சபரிமலையில் இருக்கும் தர்மசாஸ்தா கோவில் என்ற ஐயப்பன் கோவில் மற்ற கோவில்களில் இருந்து சற்று வேறுபட்டது.
கலசம் வைத்து முறைப்படி கும்பாபிசேகம் செய்யப்பட்ட கோவில்களில் தீட்டு நாட்களில் மட்டும் தான் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
ஆனால் தர்மசாஸ்தா கோவிலிலோ செயல்படும் கருப்பையைக் கொண்ட பெண்கள் (10 -50 வயது வரை ஒரு பெண்ணின் கருப்பை மாதாமாதம் நிலவைப் போல வளர்ந்து தேயும்) அனுமதிக்கப்படுவதில்லை.
கோவில்களை நாம் பார்க்கும் கண்ணோட்டமே தவறு. காரணம் பெரும்பாலானோர் சிந்தனைக் குருடர்களே (மன்னிக்கவும்).
முகமதியரின் பார்வையில் கோவில்கள் என்பவை தங்கத்தைப் பதுக்கும் இடம்.
கிருத்துவ வெள்ளையரின் பார்வையில் கலைநயம் மிக்க சிலைகள் நிறைந்த இடம்.
இந்துக்களப் பொறுத்தவரை தங்களது துன்பங்களை கடவுளிடம் முறையிடும் இடம்.
முதலில் மாந்திரீகப் பார்வையில் கோவிலை அணுக வேண்டும்.
சரி விசயத்துக்கு வருவோம். கோவிலில் கருவறை உள்ளது, பெண்ணுக்கும் கருவறை உள்ளது. நிலவுக்கு வளர்பிறை தேய்பிறை உள்ளதைப்போல பெண்ணின் கருப்பைக்கும் உள்ளது.
கருப்பை, பூப்புக் குருதி, கருவில் வளரும் சிசு, தலச்சான் புள்ள மண்டையோட்டு மை, தொப்புள் கொடி போன்றவை அதீத மாந்திரீக ஆற்றல் கொண்டவை. பில்லி சூனியம் ஏவல் செய்யும் தீயவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் தான் இவை.
கோவில் கலசம் மற்றும் கும்பாபிசேகம் என்பவை சாஸ்தாக்கள் (சாத்தன்கள்) கருப்புகளிடம் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள உருவாக்கியவை.
மேலுள்ள பொருட்களின் தாக்கத்தை முறியடிக்கும் விதத்தில் பலமான ஒரு கட்டு தான் கும்பாபிசேகம்.
உச்சி வேளையிலும், சூரிய மற்றும் சந்திர கிரகணத்தன்றும் கோவில் கருவறை இழுத்து மூடப்படுவதையும் நாம் அறிவோம்.
இந்நேரங்களில் ஆண்களே உள்ளே செல்வதில்லை.
பெண்கள் சென்றால் என்ன ஆகும்?
North pole vs. North pole இரு காந்தங்களை வைத்தால் என்ன ஆகும்? எதிர் திசையில் தள்ளப்படும். இல்லையா?
அது போல கோவில் கருவறையில் மீது உள்ள கலசத்தில் இருக்கும் கட்டு, பெண்ணின் கருவறையில் நடக்கும் இயக்கத்தை எதிர்க்கும்.
எதிர் திசையில் இயங்கும் இரு சக்திகளால் பாதிக்கப்படுவது என்னவோ பெண்கள் தான்.
அதுவும் சாத்தன்களுக்கு எல்லாம் தலைவனான தர்மசாஸ்தாவின் கோவில் கட்டு என்பது மிகவும் சக்தி வாய்ந்தது.
அது பெண்களின் கருப்பையையும் கரு முட்டையையும் பாதிக்கும். நம்பினால் நம்புங்கள். இல்லையெனில், போலிப் பெண்ணியவாதிகள் அனுபவித்துப் பாடம் கற்றுக் கொள்ளுங்கள்.
குடும்பப் பெண்கள் கட்டு பலமாக உள்ள கோவிலுக்குச் செல்வதை தவிர்த்து விடுங்கள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.