19/10/2018

திராவிடமே ஈழ விடுதலைக்கு முதல் எதிரி...


கேள்வி: கருணாநிதி மற்றும் ஜெயலலிதா போன்றவர்கள் 'ஈழத்தை' வைத்து அரசியல் நாடகம் ஆடினாலும், வைகோ, பெரியார் போன்றோர் ஈழத்துக்காக குரல் கொடுத்து வந்து தானே இருக்கிறார்கள். 'வைகோ' ஒரு தெலுங்கர் என்று கூறி அவர் மீது சேற்றை வாரி இறைத்தால், ஈழத்துக்காக குரல் கொடுத்த ஒரு தமிழர் தலைவரை இங்கே காட்ட முடியுமா...?

இந்த கேள்விக்கு பதிலை நேரடியாக பார்க்கும் முன்பு வரலாற்றை சற்று நேர் செய்வோம்...

வருடம் 1965 :

தமிழ் தேசியத்தின் ஒரு பகுதியாக தமிழக மாணவர்களால் தன்னிச்சையாக எழுந்த போராட்டம் 'இந்தி எதிர்ப்பு போராட்டம்'. உண்மையில் அது தமிழருக்கான ஒரு தமிழ் தேசிய இனப் போராட்டம்.

தமிழர் என்ற ஒரு தேசிய இனத்தை மதித்து நடக்காத இந்திய அரசை எதிர்த்து தமிழக மாணவர்கள் தன்னிச்சையாக கொதித்து எழுந்தனர்.

மேலே சொன்ன போராட்டத்தில் பெரியாரோ, திராவிட கட்சிகளோ எந்த அக்கறையும் காட்டியது இல்லை. ஆனால் அவர்கள் தான் அனைத்தையும் செய்தார்கள் என்றும், 'இனப்போராட்டம்' என்பது 'மொழிப்போராட்டமாக' சுருக்கப்பட்டு காயடிக்கப்பட்டதும் இதே திராவிடர்கள் தான் என்பதும், நோகாமல் நொங்கு தின்பதை போல, போராட்டத்தில் பெரிதும் பங்கு ஆற்றாமலேயே, அதன் பலன் மொத்தத்தையும் அனுபவித்து ஆட்சிக்கு வந்ததும் இதே திராவிட கயவர்கள் தான் என்பதையும் சற்று ஆதாரங்களுடன் பார்ப்போம்.

பெரியாரின் இந்தி எதிர்ப்பு யோக்கிதை :

இந்தி போராட்டத்தை எதித்த பெரியார் தான், தமிழகத்தில் ராஜாஜிக்கு முன்பாகவே  இந்தியை கொண்டு வந்தவர் என்பதும், அதை போற்றி வளர்த்தவர் என்பதும் எத்தனை பேருக்கு தெரியும்?

இவர் 1922-ல் ஈரோட்டில் ஹிந்திப்பள்ளி ஒன்றை ஆரம்பிக்க இலவசமாக இடம் கொடுத்தார். இராமசாமி நாயக்கர் காங்கிரசில் தொண்டாற்றிய காலத்தில் அவர் முயற்சியால் ஈரோட்டில் ஹிந்தி வகுப்பொன்று நடைபெற்றது. திறப்பு விழாவுக்கு யானுஞ் சென்றிருந்தேன். தென்னாட்டில் ஹிந்திக்கு விதை இட்டவர் நாயக்கரே"  -- "திரு.வி.க.வின் வாழ்க்கைக் குறிப்புகள்" என்ற நூலில் பக்கம் 436

பின்பு இதே பெரியார் தான், பெருவாரியான பிராமணர்கள் இந்தியை கற்று பயின்று இருக்கிறார்கள் என்பதால், பிராமணர்களை எதிர்க்கும் பொருட்டு இந்தியை எதிர்த்தார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

ஆக, ஆதரித்தாலும், எதிர்த்தாலும் அதனால் தமிழுக்கோ, தமிழருக்கோ நன்மை பயக்கும் என்ற பதத்தில் பெரியார் செயல்பட்டதே இல்லை என்பதும், இந்திக்கு மாறாக அவர் 'ஆங்கிலத்தை தான்' முன் வைத்தார், செயல்படுத்தினார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

Source: http://newindian.activeboard.com/t44595205/topic-44595205/?sort=oldestFirst&page=2

என்றுமே ஆங்கிலத்துக்கு ஆதரவாக நின்று இந்தியை எதிர்ப்பது என்னும் திராவிடர் கழக நிலைப்பாட்டில் இருந்து முற்றிலும் மாறுபட்டு மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட தமிழுக்கென்று - தமிழர் சார்பாக - நடத்தப்பட்ட இந்தி எதிர்ப்பு போராட்டத்தையும் பெரியார் 'காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து' நடக்கும் போராடம்மாக வர்ணித்து கொச்சை படுத்தினார்.

