08/11/2018

பாஜக மோடியால் பல சாமானியன் இறந்த தினம்...


1)15 லட்சம் வேலைவாய்ப்பு இழப்பு.

2)15 கோடி தின தொழிலாளிகள் சம்பள பிரச்சனை, வேலையில்லாமையால் 2 மாதம் அவதிப்பட்டது.

3)1.5% ஜிடிபி இழப்பு அதாவது கிட்டத்தட்ட 2.5 லட்சம் கோடி இழப்பு.

4)100 அப்பாவி பொது மக்கள் உயிரிழப்பு.

5) கருப்பு பணம் ஒழிப்பா ? : 99.3% சதவீத பணம் மீண்டும் வங்கிகளுக்கே திரும்பியது. இத்தனை காலம் பதுக்கிவைக்கப்பட்ட பணம் மீண்டும் வெள்ளையாக்கபட ஒரு வாய்ப்பாக அமைந்தது.

6) Digital India என்ற சப்பைக்கட்டு , முன் எப்போதும் இல்லாத அளவு பண சுழற்சி அதிகரித்துள்ளது. 18.5 லட்சம் கோடியாக சுழற்சியில் உள்ள பணம் அதிகரிப்பு . இது கிட்டத்தட்ட டீமானிடேஷன் முன்னை 37% அதிகம். அக்டோபர் 2016ல் ஏடிஎம் மூலம் எடுக்கப்பட்ட பண அளவு 2.54 லட்சம் கோடி, ஆகஸ்ட் 2018 ல் அது 2.75 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அக்டோபர்  தீபாவளி மாதம் என்பதால் அக்டோபர் 2018 அளவு இதைவிட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

7) கள்ளப்பணம் என்ற கண் துடைப்பு. டிமானிடேஷனுக்கு முந்தைய மூன்று வருட கள்ளபணம் கண்டுபிடிப்பு வெறும் 63 கோடி. மக்களிடமிருந்து மொத்தமாக கொடுக்கப்பட்ட பணத்திலும் பெரிய அளவில் கள்ளப்பணம் சுழற்சியில் இருப்பதாக தெரியவில்லை. டிமானிடேஷன் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட கள்ளப்பணம் 11.23 கோடி மட்டுமே ! இதை விட பெரிய கொடுமை சிப் எல்லாம் இருப்பதாக பக்தாள் அளந்த புதிய 2000 தாள்களை போன்ற கள்ளப்பணம் உருவாக துவங்கிவிட்டதாக ஆர்பிஐ சொல்லியுள்ளது.

8) டேரக்ட் டேக்ஸ் - நேரடி வருமான வரி - இது மற்றொரு பொய் " NIPFP's Rathin Roy, a member of the PM's Economic Advisory Council, has put it, "the growth and buoyancy of direct tax revenue in the 2014-17 period is lower than in any sub-period this millennium."" அதாவது ஐடி ரிட்ரன் செய்தோர் எண்ணிக்கை கூடியிருந்தாலும் அது 2014-17 வருடங்களுக்கு முந்தைய பத்து வருட நேரடி வருமான வரி சதவீத வளர்ச்சி அளவை விட தற்போதைய வளர்ச்சி விகிதம் குறைவு தான்.

9) பொது மக்களின் வங்கிகளின் மீதான நம்பிக்கை இழப்பு - தன்னுடைய சொந்த பணம் வங்கியில் இருக்கும் தன்னால் அதை எப்போது வேண்டுமானாலும் உபயோகப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உடைக்கப்பட்டது. இன்று முன் எப்போதும் இல்லாத அளவு ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சிறு அளவிலாவது பணமாக அவசர தேவை என்று கையில் வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தியா முழுதும் இவ்வாறு ஒவ்வொரு கையில் பணம் வைக்க வங்கிக்கான பணம் முன் எப்போதும் இல்லாத அளவு குறைந்திருக்கிறது.

10) அருண் ஜெட்லி சொன்னது இது : டிமானிடேஷனால் மக்கள் பணமாக கையில் வைத்திருக்காமல் சேமிப்பாக அதிகரிப்பார்கள் ! நடந்தது என்ன ? ஆர்பிஐ வெப்சைட்டில் உள்ள "சேவிங்ஸ் பை அவுஸ்வோல்ட்" சராசரி 7.1% இது முந்தைய ஆண்டுகளை விட 50% குறைவு.

