05/02/2019

பாஜக - அதிமுக - காவல்துறை அராஜகம் - மூடி மறைக்கும் திருட்டு ஊடகங்கள்...


எங்க அம்மாவைக் கண்டுபிடித்து தாருங்கள் - கதிராமங்கலத்தில் போராடும் பெண் குழந்தைகள்...

நேற்று கதிராமங்கலத்தில் நடைப்பெற்ற போராட்டத்தில் என்னுடைய அம்மாவும் கலந்துகொண்டார். முதலில் கைது செய்வதாக மிரட்டியவர்கள் கைது செய்யவில்லை எனினும் இன்னும் என் அம்மா வீட்டிற்கு வரவில்லை’ என அவரின் குழந்தைகள் தெரிவித்துள்ளனர்.

“நாங்கள் மூவருமே பெண்க்குழந்தைகள்  இதுவரை எங்கள் அம்மா எல்லா போராட்டத்திலும் கலந்துக்கொண்டவர் என் கிராமம் காக்க நானும் போராடுவேன் என போராட்டத்தில் ஈடுபட்டவர் தான் கலையரசி  எங்களுக்கும் பெருமையாக இருக்கும் அவர் எப்போதும் தைரியமானவர் எதற்கும் துணிந்து போராட வேண்டும் என்று சொல்லுவார் இன்று அவர் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை  காவல்துறையும் எங்களுக்கு எவ்வித தகவல்களும் தெரிவிக்க மறுக்கின்றனர் .கேட்டாலும் சரியான தகவல் சொல்ல மறுக்கின்றனர், ஆனால் அம்மா மீது வழக்கப்பதிவு செய்துள்ளனர்  நாங்களும் எங்கள் உறவினர்களிடம்  விசாரித்து விட்டோம் ஆனால் அம்மா எங்குமே இல்லை” என்கிறார் கண்ணீருடன்.

கலையரசி என்பவர் கதிராமங்கலம் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுப்பவர்  அதற்காக இவர் மீது வழக்குகளும் பதியப்பட்டுள்ளது.  நேற்று திடீரென ஓ.என்.ஜி.சியை சேர்ந்தவர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர் அதனை தடுத்து நிறுத்தச்சென்ற பேராசிரியர் ஜெயராமன், இராஜூ என்பவர்கள் கைதுசெய்யப்பட்ட நிலையில் கலையரசி, ஜெயந்தி,சித்ரா ஆகியோர் உடன் இருந்தனர் தற்போது இவர்கள் மூவருமே காணவில்லை எந்த வித தகவல் தொடர்பும் இல்லை   நாங்கள் எங்கள் ஊருக்காகத்தான் போராடுகிறோம் ஆனால் எங்களை தேசவிரோதிகள் போல் நடத்துகின்றன அம்மா இல்லாமல் எங்களுக்கு என்னசெய்வதென்றே தெரியவில்லை அழுகை மட்டுமே எங்களுக்கு சொந்தமானதுப்போல் ஆறுதல்  இழந்து நிற்கின்றோம்  தனியாக இருக்கின்றோம் தந்தையும் வெளிநாட்டில் உள்ளார்.

நேரம் செல்ல செல்ல உயிரோடு அம்மா இருக்கிறாரா? இல்லையா? என்ற எண்ணமே  தோன்றுகிறது. அம்மாவை தாருங்கள் என்று தான் கேட்கிறோம் அதையும் இந்த அரசு செவிசாய்க மறுக்கிறது.  ஊர்மக்கள் மட்டுமே உதவுகின்றது வேறு யாரும் வரவில்லை  என்கிறார் கலையரசியின் மகள் தேவதர்ஷினி.  நிர்க்கதியாக நிற்கின்றோம் ,இதுகுறித்து திருவிடைமருதூர் காவல்துறை கண்காணிப்பாளர் ராமக்கிருஷ்னனிடம் பேசியபோது நாங்களும் அவர்களை தேடிக்கொண்டுதான் இருக்கின்றோம் அவர்கள் மீது அத்துமீறல் வழக்குப் பதிவு செய்துள்ளோம் எனவே அவர்கள் காவல்த்துறைக்கு பயந்தே தலைமறைவாக இருக்கவேண்டும் அவர்களை நாங்கள் மறைத்து வைக்கவேண்டிய அவசியம் எங்களுக்கு எதுவும் இல்லை என்று கூறினார்

இதை நாம் அந்தக்குழந்தைகளிடம் கூறிய போது எங்களுக்கு நடப்பது எதுவும் புரியவில்லை கண்முன் அம்மா இல்லை என்பது மட்டுமே தெரிகின்றது என்கின்றனர் வாடிய முகத்துடன் அந்த மூன்று குழந்தைகளும்...