இந்தியைத் திணிப்பதில்லை என்று அன்றே காமராசர் எனக்கு எழுதித் தந்திருக்கிறாரே! அந்த உறுதிமொழியை அரசினரும் மீறாதபோது, ஏன் கிளர்ச்சி செய்ய வேண்டும்? பதவியைப் பிடிப்பதற்காகக் கண்ணீர்த்துளிகள் (திமுக) செத்த பாம்பை (இந்தி எதிர்ப்பு) எடுத்து ஆட்டுகின்றனர். கவிஞர் கருணானந்தம்: "தந்தை பெரியார்" புத்தகம், பக்கம் 416-418.

என்று 1965 ஜனவரி 19 அரகண்டநல்லூரில் பேசினார்.

இப்படி 'வெறும் வாயை மட்டும் மெல்லுங்கள், போராட்டம் கீராட்டம் எல்லாம் வேண்டாம்' என்று தமிழருக்கு பொல்லாத அறிவுரை வழங்கினார் பெரியார். ஆனால், அவர் நினைத்ததற்கு மாறாக தமிழனுக்கே உரிய போராட்ட குணத்தால் வரலாற்று சிறப்புமிக்க அந்த போராட்டம் வெடித்தே விட்டது. விளைவாக இந்திய வான்படைகள் தமிழரின் மீது பெரியார் இனப்போரையே தொடுத்தன. பல உயிர்கள் செத்து விழுந்தன.

ஈழ விடுதலை விசயத்தில் பெரியார் இன்னும் மோசம். தந்தை செல்வாவிடம் "ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும்" என்று சப்பை கட்டி அனுப்பி விட்டார் தமிழக அரசிலில் தனித்து பார்க்க முடியாத சக்தியாக பெருமையோடு பேசப்படும் பெரியார்.

திமுகவின் இந்தி எதிர்ப்பு யோக்கிதை :

திமுக தலைவர்கள் தளைப்படுத்தப்பட்டனர். மிகப்பெரிய அடக்குமுறையை இந்திய அரசு ஏவி விட்டது. அன்று எழுந்த மாணவர் போராட்டம் கண்டு அரண்டு போன திமுக, பின்வாங்கியது. அந்த இயக்கமும் ஆங்கிலத்துக்கு தான் வரிந்து கட்டிக்கொண்டு நின்றதே அன்றி தமிழுக்காக அல்லவே! இந்த நிலையில், அம்மாபெரும் மொழிப்போரில் பெரிதாகப் பங்கெடுக்காமல் அந்த கழகம் ஒதுங்கியே நின்றது.

அண்ணா தம்முடைய உண்மை உருவத்தைக் காட்டி விட்டார்! அம் மொழிப்போருடன் "ஒட்டுமில்லை, உறவுமில்லை" என்று அறிக்கை விடுத்து திமுக வின் கயமைக்கு கட்டியம் சொன்னார். அம் மொழிப்போரை கைவிடுமாறு 10.2.1965 அன்று மாணவர்களுக்கு ஓர் அறைகூவல் விடுத்தார். அதை கண்டு பெரியார் "பூனை கோணியில் இருந்து வெளி வந்து விட்டது" என்று சொல்லி நகையாடினார்." -- கவிஞர் கருணானந்தம்: "தந்தை பெரியார்" புத்தகம், பக்கம் 416-418.

இறுதியில் உயிர்கள் பல செத்து விழுந்தாலும், தமிழுக்கென்று போராடாமல், பின்வாங்கிய திமுக, செத்த உயிர்களின் மீது முதன் முறையாக 1965 இல் ஆட்சி அமைத்தது.

இதில் இருந்து நாம் அறிந்து கொள்வது:

இந்திக்கு மாற்றாக ஆங்கிலத்தை முன் மொழிந்த திராவிடர்கள், தமிழருக்காக தமிழரால், தமிழை முன்னிறுத்தி தன்னிச்சையாக எழுந்த தமிழ் தேசிய சின்னமான 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தை, மீண்டும் தங்கள் கயமைத் தனத்தால் தனது அரத பழசான 'இந்திக்கு மாற்றான ஆங்கிலம்' என்று திசை திருப்பி, தமக்குள்ள அரசியல் செய்து தமிழ் தேசிய எழுச்சியை அடக்கினர். இதன் காரணமாக, அன்று முதல் இன்று வரை எந்த திராவிட இயக்கத்திலும், கட்சியிலும் முக்கிய பொறுப்புகளில் இளைஞர்கள் இல்லாமல் மிக கவனமாக பார்த்துக் கொள்ளப்பட்டு வருகிறது.

வருடம் 2013 :

சமீபத்தில் தமிழகத்தில் எந்த அரசியல் பின்புலமும் இல்லாமல், ஈழத்துக்காக ஒரு பெரு நெருப்பு 'லயோலா' கல்லூரி மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு அது தமிழ் நாடு முழுவதும் பற்றி கொண்டது.

