத்தில் முஸ்லிம்கள் தம்மை அவமானப்படுத்தினர். என்ற எவ்வித ஆதாரமற்ற வதந்தியைக் கட்டவிழ்த்து விட்டனர்.

ஏற்கனவே முஸ்லிம்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டிருந்த ஐரோப்பிய கிறித்துவத் தலைமைப்பீடம் எவ்வித ஆதாரமற்ற இக்கட்டுக் கதையால் சினமுற்று, தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளலாயிற்று.

இதுவரை நாம் மொத்தம் ஏழு காரணங்களை பார்த்தோம் இனி வரும் சில பதிவுகளில் இக்காரணிகளின் விளைவுகளை எதிர்நோக்குவோம்..

- தொடரும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.