(கடந்த 10 நாட்களாக திருவாரூர் நாகப்பட்டினம் என பல்வேறு இடங்களில் ஹைட்ரோகார்பன் எதிராக இரவு பகலாக போராட்டம் நடத்தினார்கள்.

பின்னர் அவர்கள் மீது வழக்கு போட்டு கைது செய்தது.

பெண்கள் இன்று நேரடியாக போராட்டத்தில் இறங்கி ஒன்றினைந்து போராட்டத்தை தொடங்கியுள்ளார்கள். 

பல வழக்கு கைது என இன்றும் தொடர்கிறது)...

பெண் போலிஸ் மர்ம மரணத்தை மூடி மறைக்கும் சிறைத்துறை...


தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காவல் துறையினர் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டு வரும் நிலையில், திருச்சியில் பெண் சிறை வார்டன் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணத்திற்கு காரணத்தை மூடி மறைக்க சிறை நிர்வாகம் முயற்சிப்பதாக நமக்கு வந்த புகாரை அடுத்து விசாரித்த போது அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடலூர் மாவட்டம் பெரிய காட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பன். இவரது மகள் செந்தமிழ்ச்செல்வி (24). திருச்சி காந்தி சந்தை பகுதியில் உள்ள மகளிர் சிறையில் வார்டனாகப் பணியாற்றி வரும் இவர் அருகிலுள்ள குடியிருப்பில் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று 03.02.2019 மாலை வீட்டில் தனியாக இருந்தபோது திடீரெனத் தூக்கில் பிணமாகத் தொங்கினார். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் கே.கே.நகர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் செந்தமிழ் செல்வியின் உடலை கைப்பற்றித் திருச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செந்தமிழ் செல்வியின் தற்கொலை குறித்து விசாரணையில் இறங்கியபோது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளது.

2017ம் ஆண்டு தேர்வானவர் செந்தமிழ் செல்வி. அதே ஆண்டு தேர்வானவர் அரியலூர் மாவட்டம் திருமாந்தூர் பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல். இவர்கள் இரண்டு பேரும் அகில இந்திய அளவில் சிறைதுறை விளையாட்டுப் போட்டிகளில் விளையாடியவர் என்கிற முறையில் ஆரம்பித்தில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நட்பு அடிப்படையில் ஏற்பட்ட பழக்கம் தினமும் செல்போனில் பேசும் அளவிற்கு மாறியிருக்கிறது. செந்தமிழ் செல்வி சிறைத்துறையைச் சேர்ந்த குடியிருப்பு பகுதியான R பிளாக்கில் தங்கியிருக்கிறார். இவருடன் 3 பெண்கள் தங்கியிருக்கிறார்கள். உடன் தங்கியிருப்பவர்கள் பணி நேரத்தில் வெளியே செல்லும் நேரங்களில் வெற்றிவேல் செந்தமிழ்செல்வியின் அறைக்கு வந்து விடுவாராம்.

இந்தப் பழக்கம் எல்லைமீறிச் சென்றிருக்கிறது. இந்த நிலையில் கடந்த வாரத்தில் வெற்றிவேலிடம் திருமணம் செய்யச் சொல்லி வலியுறுத்தி இருக்கிறார். ஆனால் வெற்றிவேலோ நீ என்ன ஜாதி, நான் என்ன ஜாதின்னு தெரியுமா! உன்னைக் கல்யாணம் செய்து கொள்ள முடியாது. நீ என்னோட பழகின, நா உன்னோட பழகின அவ்வளவு தான். எனக்கு இந்த மாதம் 6ம் தேதி திருமணம் நடக்கப் போகிறது என்று சொல்லியிருக்கிறார்.