இதை பார்த்து ஆளும், எதிர் கட்சிகள் அரண்டு தான் போயின. ஆளும் கன்னட ஜெயலலிதா அம்மையாரின் அரசோ, 'இலங்கை மீது பொருளாதார தடையை விதிக்க வேண்டும்' என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி விட்டு, 'அது தீர்மானமாக மட்டுமே இருக்க வேண்டும், செயல் வடிவம் பெற்றுவிட கூடாது' என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்.

விளைவு அனைத்து கல்லூரிகளுக்கும் காலவரை இன்றி விடுமுறை அறிவித்தார்.

அனைத்து கல்லூரி விடுதிகளையும் மாணவர்கள் உடனே காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு மாணவர்களின் எழுச்சியை அடக்க தனக்கே உரிய பாணியில் பணியாற்றினார்.

தமிழருக்கான நாடு கேட்டு மாணவர்கள் போராட்டம் (2013) :

ஆனால் எதிர் கட்சியை இருக்கும் விஜயகாந்த் அரசோ, அதற்க்கு அடுத்து இருக்கும் தெலுங்கர் கருணாநிதி அரசோ இதை வைத்து வேறு ஒரு அரசியல் நாடகம் ஆடியது.

மாணவர்களின் உண்மையான போராட்டம் 'ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கு என்று ஒரு நாடு வேண்டும்' என்பதே. இதை பல முறை, அனைத்து மாணவர்களும் 'புதிய தலைமுறை' உள்ளிட்ட தொலைக்காட்சி ஊடகங்களின் வாயிலாக ஆணித்தரமாகவே வலியுறுத்தினர்.

ஆனால், திராவிட ஊடங்கங்கள் 'அமேரிக்கா இலங்கைக்கு எதிராக ஐ.நாவில் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்' என்று போராடுவதாக அயோக்கியத்தனமாக செய்தியை திரித்து வெளியிட்டனர். இதன் மூலம் தங்களின் இந்திய (திராவிடர்களின் பாணியில் சொன்னால் ஆரிய பாசம்) பாசத்தை மறைமுகமாக வலியுறுத்தினர்.

இதன் மூலம் 'மாணவர்களின் ஈழ நாடு' கோரிக்கை என்பது திட்டமிட்டு மறைக்கப்பட்டது.

Source:http://tamil.oneindia.in/news/2013/03/24/tamilnadu-arts-colleges-re-open-tomorrow-172079.html

வைகோ நல்லவர்தானே...?

சிங்கள குடியேற்றத்தையும், சிங்கள இராணுவ மயமாக்கலையும் எதிர்க்கும் வைகோவுக்கு இங்கே பல நூறு ஆண்டுகளாக தெலுங்கர்களின் குடியேற்றமான பாளையங்களும், தெலுங்கர்களின் இராணுவ மயமாக்கலின் வடிவமாக அவை இன்றும் தமிழருக்கு எதிராக அதே பெயரில் வழங்கி வருவதும் தெரியாதா...? அதை அவர் எதிர்க்க வேண்டும். ஆனால் குறைந்த பட்சம் அதை வெளியில் சொல்லி இருப்பாரா...? ஏன்? ஊருக்கு மட்டும் உபதேசமா?

ஈழத்தில் ஒரு தமிழனை தலைவராக நிறுத்தும் போது, தமிழகத்தில் திராவிடனை ஏன் நிறுத்த வேண்டும் என்ற ஒரு அடிப்படை கேள்விக்கு பதில் சொல்வாரா..?

விஜய நகர பேரரசு தொடங்கி இன்று வரை தமிழனை மொட்டை அடிப்பது தெலுங்கர்களான திராவிடர்கள் தான் என்று உண்மை தெரிந்தும், வைகோ  அவர்களின் தலைமையை தமிழர்கள் ஏற்கத் தான் வேண்டுமா?

எந்த தமிழன் கட்சி ஆரம்பித்தாலும் அதை எல்லாம் சாதி கட்சி என்றும், எந்த தெலுங்கர் கட்சி ஆரம்பித்தாலும் அதை எல்லாம் முற்போக்கு கட்சி என்று சொல்லும் திராவிட ஊடங்கள், 'வைகோ போன்று தமிழனுக்கு உழைத்த ஒரு தமிழனை காட்டு பார்ப்போம்' என்று கேட்பதில் நியாயம் இருக்கிறதா?

முதலில், தமிழனுக்காக தமிழன் போராட இங்கே தமிழ் நாட்டில் களம் இருக்கிறதா? ஆளும் கட்சி, எதிர் கட்சி, மூன்றாம் நான்காம் கட்சி என்று எல்லாருமே தெலுங்கர்கள் நிரம்பி இருக்க, எமக்காக யாம் எங்கே போராடுவது?

விஜயகாந்த் உள்ளிட்ட தெலுங்கர்கள் குறித்து பாரதி ராஜா:

"இந்தியாவில் வியாபாரம் செய்யவந்த வெள்ளைக்காரன், ஒரு கட்டத்தில் நாட்டைவிட்டே ஓடிட்டான். டெல்லிக்குப் படையெடுத்த மொகலாயனும் திரும்பிப் போய்ட்டான். ஆனால், தென்னிந்தியாவில் படையெடுத்து வந்த விஜயநகரப் பேரரசைச் சேர்ந்தவங்க என்ன ஆனாங்க?

