27/09/2021

தடுப்பூசி கலாட்டா...

 


தேசத்தந்தை சொல்வதே கேளுங்க 😁😁

 


சிறுநீரகக் கோளாறுக்கு அருமை மருந்து வாழைத்தண்டு...

 


சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது. சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர

உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால், அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.

சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது.

சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்.

வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு.

வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.

உடலைக் குளிர்ச்சியடையவைக்கும் தன்மையிருப்பதால் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது.

உடல் எடை குறைய உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்கள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்...

இது ஐநூறு வருடங்களுக்கு முன்பு மொங்கோலியாவில் ஆழ்ந்த தியானத்தில், நின்ற நிலையிலேயே உயிர் நீத்த ஒரு பிக்குவின் உடல் ஆகும்...

 


அந்தப் பகுதி மக்கள் இவர் இன்னும் தியானத்தில்  இருப்பதாகவும், சரியான தருணத்தில் கண்களைத் திறப்பார் எனவும் நம்புகிறார்கள். 

இவரது உடலில் பூசியிருந்த ஒரு விதமான தைலத்தினாலும்,  அந்தப் பகுதியில் உள்ள காலநிலையாலும் இந்த உடல் பழுதாகாமல் அப்படியே இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவரது உடலுக்கு அருகில் மொங்கோலிய மொழியில் ஒரு கல்வெட்டு கிடைத்துள்ளது.

அதன் தமிழாக்கம் கீழ்வருமாறு அமைந்துள்ளது.

IPL கிரிக்கெட் வரலாற்றில் RCB அணி கோப்பையை வெல்லும் நாளன்று என்னை எழுப்பி விடுங்கள்..😂

நாட்ல கொலை, கொள்ளை, கற்பழிப்புல சிக்குறவன் எல்லாமே பாஜக வுல தான் சேருறான் 😅

 


மோடியின் ஐநா சபை உரை பற்றி இதை விட தெளிவா சொல்ல முடியாது 😅

 


26/09/2021

இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால்...

 


விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களுக்கும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களுக்கும் அருமருந்து தான் மஞ்சள், பால் மற்றும் மிளகு.

குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும்.

இந்த வைத்தியத்தைத்தான் இன்றளவும் கிராமங்களில் பலர் கடைபிடிக்கிறார்கள்.

பொதுவாக மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை அழித் தொழிக்கும் ஆற்றல் பெற்றது.

அதேபோல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது. உடலில் உருவாகும் வாய்வுத் தொந்தரவுகளை அறவே நீக்குகிறது. சளியை விரட்டும் சக்தி மிளகுக்கு உள்ளது.

மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கே உடலில் சேரும்போது, இருமல், சளி சரியாகி விடும்...

மரணத்தில் விளம்பில் நான்...

 




உன்னை நான் தினம்
தொடர்ந்து வந்த போதெல்லாம்...

என்னை தொந்தரவு
செய்யாதே என்றாய்...

அன்று முதல் 
உன் கண்களில் படாமல்
உன்னை தொடர்ந்துக்
கொண்டிருக்கிறேனடி...

எதார்த்த சந்திப்பில்
என்னை கேட்கிறாய்...

என்னை
மறந்துவிட்டாயா என்று...

உனக்காகவே
விலகி நின்றேன் அன்று...

மரணத்தின் விளிம்பில் நிற்பதாய்
உணர்கிறேன் இன்று...

உன்
வார்த்தையை கேட்டதும்...

இப்போது சொல்
உன்னை
நான் தொடரவா...

இல்லை நான் மொத்தமாக
தொலைந்து போகவா...

சொல்லடி பெண்ணே....

மாலை வணக்கம் 😁

 


உள்ளாட்சி தேர்தலில் 1 சீட் கொடுத்த கடுப்பு 😁