இதனால் அதிர்ச்சியடைந்த செந்தமிழ் செல்வி வெற்றிவேலின் காலில் விழுந்து என்னை ஏமாற்றிவிடாதே! உன்னை உயிருக்கு உயிராகக் காதலிக்கிறேன், எனக்கு வாழக்கை கொடு, இல்லை போலிஸ் சூபிரடென்டிடம் சொல்லி உன்மேல் நடவடிக்கை எடுக்கச் சொல்லுவேன் என்று கெஞ்சியிருக்கிறார்.

இதை எல்லாம் பெருசா எடுத்துக்கொள்ளாத வெற்றிவேல் என்னோட அண்ணன் கைலாசம் இதே சிறையில் விஜிலன்ஸ் அதிகாரியாக இருக்கார். நான் அவரை வச்சு எல்லாத்தையும் சரி பண்ணிக்கிறேன். நீ மோசமுன்னு சொல்ல வச்சுடுவென் என்று மிரட்டியிருக்கிறார்.

இந்த நிலையில் தான் செந்தமிழ்செல்வி தற்கொலை செய்திருக்கிறார் என்கிறார்கள். ஏமாற்றிய வெற்றிவேல் திருமணம் 6-ம் தேதி நடக்க இருக்கிறது என்கிறார்கள். சிறைதுறையில் உள்ளவர்கள்.

செந்தமிழ்செல்வி தற்கொலை தொடர்பாக, அவரின் மாமா ரவியிடம் பேசியபோது,  ‘செல்வியும் வெற்றிவேலும் காதலித்து இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில்  செல்வி திருமணம் செய்துகொள்ள சொல்லி வெற்றிவேலிடம் கேட்டபோது  ஜாதியை காரணம்காட்டி தவிர்த்திருக்கிறார். இதற்கு வெற்றிவேலின் அண்ணனும் உடந்தையாக இருந்திருக்கிறார்.  இதனிடையில் வெற்றிவேல் குடும்பத்தினர் வெற்றிவேலுக்கு  வேறொரு பெண்ணுடன் பதிவு திருமணம் நடைபெற்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை கேள்விப்பட்ட செல்வி மனவுளைச்சலில் நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்’ எனத் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து வேற்றிவேலை தொடர்புகொண்டு அவரின் விளக்கத்தை பெற முயற்சித்தோம், ஆனால் அவரின் செல்ஃபோன் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளது என வருகிறது. 

வெற்றிவேல், செந்தமிழ்செல்வி செல்போன், வாட்ச்ஆப், ஆகியவற்றை ஆய்வு செய்தால் உண்மை வெளியே வரும். இல்லை என்றால் வழக்கம் போல் குடும்பச் சுழல், மனஉளைச்சல், கடிதம் எழுதி வைத்துவிட்டார் என்று வழக்கான கதைகளைச் சொல்லி செந்தமிழ்செல்வி மரணத்தின் மர்மத்தை மண்ணோடு புதைத்து விடுவார்கள்...

பாஜக மோடியை தான் சொல்லி இருக்கார் போல...


மத்திய பாஜக அரசை கண்டித்து மேற்குவங்கத்தில் 2வது நாளாக முதலமைச்சர் மமதா பானர்ஜி தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது...


இந்த போராட்டத்துக்கு காங்கிரஸ், திமுக, உள்ளிட்ட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது.

கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ்குமார் வீட்டில் ஆலோசனை மேற்கொண்ட பின் சிபிஐ விவகாரம் குறித்து பேசிய முதல்வர் மமதா, "அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில், மோடி-ஷா கூட்டணி ஈடுபட்டுள்ளது. அராஜகத்தை பரப்ப எண்ணுகிறது மோடி அரசு; மேற்கு வங்கத்தை பாஜக சித்ரவதை செய்கிறது” என குற்றம் சாட்டியுள்ளார்...

குமரிக்கண்டம் தாண்டி இராவணன் ஆண்ட இலங்கை...


உண்மையில் இராவணன் ஆண்ட இலங்கை தற்போதைய இலங்கைத் தீவு கிடையாது. இதைக் கம்பரே கூறுகிறார்.