கேரளாவிலும் கர்நாடகாவிலும் அவங்களைத் துரத்தியடிச்சுட்டாங்க. ஆனால், தமிழ்நாட்டில்? இதுதான் பல பட்டறை கண்ட பூமியாச்சே...

கலைஞர் 'பராசக்தி'யில் சொன்னது மாதிரி, வந்தாரை வாழவைக்கும் தமிழகம் அவங்களையும் வாழவெச்சுட்டு இருக்கு. அவங்களும் இங்கே சுகவாசியா இருந்து பழகிட்டதால, இடத்தைக் காலி பண்ண மாட்டேங்கிறாங்க.

தமிழர்களின் பூமியில் அண்டிப் பிழைக்க வந்து தஞ்சம் அடைஞ்சவங்க, இப்போ தமிழ்நாட்டின் மண்ணுக்கும் ஆட்சிக்கும் சொந்தம் கொண்டாடுறாங்க. மிஸ்டர் விஜயகாந்த்... பாவம் தமிழர்கள்... எங்களை விட்டுடுங்க!'

Source: http://tamil.oneindia.in/movies/news/2013/06/bharathirajaa-s-attack-on-vijayakanth-177987.html

தமிழரை வீழ்த்திய காலம் தொட்டு, இன்று வரை நேரடியாகவும், திராவிடம் என்று மறைமுகமாகவும் தெலுங்கர்களும்,கன்னடர்களும் நம்மை அடிமை படுத்தி ஆண்டு கொண்டு இருக்கின்றனர். எனவே வைகோ போன்ற தெலுங்கர்கள், ஈழத்தில் தமிழனுக்கென்று ஒரு நாடும், அதற்க்கு அவனே தலைமையும் இருக்க வேண்டும் என்று போராடுவது உண்மை என்றால், தமிழ் நாட்டிலும் அதையே அவர் வழிமொழிய வேண்டும். மற்றபடி வைகோ , திராவிடத்தை விடுத்து எமக்காக போராடும் தெலுங்கர் இன தோழராக இருக்கலாம். தலைவராக ஆக முடியாது. மீண்டும் மீண்டும் தெலுங்கரிடம் ஆட்சியை கொடுத்து அடிமைப்பட தமிழர்கள் தயார் இல்லை.

எனவே தமிழனுக்கேன்று ஒரு நாடு அமைவதையோ, அவனுகென்று ஒரு அடையாளம் இருப்பதையோ எதிர்க்கும் முதல் எதிரிகளே திராவிடர்கள் தான்.

இவர்கள் ஈழம் பெற்று தருவார்கள் என்று பகல் கனவு காணும் மூட தமிழர்களே.....

இனிமேலாவது திருந்துங்கள்....

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் நுழையாதவாறு தடுப்பதற்காக கேரள மாநிலம் நிலக்கல் பகுதியில் பாஜக, ஆர்எஸ்எஸ் கலவரத்தில் ஈடுபட்டனர்...


பெண்களின் மார்பகம் பற்றிய ஓர் விழிப்புணர்வு பதிவு...


பள்ளிக் காலங்களில் ஒரு பெண் டீச்சரைப் பார்த்து ’பால்பண்ணை’ என்று சகமாணவர்கள் கூப்பிடுவார்கள்.

அவருடைய மார்பு பெரிதாக இருப்பதுதான் அதற்குக் காரணம். பெரிய மார்பில் நிறைய பாலிருக்கும். ’நிறைய பால்’ பண்ணையில்தான் இருக்கும். அத்தகைய பெரிய மார்பகங்களை கொண்டுள்ளதால் அவரைப் ’பால்பண்ணை’ என்று அழைப்பார்கள்.

அப்பெயரை நான் உச்சரிக்கவில்லையே தவிர பையன்கள் அப்படிச் சொல்லும் போது கலகலவெனச் சிரித்திருக்கிறேன்.

அதற்கும் முன் சிறுவயதில் ’சம்சாரம் அது மின்சாரம்’ திரைப்படத்தில் லட்சுமி நடித்திருக்கும் கேரக்டருக்கு பால்கட்டி கொண்டது என்று துன்பப்படுவதாக ஒரு காட்சி வரும்.

ஒரு விநாடி இப்படின்னா என்ன? என்று தோன்றி பின் மறந்த காட்சி அது.

பொதுவாக பெண்ணின் மார்பு என்பது ஆணுக்கு உச்சமான இன்பத்தைக் கொடுக்கும் விசயம். பார்க்கும் பெண்களின் மார்புகளில் எல்லாம் தன் விழிகளை பதிக்காமல் இருக்க அவனால் முடியவில்லை.

ஆனால் அதன் பின்னால் பெண்கள் அடையும் துன்பத்தைப் பற்றி எந்த அளவுக்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

மாதவிலக்கு, மென்ஸஸ் போன்ற விஷ்யங்கள் பற்றி கூட கொஞ்சம் விழிப்புணர்ச்சி வந்தாற்போல இருக்கிறது. ஆனால் இந்த மார்பினால் வரும் துன்பத்தைப் பற்றி மிகக் குறைந்த விழிப்பே இருக்கிறது.