டிஜிட்டல் டிரான்சாக்‌ஷன் எனப்படும் இணைய பணபரிமாற்ற வர்த்தகம் அதிகரித்திருந்தாலும் இது பெரும்பாலும் நடுத்தர, உயர் வகுப்பு மக்களிடமிருந்தே வந்துள்ளது அவர்கள் புது பரிமாற்ற முறைகளை தொடர்ந்து வரவேற்பவர்களே. 80% மக்கள் தொகையின் ஒவ்வொரு பரிமாற்றமும் இன்றும் பணமாக தான் இருக்கிறது. அதை மாற்ற டிமானிடேஷன் வழியல்ல எளிதான, என்றும் பயன் தரக்கூடிய, கட்டணமற்ற பண பரிமாற்ற வழியே ஆகும். அதற்கான முன்னேற்பாடுகளை அரசு செய்துள்ளதா ??? இல்லை ! நாட்டின் மிக பெரிய அரசு வங்கியான எஸ்பிஐ மட்டும் 42 லட்சம் வங்கி கணக்குகளை போதுமான பேலன்ஸ் இல்லை என்ற ஒற்றை காரணத்திற்காக ஏப்ரல் 2017 முதல் மார்ச் 2018 வரை மூடியுள்ளது. பேலன்ஸ் வைத்து வங்கியின் மூலம் பணப்பரிமாற்றம் செய்வது எத்தனை பேரால் முடியும் ? அன்றாட வரவும் செலவும் சரியாக இருப்பது எத்தனை இடத்தில் தெரியுமா ? அது மட்டுமல்ல எவ்வளவு பணம் எடுக்கலாம், எத்தனை முறை இலவசமாக எடுக்கலாம் என்றெல்லாம் கணக்குகள் இருக்கையில் எல்லோருக்கும்/ எல்லா தருணத்திற்கும் வங்கி என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது.

" Economics is the science which studies human behavior as a relationship between ends and scarce means which have alternative uses "

பொருளாதார மேலாண்மை பற்றி புரிதலுக்கு இதை விட சிறந்த பதில் இருக்க முடியாது.

டிமானிடேஷன் என்ற பெயரில் நடந்த மாபெரும் தவறு டிஜிட்டல் இந்தியாவிற்கான விடையல்ல, நேரடி வருமான அதிகரிப்பிற்கான வழியல்ல, கள்ளப்பணம் கண்டெடுக்க கொண்டு வரப்பட்ட திட்டமல்ல,

இதைப்பற்றிய சிறு புரிதல் இருந்தால் கூட சங்கிகள் 3000 கோடி , 4000 கோடி, 2000 கோடி விரயத்தில் அமைக்கப்படும் ராமர் (பிஜேபி உத்திர பிரதேசம்ங) , சிவாஜி (பிஜேபி மகாராஷ்டரா ) , பட்டேல் (பிஜேபி குஜராத்)  சிலைகளுக்கு காரணங்கள் பேச மாட்டார்கள்.

இவர்களுக்கு பொருளாதாரமும் புரிவதில்லை, சமூக முன்னேற்றத்திலும் அக்கறையில்லை.

ஒரு மாபெரும் தோல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தி மக்களை அவதிக்குள்ளாக்கி அதை ஒப்புக்கொள்ளும் தைரியம் கூட இல்லாத அரசு இது. இந்த திட்டத்தின் மாஸ்டர் மைன்ட் குருமூர்த்தி இன்று அரசால் ஆர்பிஐயில் டேரக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அரசின் அடுத்த அழிவு திட்டமாக ஆர்பிஐயை தன் சொல்லுக்கு கட்டுப்படுத்த முற்படுவதும், 3.6 லட்சம் கோடி ரூபாயை ஆர்பிஐ இருப்பியில் இருந்து அரசிற்கு மாற்றவும் அழுத்தம் தரப்படுகிறது. ஒரே நல்ல விடயம்  சென்ற முறை போல் இல்லாமல் மொத்த ஆர்பிஐயும் அரசின் முட்டாள்தனத்திற்கு அடி பணியாமல் எதிர்த்து நிற்பதே.

