19/10/2018

தமிழினத்தின் உண்மையான தலைவர் மேதகு. வே. பிரபாகரன் மட்டுமே...


700 கோடி (1988)... இந்திய - ஈழப்போர் உச்சநிலையை அடைந்திருந்த காலகட்டம்..

தலைவர் சொற்ப போராளிகளுடன் மணலாறுப் பகுதியில் இருந்தபடி இந்தியப்படைக்கு எதிரான கரந்தடி (கொரில்லா)ப் போரை தொடர்ந்து நடத்திவந்தார்..

கர்னல்.வர்மா என்ற ஒரு 'ரா' உளவுத்துறை அதிகாரி புலிகளின் மூத்த உறுப்பினர்களைத் தொடர்புகொண்டு பேசினார்..

பல கோடி ரூபாய் பணமும் படையும் செலவளித்து நாங்கள் இந்தப் போரை நடத்திவருகிறோம். இத்தனை அழிவும் உயிர்ச்சேதமும் தேவையில்லாதது..

அந்த பணத்தை ஏன் நீங்களே பெற்றுக் கொள்ளக் கூடாது? என்று நேரடியாக பேரத்திற்கு அழைத்தார்.

மக்கள் புணர்வாழ்வுக்கு 500கோடி தருவதாகவும் விடுதலைப் புலிகளுக்கு 200 கோடி தருவதாகவும் ஆயுதத்தை கீழே போட்டுவிட்டு பணத்தைப் பெற்று கொள்ளுமாறும், புலிகளுக்கு பதவிகளும் பாதுகாப்புக்கென்று தனிப்படை வைத்துக் கொள்ள இசைவும் தருவதாகவும் மேலும் பல சலுகைகளையும் தருவதாகவும் கூறினார்..

ஒத்துவர மறுத்தால் முற்றாக அழிய நேரிடும் என்று மிரட்டினார்..

அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி ஆன்டன் பாலசிங்கத்தை பெங்களூரிலிருந்து ஈரோட்டுக்கு வரவழைத்து போரைக் கைவிடுமாறும், தங்கள் கட்சி தடை செய்யப்பட்ட போது 'திராவிட நாடு' கொள்கையை தாங்கள் கைவிட்டதையும் கூறி பேசிப்பார்த்தார்..

அதனால்தான் இன்று, 25வருட பதவி கிடைத்து, அலைக்கற்றை ஊழல் உட்பட பல்வேறு வழிகளில் கொள்ளையடித்து, 200 தலைமுறைக்கு தேவையான சொத்து சேர்த்துவைத்துள்ளார்..

தமிழகத் தமிழர் எத்தனை கொடுப்பினையற்றவர்கள்?

பிறந்ததோ ஒரு பிரபாகரன் அவரும் ஈழமே போதும் என்று நின்றுவிட்டார்..

தமிழக மக்கள் இந்திய நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி கருணாநிதி அரசுக்கு நெருக்கடி முற்றிக் கொண்டு வந்தபோதும் அவர் தமிழகத்திலிருந்து புலிகளுக்கு செல்லவிருந்த சிறுசிறு உதவிகளையும் தடுத்தார்.

அந்தக் காலம் நூறாயிரம் (ஒரு லட்சம்) இந்தியப் படையினர் தாங்கிகளுடனும் (tank) வானவூர்திகளுடனும், போர்க் கப்பல்களுடனும் புலிகளைச் சுற்றி வளைத்திருந்த காலம்..

அப்போது புலிகள் வெறும் 2000பேர், தலைவர் ஆயுதங்களை வேறு ஒப்படைத்து விட்டார். பாதுகாப்பிற்கென கமுக்கமாக கொஞ்சம் ஆயுதங்களை மறைத்து வைத்திருந்தார்..

திலீபன் உண்ணாநோன்பிருக்கும் முன் மக்களிடம் சென்று பரப்புரை செய்தபோது அவசியம் ஏற்பட்டால் நாங்கள் மீண்டும் ஆயுதம் ஏந்திப் போராடுவோம் என்றே பரப்புரை செய்தார்..

தலைவரின் முன்னெச்சரிக்கை தான் புலிகள் மீண்டும் ஆயுதம் தூக்க நேரிட்டபோது அவர்களுக்கு வலுசேர்த்தது..

இந்தியம் கொண்டு வந்த ஆயுத தளவாடங்களானது, கொரியப் போருக்கு பிறகு அததனை அதிகமான ஆயுதத் தளவாடங்கள் கடல்வழி கொண்டு வரப்பட்ட ஒன்றாக வரலாற்றில் பதிவாகியுள்ளது..