சமீபத்தில் அமரந்தா எழுதிய ’பால்கட்டு’ என்றொரு கதையைப் படித்த பிறகுதான் எனக்கு இதன் வலி புரிந்தது.

கதைச் சுருக்கம் வருமாறு.

மத்திய தர வர்க்கத்துப் பெண்ணுக்கு,வேலைக்கு போயே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் பெண்ணுக்கு ‘பால்கட்டுதல்’ என்றப் பிரச்சனை இருக்கிறது.

மார்பகங்களில் பால் அதிகமாகக் கட்டிக்கொண்டு வலியைக் கொடுப்பதுதான் இதன் அம்சம்.

மிக அதிகமாக கட்டிக்கொள்ள டாக்டரிடம் போகிறாள். நர்ஸ் பம்ப் வைத்து பாலை எடுக்க முயற்சி செய்கிறார். வலியால் துடிக்கிறாள் இவள்.

இவள் வலியால் துடிப்பதைப் பார்த்த நர்ஸ் ‘யார்கிட்டயும் சொல்லாதம்மா” என்று தன் வாயால் மார்பில் வாயை வைத்து பாலை உறிஞ்சி துப்புகிறார்.

பின் பெண்ணின் முலைகளை ஆராய்ந்து, அதில் புண் இருப்பதாகவும், அதனால் பால் சரிவர வெளிவராமல் கட்டிக் கொள்வதாகவும் சொல்லி, அதற்கு ஒரு க்ரீம் கொடுக்கிறார்.

அந்த க்ரீமைத் தடவ வேண்டும். பின் குழந்தைக்குப் பாலைக் கொடுக்கும் முன் அதை சுத்தம் செய்ய வேண்டும். பின் மறுபடியும் தடவ வேண்டும் என்று நரக வாழ்க்கையை வாழ வேண்டியதாயிருக்கிறது.

காலை அலுவலகத்துக்கு வந்துவிட்டு மதியம் குழந்தைக்கு பால் கொடுக்கச் செல்வதற்குள் அது மார்பில் கட்டிக் கொண்டு கெட்டுப் போய் விடுகின்றது.

இவளுக்கு குழந்தை பால் குடித்தால் பாரம் குறையும் என்றிருக்கும் போது, குழந்தையோ கெட்டுப் போன பாலைக் குடிக்காமல் அழுகிறது.

மறுநாளில் இருந்து அலுவலகத்தின் பாத்ரூம் சென்று அவ்வப்போது மார்பை பிதுக்கி அவ்வப்போது பாலை எடுக்கிறாள்.

இப்படியாக பால்கட்டுதலால் அவள் படும் கஷ்டத்தை ஆசிரியர் கதை நெடுகச் சொல்கிறார்.

ஒருநாள் மாலை வீடு செல்லும் போது கதவு திறந்திருக்கிறது. வழக்கமாக இரவு லேட்டாக வரும் கணவன் அன்று சிக்கிரமே வந்திருக்கிறான். அதைப் பார்த்து மகிழ்ச்சி. அவனிடம் காப்பிக் குடிக்க வேண்டும் என்று கேட்க நினைக்கிறாள்.

ஆனால் மார்பு பாரம் தாங்க முடியாமல் குழந்தையை எடுத்து வராண்டாவிலேயே பால் கொடுக்கிறாள். குழந்தைக் குடிக்க ஆசுவாசப்படுகிறாள்.

ஆனால் கணவனோ உள்ளே போ உள்ளேப் போ போ என்று விரட்டுகிறான். இவள் வேறு வழியில்லாமல் உள்ளே வருகிறாள்.

வாசல்ல இருந்துதான் இதெல்லாம் செய்வியோ என்று கணவன் அவள் முகத்துக்கு நேரே கையை நீட்டி கடுத்து வருகிறான்.

அவள் தலை கிறுகிறுத்துப் போகிறது.

இப்படியாகக் கதை முடிகிறது.

இதைப் படித்த பிறகுதான் பால்கட்டுதல் என்பதில் இவ்வளவு பிரச்சனையா என்று எனக்குத் தெரிந்தது..

யாருமே எங்கேயுமே இதுமாதிரியெல்லாம் பிரச்சனை இருக்கிறது என்று சொல்லாமல் இருந்தால் ஆணுக்கு எப்படித் தெரியும்.

அப்படி ஆணுக்குப் பெண்ணின் வலிதெரிவது இப்போதைய வன்புணர்வு கலாச்சாரத்தில் முக்கிய தேவையாகும்.

என்னைக் கேட்டால் பிளஸ் டூ தமிழ் சிறுகதைகளில் ஒன்றாக அமரந்தாவில் “பால் கட்டு” சிறுகதையை வைக்க வேண்டும் என்பேன்.