இன்று வந்த செய்தி : வேலையில்லா திண்டாட்டம் இரண்டு வருட அதிக அளவாக 6.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. வேலைதேடும் மக்கள் தொகை 3 கோடியாக அதிகரித்துள்ளது. வேலையில் உள்ள மக்கள் தொகை 40.7 கோடியில் இருந்து 39.7 கோடியாக குறைந்துள்ளது அதாவது வேலைவாய்ப்பு பெருகுவதற்கு பதிலாக 1 கோடி மக்கள் வேலை இழந்துள்ளார்கள்...

பாமக அன்புமணி ராமதாஸை காப்பி அடித்த நடிகர் விஜய்...


பாஜக மோடி மஸ்தான்கள்...


அரசிற்கும் ஆர்பிஐக்குமான பிரச்சனை மேலும் வலுத்து வருகிறது.

தற்போதைய நிலையில் ஆர்பிஐயின் கையிருப்பு கிட்டத்தட்ட 9.6 லட்சம் கோடி.  எதிர்பார்க்காத தேவை நிதி, தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சி கையிருப்பின் தற்போதைய மதிப்பு போன்ற அடிப்படையில் ஆர்பிஐயின் தற்போதைய கையிருப்பு இது.

ஒவ்வொரு வருடமும் அரசாங்கத்திடம் தங்கள் வருவாயில் இருந்து டிவிடன்ட் தருவது உண்டு. சென்ற வருடம் 50000 கோடி ரூபாய் மத்திய அரசாங்கத்திற்கு ஆர்பிஐ தந்தது.

தற்போதைய பிரச்சனை என்ன தெரியுமா ? கையிருப்பில் உள்ள 9.6 லட்சம் கோடி ரூபாயில் மூன்றில் ஒரு பங்கான 3.6 லட்சம் கோடி ரூபாயை ஆர்பிஐ தன்னிடம் தர வேண்டும் என்று மோடி அரசாங்கம் வற்புறுத்துவதே.

ஆர்பிஐ இது முடியாது என்று சொல்கிறது. காரணம் ஆர்பிஐயின் மூலம் கிடைக்கும் டிவிடன்ட் மற்றும் இதர அரசாங்க வருவாயின் மூலமே நீங்கள் உங்கள் செலவுகளை சமாளிக்க வேண்டும். அப்படி அல்லாது இது போன்ற ரீவேல்யூஷன் நிதியை நீங்கள் வாங்குவது நிதி பராமரிப்பில் ஒழுங்கீனத்தை ஏற்படுத்தும் மேலும் அரசாங்க நிதி மேலாண்மை மீதான கேள்வியை எழுப்பும் என்று சொல்கிறது. அது போன்றே அர்ஜென்டினாவில் மத்திய வங்கி அரசாங்கத்திடம் தர மிக பெரிய நிதி நெருக்கடி ஏற்பட்டது அது போல் இந்தியாவில் நடக்க கூடாது என்று சொல்கிறது.

ஜிஎஸ்டி, பெட்ரோல் விலை என பல நிலைகளில் கிடைத்த வருவாய் மூலமாக மத்திய அரசை நடத்த தெரியாமல், பண ஏய்ப்பு செய்துவிட்டு நாடு விட்ட பலர் ஓட அமைதி காத்துவிட்டு நமது ஆர்பிஐ நிதி இருப்பிலும் கைவைக்க பார்க்கிறது மோடி அரசு.

அதன் தொடர்ச்சியே தற்போதைய மொத்த ஆர்பிஐ குழுவையும் பதவி விலக அழுத்தம் தருவது....

https://indianexpress.com/article/india/govt-wants-rs-3-6-lakh-crore-from-rbi-a-third-of-its-reserves-central-bank-says-no-5435504/

நகரமயமாக்கல் மோகத்துல ஊறிப்போன மக்கள் எதுக்கும் தடுப்பூசி கடை வைங்க நல்லா அடுத்தவன் குருதியைக் குடிச்சு வாழலாம்...


திமுக - காங்கிரஸ் - விசிக துரோகிகளை நினைவில் கொள் எம் தமிழினமே...


சர்கார் பட பேனரை கிழித்த வாலிபர் மர்ம மரணம்.. ரசிகர்களால் அடித்து கொலையா போலீசார் விசாரணை...