இராமாயணத்தில் சீதையைத் தேடி அனுமன் தென்திசையில் செல்கிறான்.
அகத்தியர் தமிழ்ச்சங்கம் அமைத்த பொதிகை மலையில் பொருநை (தாமிரபரணி) ஆறு ஓடுவதையும்
அதற்கடுத்து மயேந்திரமலை (கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தற்போதைய மகேந்திரகிரி) இருப்பது குறிப்பிடப்படுகிறது.

கிட்கிந்தா காண்டம் நாடவிட்ட படலத்தில் இது வருகிறது..

தென்தமிழ் நாட்டு அகன்பொதியின் "திருமுனிவன் தமிழ்ச்சங்கம்..."
"பொருநையெனும் திருநதிபின்..."
"மயேந்திரமா நெடுவரையும்..."

அங்கேயிருந்து நூறு ஓசனை (யோசனை) தொலைவில் நடுக்கடலில் இலங்கை இருக்கிறது என்றும் வருகிறது.

இது கிட்கிந்தா காண்டம்,
சம்பாதிப் படலத்தில்,
"ஓசனை ஒருநூறு கொண்டால் ஒலிகடல் இலங்கை..."
என்றும்,

கிட்கிந்தா காண்டம் மயேந்திரப் படலத்தில்
"ஓசனை ஒன்று நூறும்...."
என்றும் வருகிறது.

யோசனை என்றால் எவ்வளவு?

பொறிஞர் கொடுமுடி சண்முகத்தின் "பழந்தமிழர் பொறியியல் நுட்பத் திறன்" என்ற புத்தகத்தில் பழந்தமிழ் அளவீடுகளுக்கான தற்போதைய அளவுகள் தரப்பட்டுள்ளன. அவை...

1 விரல் = 3.48958 cm
6 விரல் = 1 சாண் = 21cm
2 சாண் = 1 முழம் = 42 cm
2 முழம் = 1 கோல் = 84 cm
4 கோல் = 1 தண்டம் = 3.35 m
500 தண்டம் = 1 கூப்பீடு= 1.675Km
4 கூப்பீடு = 1 காதம் = 6.7 Km
4 காதம் = 1 யோசனை = 26.82 Km

எனில் 100 யோசனை என்பது 2682 கி.மீ. தொலைவு ஆகும்.

அதாவது கிட்டத்தட்ட காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி (2750 கி.மீ, வான்வழி) இருக்கும் தூரம் ஆகும்...

சாமுத்திரிகா லட்சணப்படி பெண்களுக்கான மச்சம் பலன்கள்...


https://youtu.be/35h9FdF9xVY

Subscribe the channel for more news...

இந்து மதம் என்ற ஒன்று இல்லவே இல்லை. சைவம் ஒன்றே உண்டு...


சைவம் 5000  ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்து மதம் வெறும் 200 ஆண்டுகள் தான்..

தமிழர் எவரும் இந்துக்கள் இல்லை.
தமிழர் அனைவரும் சைவ மதத்தினரே...

- மதுரை ஆதீனம்...

குறிப்பு : தமிழர்கள்.. இந்துவோ.. கிருஸ்துவோ.. இஸ்லாமியரோ அல்ல... அனைத்தும் தமிழர்களை ஏமாற்றி பிழைக்க திணிக்கப்பட்டதே...

உடல் எடை குறைய...


பப்பாளி பழத்தை வெறுக்காதீங்க.. இதயத்திற்கு நல்லது...


நிறைய பேர் பப்பாளிப்பழம் என்றால் அலர்ஜி போல், அதன் வாசனை வந்தாலே ஓடிப் போய் விடுவர். ஆனால் அத்தகைய பப்பாளிப் பழத்தில் அதிகமான அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. கொலம்பஸ் இதனை பழங்களின் ஏஞ்சல் என்று சொல்கிறார். ஏனெனில் இந்த பழம் நன்கு கனிந்த பின் பார்த்தால், அதன் நிறம் கண்ணைக் கவரும் வகையில் இருக்கும்.