ஒருவேளை இக்கதையைப் படித்தால்

பால் பண்ணை, இளநீ, காய், முலை, முயல் குட்டி என்றெல்லாம் மார்பகங்களை பேசுவதை கொஞ்சம் ஆண்களாவது தவிர்ப்பார்கள்.

அந்த கொஞ்ச ஆண்கள் பிற்காலத்தில் நிறைய ஆண்களாக ஆகலாம்.

பண்பட்ட சமூகத்தை அடைவதுதான் நம் நோக்கம் என்றால் இது போன்ற சிறுகதைகள் நிறைய வர வேண்டும்...

சபரிமலை கோவிலில்.. பெண் சுந்திரத்துக்கு போராடும் போராளிஸ் உத்தமி...






சபரிமலை மர்மம்...


சபரிமலையில் இருக்கும் தர்மசாஸ்தா கோவில் என்ற ஐயப்பன் கோவில் மற்ற கோவில்களில் இருந்து சற்று வேறுபட்டது.

கலசம் வைத்து முறைப்படி கும்பாபிசேகம் செய்யப்பட்ட  கோவில்களில் தீட்டு நாட்களில் மட்டும் தான் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

ஆனால் தர்மசாஸ்தா கோவிலிலோ செயல்படும் கருப்பையைக் கொண்ட பெண்கள் (10 -50 வயது வரை ஒரு பெண்ணின் கருப்பை மாதாமாதம் நிலவைப் போல வளர்ந்து தேயும்) அனுமதிக்கப்படுவதில்லை.

கோவில்களை நாம் பார்க்கும் கண்ணோட்டமே தவறு. காரணம் பெரும்பாலானோர் சிந்தனைக் குருடர்களே (மன்னிக்கவும்).

முகமதியரின் பார்வையில் கோவில்கள் என்பவை தங்கத்தைப் பதுக்கும் இடம்.

கிருத்துவ வெள்ளையரின் பார்வையில் கலைநயம் மிக்க சிலைகள் நிறைந்த இடம்.

இந்துக்களப் பொறுத்தவரை தங்களது துன்பங்களை கடவுளிடம் முறையிடும் இடம்.

முதலில் மாந்திரீகப் பார்வையில் கோவிலை அணுக வேண்டும்.

சரி விசயத்துக்கு வருவோம். கோவிலில் கருவறை உள்ளது, பெண்ணுக்கும் கருவறை உள்ளது. நிலவுக்கு வளர்பிறை தேய்பிறை உள்ளதைப்போல பெண்ணின் கருப்பைக்கும் உள்ளது.

கருப்பை, பூப்புக் குருதி, கருவில் வளரும் சிசு, தலச்சான் புள்ள மண்டையோட்டு மை, தொப்புள் கொடி போன்றவை அதீத மாந்திரீக ஆற்றல் கொண்டவை. பில்லி சூனியம் ஏவல் செய்யும் தீயவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் தான் இவை.

கோவில் கலசம் மற்றும் கும்பாபிசேகம் என்பவை சாஸ்தாக்கள் (சாத்தன்கள்) கருப்புகளிடம் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள உருவாக்கியவை.

மேலுள்ள பொருட்களின் தாக்கத்தை முறியடிக்கும் விதத்தில் பலமான ஒரு கட்டு தான் கும்பாபிசேகம்.

உச்சி வேளையிலும், சூரிய மற்றும் சந்திர கிரகணத்தன்றும் கோவில் கருவறை இழுத்து மூடப்படுவதையும் நாம் அறிவோம்.

இந்நேரங்களில் ஆண்களே உள்ளே செல்வதில்லை.

பெண்கள் சென்றால் என்ன ஆகும்?

North pole vs. North pole இரு காந்தங்களை வைத்தால் என்ன ஆகும்? எதிர் திசையில் தள்ளப்படும். இல்லையா?

அது போல கோவில் கருவறையில் மீது உள்ள கலசத்தில் இருக்கும் கட்டு, பெண்ணின் கருவறையில் நடக்கும் இயக்கத்தை எதிர்க்கும்.

எதிர் திசையில் இயங்கும் இரு சக்திகளால் பாதிக்கப்படுவது என்னவோ பெண்கள் தான்.

அதுவும் சாத்தன்களுக்கு எல்லாம் தலைவனான தர்மசாஸ்தாவின் கோவில் கட்டு என்பது மிகவும் சக்தி வாய்ந்தது.

அது பெண்களின் கருப்பையையும் கரு முட்டையையும் பாதிக்கும். நம்பினால் நம்புங்கள். இல்லையெனில், போலிப் பெண்ணியவாதிகள் அனுபவித்துப் பாடம் கற்றுக் கொள்ளுங்கள்.

குடும்பப் பெண்கள் கட்டு பலமாக உள்ள கோவிலுக்குச் செல்வதை தவிர்த்து விடுங்கள்...

திராவிட சுடுகாடு...


விரட்டி அடித்தது கேரள அரசு...