வேலூர் காவேரிபாக்கம் அருகே உள்ள ஈளச்சேரியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் சென்னையில் கால் டாக்சி டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று தீபாவளியை முன்னிட்டு வெளியான சர்கார் பட பேனர்கள் ஊரெங்கும் வைக்கப்பட்டிருந்தது.

அதுபோல மணிகண்டன் வீட்டின் முன்பும் வைக்கப்பட்டு இருந்தது. இதனை மணிகண்டன் கிழித்து எறிந்து விட்டதாக கூறப்படுகிறது.

 இது தொடர்பாக மணிகண்டனுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் வாக்குவாதம் மற்றும் அடிதடி சண்டை நடந்துள்ளது. விஜய்  ரசிகர்கள் மணிகண்டனை தாக்கி  உள்ளனர்.

இதனால் மணிகண்டனை அவனது உறவினர்கள் வீட்டின் ஒரு அறைக்குள் அடைத்து வைத்தனர். சிறிது நேரம் கழித்து திறந்து பார்த்தபோது மணிகண்டன் தூக்கி பிணமாக தொங்கினார்.

அவரே அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது மற்றவர்கள் அடித்து தூக்கில் தொங்க விட்டார்களா என்பது குறித்து  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்...

சின்ன பசங்களிடம் வீரத்தை காட்டும் அளவுக்கு தரந்தாழ்ந்து போனது சட்டமும், காவல்துறையும்...


மணல் கொள்ளையில் ஈடுபட்ட வட்டாட்சியரை உங்கள் சட்டத்தால் தொட முடிந்ததா...

திராவிடன் யார்.?


1944 ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற நீதிக்கட்சியின் மாநாட்டில் நீதிக்கட்சியின் பெயரை,  கன்னட ஈ.வெ.ரா திராவிடர் கழகம் என்று மாற்ற முயன்ற போது அதன் பெயரை "தமிழர் கழகம்" என்று மாற்றச்சொல்லி கி.ஆ.பெ விசுவநாதன் உள்ளிட்ட தலைவர்கள் முயன்றனர்.

ஆனால் ஈ.வ.ரா விடாப்படியாக மறுத்து
திராவிடர் கழகம் என்றே பெயர் மாற்றினார்.

அதற்கு அவர் சொன்ன காரணம் தமிழர் கழகம் என்று சொன்னால் இங்கே உள்ள பார்ப்பனரும்..

நாங்களும் இங்கேயே பிறந்து வளர்ந்து தமிழ்தான் பேசி  வாழ்ந்து வருகிறோம்..

அதனால் நாங்களும் தமிழர்கள்தான் என்று வந்துவிடுவார்கள்.

(இதற்கு பெயர் என்ன வெறி)

ஆனால் திராவிடன் என்று சொன்னால் எந்த பார்ப்பனரும் நான் திராவிடன் என்று உள்ளே வரமாட்டார் என்று காரணம் சொன்னார்.

( அதாவது இங்கேயே பிறந்த வளர்ந்த தமிழ் பேசும் பார்ப்பான் உள்ளே வரக்கூடாது..  ஆனால் இங்கே பிறந்து வளர்ந்து பிறமொழி பேசும் தெலுங்கரோ , கன்னடரோ, மலையாளியோ ஆண்டால் பரவாயில்லை.. அவர்களிடம் தமிழன் அடிமையானாலும் பரவாயில்லை )

ஆனால் உண்மையில் திராவிடர் என்ற சொல் பார்ப்பனர் அல்லாதவரை குறிக்கும் சொல் அல்ல.

வட இந்தியாவில் வாழும் பார்ப்பனர்கள் தென்னிந்தியாவில் ஐந்து நிலப்பகுதியில்  வாழும் பார்ப்பனர்களை  குறிக்கவே திராவிடர் என்ற சொல்லை பயன்படுத்தினர்.

தென்னிந்தியாவில் வாழும் சில பார்ப்பனர்களின் குடும்ப பெயரிலேயே திராவிடன் என்று பெயர் வழங்கப்பட்டது.

கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட் விடம்  உங்கள் பெயரின் பின்னால் திராவிட் என்று வருகிறதே என்று கேட்டதற்கு நாங்கள். கும்பகோணத்தை சேர்ந்த பிரமாணர் குடும்பம் என்று பதிலளித்தார்.

சனாதான தர்மத்தை மறுபரிபாலனம் செய்த ஆதிசங்கரர் தனது சௌந்தர்ய லகரி என்ற நூலில் திருஞான சம்பந்தரை திராவிட சிசு என்று குறிப்பிடுகிறார்.

ஆதிசங்கரர் கேரளாவில் பிறந்த பிராமணர்.

திராவிடம் என்ற பெயரை பயன்படுத்திய கால்டுவெல்லும் தான் திராவிடம் என்ற சொல்லை சம்ஸருத நூலான ஆரியர்களின் மனுஸ்மிருதியிலிருந்து எடுத்தேன் என்று கூறியுள்ளார்.


ஆரியத்தையையும., மனுதர்மத்தையும் கடுமையாக எதிர்க்கும் அவையெல்லாம் பொய் புரட்டு கட்டுக்கதைகள் என்று சொல்லும் திராவிட அறிவு ஜீவிகள் தங்களது இயக்கத்திற்கு பெயரை அதே மனுஸ்மிருதியிருந்து எடுத்து பயன்படுத்துகிறார்கள்.

ஒரே ஒரு சங்கத்தமிழ் இலக்கியத்தில் கூட திராவிடம் என்ற சொல் பயன்படுத்தியதில்லை.

மனுஸ்மிருதி நம்மையெல்லாம் திராவிடன் என்று இழிவாக சொல்கிறது. அதையே நமது பெருமைக்குரிய அடையாளமாக மாற்றவே நாம் திராவிடம், திராவிடன் என்று பெருமையாக சொல்லிக் கொள்கிறோம் என்கிறார் சுப.வீ..

அதே மனுஸ்மிருதி தான் நம்மையெல்லாம் சூத்திரன் என்கிறது. அதை தூக்கி போடுங்கள் என்று சொல்வதும் இதே திராவிட அறிவு ஜீவிகள் தான்.

இரண்டும்  ஒன்றுக்கொன்று முரண்.

மனுஸ்மிருதியில் அவன் கொடுத்த சூத்திரப்பட்டம் எவ்வுளவு இழிவானதோ..

அதை விட இழிவானது அவன் சொன்ன திராவிடன் என்ற சொல்லை பயன்படுத்தி இன்னும் தமிழர்கள் தங்களை தாங்களே திராவிடன் என்று சொல்லிக் கொள்வது..

ஆக திராவிடர் என்றால் அதில் பார்ப்பானர்கள் வரமாட்டார்கள் என்று சொல்லி..

தமிழர்களுடைய உண்மையான இனப்பெயரை அழித்து நீ திராவிடன் என்று ஒரு பொய்யான மாயையை திணித்து தமிழர்களின் தொன் பெருமையை அழித்த ஒரு வரலாற்று மோசடியை செய்தவர் ஈ.வெ.ராமசாமி...

ஒருத்தன மரண பயத்துலயே அலைய விடுறதுதான் கொல்லுறதை விட பெரிய தண்டனை... புல்லட் புரூப் ஆடை...


நாஸ்கா கோடுகள் - Nazca Lines...


அறிவியலின் அதீத வளர்ச்சியினால் மனிதன் பல புதிய விஷயங்களை கண்டுபிடிக்கிறான். செவ்வாய் கிரகத்தில் நீர் உள்ளதா என கண்டறிய முயற்சி செய்கிறான். அப்படிப் பட்ட அறிவியல் வளர்ச்சியால் கூட ஒரு சில மர்மங்களுக்கு விடை காண இயலவில்லை.  அதில் ஒன்று தான் நாஸ்கா கோடுகள்.

பெரு நாட்டின் தெற்கில் அமைந்திருக்கும் நாஸ்கா பாலைவனத்திலிருந்து, லிமா, பல்பா, பம்பாஸ் சமவெளிகளுக்கிடையே 400 கி.மீ., சுமார் தெற்கு கடற்கரை அமைந்துள்ள மிகப்பிரமாண்டமான கோடுகள் அவை. சாதாரணமாக நிலத்தின் மீது நின்று பார்த்தால் இவைகள் நீண்ட ஒற்றையடி பாதைகள் போலவும், வாய்க்கால்கள் போலவும் தெரியும். ஆனால் விமானத்தில் இருந்து பார்த்தால் இந்த கோடுகள் விமானங்கள் தரையிறங்கும் ஓடுதளம் போலவும், குரங்கு, நாய், மனிதன், பறவை போன்ற உருவங்கள் போல காணப்படும்.