கப்பற்படையிடம் அப்போது 17 'அலைஜ்' வானூர்திகள் இருந்தன..

அத்தனையும் புலிகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டன, புலிகளுக்கு ஆயுதம் கொண்டுவந்த படகுகளை அவைகள் மூழ்கடித்துவிட்டன..

மணலாற்றி களமாடும் புலிகளுக்கு உணவும் தண்ணீரும்கூட தட்டுப்பாடாக இருந்தகாலம்..

ஒருநாளைக்கு ஒரு குவளை (டம்ளர்)க் கஞ்சிதான் தலைவர் உட்பட அந்தக்காட்டில் இருந்த 27பேருக்கும் கிடைத்தது..

ஈழத்தின் மூத்த அரசியல்வாதிகளும் தமிழக மூத்த அரசியல்வாதிகளும்கூட போரைக் கைவிடுமாறு தலைவருக்கு வேண்டுகோள் விடுத்தனர்..

காட்டுக்குள் சென்று பேச்சுவார்த்தை நடத்த 'குமரன் பத்மநாபன் (கே.பி)' சென்றது..

புலிகளின் மூத்த உறுப்பினர் பலரும் கூட தற்போதைக்கு பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறும் இந்தியப்படை வெளியேறியபின் அப்பணத்தின் மூலம் பெருமளவு ஆயுதம் வாங்கி மிகப்பெரிய அளவில் போராட்டத்தைத் தொடங்கலாம் என்றும் கூறினர்..

ஆனால் தலைவர் அதை ஏற்கவில்லை..

தலைவர் பண்பை நன்கறிந்திருந்த இந்தியப்படையினர் கணக்கில்லாமல் பொதுமக்களைக் கொன்று குவித்தனர்..

ஈழத் தலைவர் பலரும் கூட பொதுமக்கள் இழப்பைச் சுட்டிக்காட்டி புலிகளைச் சரணடையுமாறு கூறினர்..

தமிழகத்தில் ம.பொ.சி கூட வானொலியில் புலிகளை சரணடைய வலியுறுத்தினார்..

அதுவரை 5000 பொதுமக்கள் பலியாகியிருந்தனர்..

200 புலிகளும் 500 இந்தியப் படையினரும் பலியாகியிருந்தனர்..

யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறியோர் நூறாயிரம் (லட்சம்) பேர்..

சிறையிலடைக்கப்பட்டோர், காணாமல் போனோர் கணக்கேயில்லை..

400 தமிழ்ப் பெண்கள் இந்திய படையால் வல்லுறவுக்கு ஆளாகிய செய்திகள் வந்திருந்தன, ஊரடங்கு உத்தரவால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தனர்.

தலைவர் தொடர்ந்தும் உறுதியாக இருந்தார்..

குழுவினர் கடைசியாக அந்த மணலாற்றுப் பகுதியை விடுத்து வேறு பாதுகாப்பான பகுதிக்கு தலைவர் மாறவேண்டும் என்று கூறினர்..

இது பண்டார வன்னியன் களமாடிய மண், இங்கேயே நான் தொடர்ந்து போராடுவேன், அல்லது வீரமரணம் அடைவேன்..

நான் இறந்த பிறகு இயக்கத்தையும் இலக்கையும் மொத்தமாகவோ சில்லரையாகவோ எவருக்கும் நீங்கள் விற்கலாம் என்று நெத்தியடியாகக் கூறி கேபி குழுவை அனுப்பி வைத்தார்..

பணத்தை வாங்காத தலைவர் பிரேமதாச என்ற சிங்களர் ஆயுதம் தந்தபோது மறுக்காமல் வாங்கிக் கொண்டார்..

அவர் விலைபோகவும் இல்லை, விமர்சனத்தைத் தூண்டும் வாய்ப்புகளை நழுவவிட்டதும் இல்லை..

எனக்கு ஒரு கேள்வி?

அப்போது புலிகள் வெறும் 2000பேர், அவர்கள் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் மட்டும் இருந்தது. அதற்கே அத்தனை பெரிய விலை கிடைத்த போது..

2009 ல் புலிகள் 30,000பேர், இலங்கையின் மூன்றில் ஒரு பங்கு புலிகள் கட்டுப்பாட்டில் இருந்தது..

அப்போது எத்தனை பெரிய விலை கிடைத்திருக்கும்?

ஆனால் இறுதிவரை யாருக்கும் எதற்கும் விலை போகாமல் தன் இனத்தின் நலனுக்காக மட்டுமே போராடியவர் தான் நம் தலைவர் பிரபாகரன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.