கொச்சியை சேர்ந்த ரெஹானா பாத்திமா என்ற பெண்ணை ஐயப்பன் கோவிலுக்குள் அனுமதிக்காமல் விரட்டி அடித்தது கேரள அரசு..




அதுசரி, தொடையழகை காட்டி கோடிக்கணக்கான பேர் ரசிக்கும் படி போஸ் கொடுக்கும் ரெஹானா பாத்திமாவுக்கும் ஐயப்பன் கோவிலுக்கும் என்ன சம்பந்தம்...?




ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல முயலும் சமூக போராளி முகமூடியிலுள்ள பெண்கள் இவர்கள் தான்...

ஒவ்வோரு மனிதர்களின் உடலிலும் ஒளிவட்டம் இருக்கும்...


அந்த ஒளிவட்டம் வெவ்வெறு நிறத்தில் இருக்கிறது.

ஞானிகள் – முனிவர்கள் – மகான்கள் தியானம் செய்து அந்த ஒளியை வலுப்படுத்தி சக்தியானவர்களாக மாறி விடுகிறார்கள்.

அதிகமாக மகான்களின் ஒளிவட்டம் வெள்ளை நிறத்தில் இருக்கும் என்கிறது யோக சாஸ்திரம்.

அத்துடன் வெள்ளை நிறத்திற்கு மற்றவர்களை அடக்கியாலும் சக்தியும் உண்டு.  அதனால் தான் அரசியலில் இருப்பவர்கள் அதிகம் வெள்ளை நிறத்தை உபயோகிக்கிறார்கள்.

கால்குலஸ் என்னும் கணித வகையும், புவி ஈர்ப்பு விசையை கண்டறிந்து சொன்ன ஸர் ஐசக் நியூட்டன்தான் வெள்ளை ஒளிக்குள்
ஏழு வண்ணங்கள் இருக்கிறது என்று தன் ஆராய்ச்சியில் கண்டுபடித்து உலகத்திற்கு சொன்னார்.

இவர் விஞ்ஞானத்தில் அதிபுத்திசாலி என்றாலும் இவர் வாழ்வில் வேடிக்கையான சம்பவம் பல உண்டு.

ஒருநாள் ஐசக் நியூட்டன் தன் வீட்டின் கதவில் பெரிய ஓட்டையும் அதன் பக்கத்திலேயே சிறிய ஒட்டையும் போட்டார்.

இதை கண்ட நியூட்டனின் நண்பருக்கு ஒன்றும் புரியாமல், “எதற்காக பெரிய ஒட்டையின் பக்கத்திலேயே சிறிய ஒட்டையும் போடுகிறீர்கள்.?“ என்றார்.

அதற்கு நியூட்டன், “நான் பூனை வளர்க்கிறேன். அது ஒரு இடத்தில் உட்காராமல் வெளியே செல்வதும் வருவதுமாக இருக்கிறது. அந்த பூனைக்காக இருபத்தி நான்கு மணிநேரமும் கதவை திறந்து வைத்திருக்க முடியாது இல்லையா.? அதனால் தான் அது எந்த நேரமும் வெளியே சென்று வர, கதவில் ஒட்டைகள் போட்டேன்.“ என்றார்.

அதற்கு நண்பர், “அது சரி. அதற்கு ஏன் கதவில் இரண்டு ஓட்டை போட்டீர்கள்.?“ என்றார்.

அந்த பூனையுடன் ஒரு குட்டி பூனையும் இருக்கிறது. பெரிய ஓட்டையில் பெரிய பூனையும், சின்ன ஓட்டையில் குட்டி பூனையும் சென்று வருவதற்கு தான்.? என்றார் நியூட்டன்.

உன் புத்திசாலிதனத்திற்கு ஒரு அளவில்லையா…? பெரிய ஓட்டையிலேயே இரண்டு பூனைகளும் போய் வருமே. என்றார் நண்பர்.

நியூட்டனை போல் அதிமேதாவியாக இருப்பவர்களும் சில நேரத்தில் மூலை மந்தமாக வேலை செய்யும். அதனால் தான் நம் முன்னோர்கள் சொன்னார்கள், யானைக்கும் அடிசறுக்கும். அதிகம் சிந்தித்தால் மூலை சூடாகி குழும்பி விடும். என்று.

ஒரு பிரச்சனையை சமாளிக்க வேண்டும் என்றால் பதட்டத்தில் எப்படி சமாளிப்பது என்பதை மறந்து, அந்த சிறு பிரச்சனையை பூதகரமாக்கி விடுவோம். பிறகு, இதை இப்படி கையாண்டு இருக்கலாமோ ? என்று சிந்திப்போம்.

இப்படிபட்டவர்கள் நவரத்தினங்களில் ஒன்றான முத்தை அணிந்தால் நல்ல புத்தி கூர்மையை அடைவார்கள். சிறந்த யோகத்தையும் பெறுவார்கள். உடல் உஷ்ணத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் முத்துக்கு உண்டு. சமுதாயத்தில் நல்ல மதிப்பை ஏற்படுத்தும் ரத்தினம் முத்து. செல்வத்தை பெருக்கும். பண பிரச்சனை தீர்க்கும். மற்றவர்களின் உதவியை சுலபமாக பெற வைக்கும் ஆற்றலும் முத்துக்கு இருக்கிறது.