மேலும் இந்த பழம் நன்கு சுவையோடு இருப்பதோடு, அதிகமான ஊட்டச்சத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது.

உடலில் வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருக்கிறது என்று நிறைய பேர் அதற்கான மாத்திரைகளை சாப்பிடுகின்றனர்.

ஆனால் அவ்வாறு மாத்திரைகளை சாப்பிடுவதை விட, இந்த பழத்தை தினமும் சிறிது சாப்பிட்டாலே போதுமானது.

சரி, இப்போது பப்பாளி பழத்தினை சாப்பிட்டால் என்னென்ன நன்மை உடலுக்கு கிடைக்கின்றது என்று பார்ப்போமா...

பப்பாளியில் அளவுக்கு அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் ஏ,சி மற்றும் ஈ இருக்கிறது. இத்தகைய அதிகமான அளவு ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், அவை உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை கரைக்கின்றன. மேலம் கொலஸ்ட்ராலின் அளவு உடலில் அதிகமாக இருந்தால், அவை இரத்த குழாய்களில் தங்கி, சரியான இரத்த ஓட்டத்தை தடை செய்கின்றன. இதனால் தான் மாரடைப்பு ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இந்த பழத்தில் நார்ச்சத்துக்கள் மிகுதியாக உள்ளது. இந்த நார்ச்சத்துக்களும் இரத்ததில் கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்துகிறது.

இந்த பழத்தில் இருக்கும் புரோட்டீனான பாப்பைன், செரிமான மண்டலத்தை சரியாக இயக்குகிறது. மேலும் இதில் இருக்கும் நொதிப் பொருள், செரிமானமாகாத புரோட்டீன்களை உடைத்து எளிதில் செரிமானமாகும் அமினோ ஆசிட்டுகளாக மாற்றி, செரிமானத்தை விரைவுபடுத்துகிறது. அதிலும் பப்பாளியை சாப்பிட்டால், மலச்சிக்கல் இருந்தாலும் சரியாகிவிடும்.

பாப்பாளியில் இருக்கும் நொதிப்பொருள் மற்றும் நார்ச்சத்துக்கள், குடல் இயக்கத்தை சரியாக இயக்குவதால், செரிமானம் எளிதில் நடைபெற்று, மலச்சிக்கலும் குணமாகிறது.

பப்பாளியில் உடலில் ஏற்படும் அழற்ஜியை எதிர்த்து போராடும் பண்புகள் இருக்கின்றன. அதனால் தான் உடலில் எரிச்சல் அல்லது புண் இருந்தால், பப்பாளியை சாப்பிடுகின்றனர்.

மேலும் இந்த அழற்ஜியை எதிர்த்து போராடும் பண்புகள் பப்பாளியில் இருப்பதால், மூட்டுவலி அல்லது ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை சாப்பிட்டால் நல்லது.

பப்பாளியில் இருக்கும் பலவித பண்புகளோடு, புற்றுநோயை குணப்படுத்தும் பொருளும் இருக்கிறது. இந்த பழத்தில் இருக்கும் நார்ச்சத்து, புற்றுநோய் உண்டாக்கும் டாக்ஸின்களை உடலில் இருந்து முற்றிலும் வெளியேற்றி, வயிற்றில் ஏற்படும் புற்றுநோயை தடுக்கிறது.

மேலும் பப்பாளியில் இருக்கும் போலேட், வைட்டமின் சி, பீட்டா-கரோட்டீன் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவையும் புற்றுநோய் உண்டாக்குவதை தடுக்கும் சத்துக்களாகும்.

அதில் கலோரிகள் குறைவாக இருப்பதால், இந்த பழம் டயட் மேற்கொள்வோருக்கு மிகவும் சிறந்தது.

ஆகவே பப்பாளிப் பழத்தை தினமும் ஒரு துண்டாவது சாப்பிடுங்க...

Save சின்னத்தம்பி யானை...


ஒரு அமைப்பு நினைத்தால் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியும் ஆனால் எந்த ஒரு அமைப்பும் இந்த ஒற்றை யானையை காப்பாற்றி அதன் குடும்பத்துடன் இனைய வைக்க முயற்சி செய்யாதது ஏன்?