1920 ல் இந்த வழியாக விமானத்தில் பறந்து சென்ற சுற்றுலா பயணிகளால் எதேச்சையாக கவனிக்கப்பட்டு கண்டறியப்பட்டவை இவை . அதுவரை இவைகள் சிறிய சாலைகள் போலவும், வாய்க்கால்கள் போலவும் பார்க்கப்பட்டு வந்தன.

இவை கி. மு. 600 முதல் கி. பி. 200 க்குள் வரையப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையானது என வல்லுனர்கள் கூறுகின்றனர். இதில் அதிசயம் என்னவென்றால் அன்றைய தொழில் நுட்பத்தில் இப்படிப்பட்ட சீரான நீண்ட, முறையான கோடுகளும் சித்திரங்களும் எவ்வாறு வரைய முடிந்தது என்பதுதான். அதனால் இந்த கோடுகளை பற்றி நிறைய கருத்துக்கள் நிலவுகின்றன.

இங்குள்ள நிலத்தில் கருப்பு நிற கற்கள் உள்ளன. 1998 ல் வந்த ஒரு வெள்ளத்தில் இந்த பகுதியின் தார் சாலைகள் பாதிக்கப்பட்டதாம். இருந்தும் ஆச்சர்யமாக இந்த கோடுகள் சிதையவில்லை. இதில் விமானம் ஓடுதளம் போன்ற ஒரு பட்டை 2 கி. மீ. நீளம் கொண்டது. இந்த பட்டை மிக சீராக நேரே செல்கிறது. இவ்வளவு தூரத்திற்கு இதை எப்படிதான் நிலத்தில் வரைந்தார்கள் என்று அதிசயிக்க வைக்கிறது.

இதைவிட ஆச்சர்யதக்க வகையில் மலைகளின் மீது பல கைகளை கொண்ட ஒரு உருவம் செதுக்கப்பட்டுள்ளது. அறிவியலாளர் ஜானி இஸ்லா கருத்துப்படி இந்த கோடுகள் கி. மு. 500 இல் பரகாஸ்  (Paracas) சமூகத்தினரால் உருவாக்கப்பட்டு கி. மு. 50 இல் நாஸ்க்கா சமூகத்தினரால் மேம்படுத்தப்பட்டது என அறியப்படுகிறது. டொர்பியோ மெஜ்ஜியா என்பவர்தான் இந்த கோடுகளைப் பற்றி 1927 இல் முதலில் ஆராய்ந்தார். அவர் இந்த கோடுகளை இன்கா சமூகத்தினரால் பயன்படுத்தப்பட்ட விமான ஓடுதளம் என்றார்.

அறிவியலாளர் மைக்கல் கேயே கூற்றுப்படி அன்றைய சமூகத்தினரால் இவைகள் தங்கள் மூதாதையருடன் தொடர்புபடுத்தும் பாதைகள் எனவும், தங்கள் விளை நிலத்திற்கு நீர் கொடுக்கும் பாதைகள் எனவும் நம்பப்பட்டதாம். மாரியா ரிச்சே எனும் கணிதவியலாளர் இக் கோடுகள் வானவியல் நாட்காட்டி என்கிறார். இந்த பட்டைகள் முக்கிய​ நட்சத்திரங்கள் மற்றும் கோள்களின் இடத்தை குறிக்கின்றது என்கிறார். ஒரு சிலர் இந்த கோடுகள் வேற்று கிரக வாசிகளால் உருவாக்கப்பட்டவை என்று கூறுகின்றனர். வேறு சிலர் இவை வேற்று கிரக வாசிகளை தொடர்பு கொள்ள வரையப் பட்டதாக கூறுகின்றனர். இருப்பினும் இவை உருவாக்கப் பட்டதற்கான காரணங்களை கண்டறிய முடியவில்லை...