முத்தை அணியும் முன் உங்கள் ஜாதகத்தை ஜோதிடரிடம் காட்டி, உங்களுக்கு முத்து ரத்தினம் சாதகமாக இருக்குமா?  என்று ஆலோசனை பெற்ற பிறகு அணிந்தால் இன்னும் யோகம் ஏற்படும். 

ஜாதகம் இல்லாதவர்கள், பிறந்த தேதி இரண்டோ அல்லது தேதி – மாதம் – வருடம் கூட்டினால் இரண்டோ வந்தால் முத்தை அணியலாம்.

உதாரணத்திற்கு - 2 – 11 -29 போன்ற தேதிகளில் பிறந்தவர்கள் முத்தை அணியலாம். 8.4.1970 என்றால், 8 + 4 + 1 + 9 + 7 + 0 =  29 வருகிறது. இதில் 2 + 9 = 11 வரும்.  1+1=2 ஆக மொத்தம் 2. 

இது உயிர் எண். இதன் ஆதிக்கம் சந்திரன். சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் முத்தை அணியலாம்...

பாஜக மோடியின் சாதனை...


ஆண்களுக்கு ஏற்ற அழகு பேஸ் மாஸ்க்...

பெண்களை விட ஆண்களுக்குத்தான் வெளியில் அலைச்சல் அதிகம். அதிலும் மார்கெட்டிங் வேலைக்கு செல்பவர்களுக்கு முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கவேண்டியது அவசியம். ஆனால் வெயில் காலத்தில் ஒருமுறை வெளியில் சென்று வந்தாலே முகம் கருத்துவிடும். எனவே முக அழகை புத்துணர்ச்சியோடு பாதுகாக்க வீட்டிலேயே பேஸ் மாஸ்க் போடுங்களேன்.

வெள்ளரிக்காய் மாஸ்க்..

வெயில் காலத்தில் வெள்ளரிக்காய் சிறந்த ஊட்டச்சத்து உணவாகவும், அழகுப் பொருளாகவும் பயன்படுகிறது. இது முகத்தை இறந்துபோன செல்களை நீக்கவும், முகத்திற்கு தேவையான எண்ணெய் பசையை தக்கவைக்கவும் உதவுகிறது. வெள்ளரிக்காயை நன்றாக மைய அரைத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் அப்ளை செய்யவும். 10 நிமிடம் ஊறவைத்து முகத்தை குளித்த நீரில் கழுவவேண்டும். வாரம் இருமுறை இந்த மாஸ்க் அப்ளை செய்தால் வெயிலால் முகம் கருக்காது. புத்துணர்ச்சியோடு இருக்கும். வெள்ளரிக்காயை தயிருடன் கலந்தும் மாஸ்க் போடலாம்.

தேன், முட்டை..

தேன் சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுகிறது. ஆப்பிள் சருமத்தில் உள்ள தேவையற்ற அழுக்குகளை நீக்குகிறது. ஒரு ஸ்பூன் தேனுடன், முட்டை வெள்ளைக்கரு, ஆப்பிள் கூழ் ஆகியவை கலந்து முகத்தில் அப்ளை செய்யலாம். 15 முதல் 20 நிமிடம் வரை இந்த கலவையை ஊறவைத்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ முகம் புத்துணர்ச்சியாகும்.

தக்காளி பழ மாஸ்க்..

ஒரு சில ஆண்களுக்கு முகத்தில் எண்ணெய் வடியும். அவர்களுக்கு தக்காளிப்பழம் எளிதான சிறந்த அழகு சாதனப் பொருளாக விளங்குகிறது. நன்கு கனிந்த தக்காளிப் பழத்தை தோல் நீக்கி அதனை பிசைந்து கொள்ளவும். அதில் சிறிதளவு பால் கலந்து பேஸ்ட் போல செய்து முகத்திற்கு அப்ளை செய்யவும். இதனால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு முகம் பளிச் என்று ஆகும்.

வேப்பிலை மாஸ்க்..

வேப்பிலை சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. எண்ணெய் பசை சருமத்திற்கு ஏற்ற மருந்துப் பொருளாகும். இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கும். வேப்பிலையை பறித்து வெதுவெதுப்பான நீரில் இரவு முழுவதும் ஊறவைக்கவும். காலையில் அந்த இலையை மைய அரைத்துக்கொண்டு அதனுடன் சில துளிகள் பால் விட்டு பேஸ்ட் போல செய்யவும். இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் ஊறவைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ முகம் பொலிவு பெறும்.

ஆண்களுக்கு ஏற்ற அசத்தலான செலவில்லாத பேஸ் மாஸ்க் இது வாரத்திற்கு இரண்டு முறை உபயோகிக்கலாம். வெயில் காலத்திற்கு ஏற்றது...