25/04/2017

சிவன் அணிந்துள்ள ஆபரணங்களின் உண்மை...


சிவன் ஒரு மின்சக்தியாலான உருவம் என்று எடுத்துக் கொண்டால் அந்த சித்திரத்தில் வேறு அணிகலன்கள் ஏன் உள்ளது? சிவன் கழுத்தில் ருத்திராட்சம் அணிந்திருக்கிறார் அல்லவா?

அதை வெறும் ருத்ராட்சமாக பாராமல் அதில் ஒரு ஆகர்சன சக்தி உள்ளதென எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில் புவியில் உள்ள எல்லா பொருள்களும் ஒன்றையொன்று ஈர்க்கின்றன. நிறை அதிகமான பொருள் நிறை குறைந்த பொருளை ஈர்க்கும். இரண்டு பொருள்களுக்கு இடையிலான இடைவெளி அதிகமாயினால் இந்த ஈர்ப்பின் வலிமை குறையும். இதனை சர் ஐசக் நியூட்டன் என்ற விஞ்ஞானி கண்டு பிடித்தார். ஆகவே ஒவ்வொரு பொருளுக்குள்ளும் ஆகர்சன சக்தி (Inertial Force) இருப்பது தெளிவாகிறது.

சிவன் கழுத்தில் இருக்கும் ருத்ராட்ச மாலையை விஞ்ஞான கண்ணோட்டத்தில் பார்த்தால் அப்போது அவைகளின் சக்தி ஒன்றுக்கொன்று இழுத்துக் கொண்டிருக்கிறது என்றும், ஒரு ருதிராட்ச காய்க்கும் இன்னொரு ருத்திராட்ச காய்க்கும் உள்ள இடைவெளி குறைவாக இருப்பதால் ஆகர்சன சக்தியை சிவன் அதிகம் பெற்றிருக்கிறார்.

சிவனது நெற்றியில் மூன்று விபூதிப் பட்டைகள் இருக்கின்றன. புருவ மத்தியில் ஒரு போட்டும் வைக்கப்பட்டுள்ளது. விபூதிப் பட்டைகளுக்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்தால் , விஞ்ஞானக் கண்களுக்கு அது மூன்று கோடுகளாகத் தெரிய வேண்டும். புருவ மத்தியில் உள்ள போட்டு புள்ளியாகத் தெரிய வேண்டும்.

உலகில் உள்ள எல்லா பொருள்களும் ஒன்றையொன்று இழுக்கின்றன. அந்த ஆகர்ஷன சக்தியின் திசை இடைப்பட்ட இரண்டு பொருள்களுக்கும் செங்குத்தாக இருக்கும். அப்படி பார்த்தால் பூமி என்ற அதிக நிறையுடைய ஒரு பொருள் , அதன் மேற்ப்பரப்பில் உள்ள ஒரு குறைந்த எடையுடைய பொருளை ஈர்க்கின்றது. அந்த பொருளின் பல பாகங்களில் இருந்தும், பூமியின் மையம் நோக்கி இழுக்கும் கோடுகள் எல்லாம், சமாந்திரக் கோடுகளாக (Equal perpendicular lines) இருக்கும். காரணம் என்ன என்றால் பூமியின் ஆரம் மட்டுமே கிட்டத்தட்ட 6200 கிலோ மீட்டர் ஆகும். பூமியின் ஒட்டுமொத்த ஆகர்ஷன ஈர்ப்பு மேற்ப்பரப்பில் உள்ள பொருளில் ஒரு குறிப்பிட்ட புள்ளி வழியாக செங்குத்தாக செயல்படுகிறது. அதுவே அந்த பொருளின் குருத்துவ கேந்திரம் (Centre of gravity) என்று அழைக்கப்படும்.

சிவன் படத்தில் விபூதி என்று உணர்த்திய அந்த மூன்று கோடுகளும் மூன்று சக்தி நிலைகள்..

1) விழா நிலை
2) விழும் நிலை
3) இடைச்சமநிலை

புருவமத்தியில் உள்ள பொட்டு - குருத்துவ கேந்திர புள்ளி.

சிவன் என்பது ஒரு மகாசக்தியாகும். அச்சக்தி பிரபஞ்சம் முழுவதுமே பரவி இருக்கிறது. அதில் மின்காந்த சக்தி – மின்னல் சக்திகள் ஏராளமாக பரவியுள்ளன.

இத்தகைய மஹா சக்தியை, சிவன் என்று மனித ரூபத்தில் சித்தரிக்கும் போது அவருடைய குணங்களையும் சக்திகளையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஆபரணங்களையும் புலித்தோல் ஆடையையும் சிவனின் உருவத்திற்கு அணிவித்தனர்.

சிவனிடம் ஆகாசசக்திகள் இருப்பதை புரிந்து கொள்ள மின்சக்தியைப் பற்றிய தெளிவு வேண்டும். அப்போது தான் ஏன் சித்தர்கள் சிவனை ஓர் மின்சார மனிதர் என அழைத்தார்கள் என விளங்கும். உடலில் எப்படி மின்சாரத்தைச் சேர்த்து வைக்க முடியும்? என்ற கேள்விக்கும் விடை காணலாம்.

மின்சாரம் கண்டு பிடிப்பு – வரலாறு..

முதன் முதலாய் 1799-ல் மின்சாரத்தை வோல்டா என்ற இத்தாலி நாட்டை சேர்ந்த விஞ்ஞானி கண்டு பிடித்தார். ஒரு கண்ணாடி பாத்திரத்தில் நீர்த்த கந்தக அமிலம் நிரப்பி அதனுள் ஒரு துத்தநாக தகட்டையும், ஒரு செப்பு தகட்டையும் ஒன்றன்மேல் ஒன்று படாமல் வைக்க வேண்டும். இந்த இரண்டு தகடுகளின் மேல்பகுதியின் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் நுனிகளை ஒரு செப்புக் கம்பியினால் சேர்த்தால் கம்பியின் வழியாக மின்சார ஓட்டம் உண்டாகிறது.

சித்தர்கள் சிவனை ஓர் மின்சார மனிதர் என அழைக்கக் காரணம், சிவன் சடையில் அணிந்திருப்பது பிறைச் சந்திரன், அது செம்பு. நாகப்பாம்பை அணிந்திருக்கிறார். அது துத்தநாகம். இத்தகு அணிகலன்களை அணிந்திருக்கும் சிவனது உடம்பை பாத்திரமாக வைத்துக் கொண்டால் மின்சாரம் எங்ஙனம் உருவாகும் என புரியும்.

தலைமுடியில் செம்பு..

சிவனை ஓர் உயிருள்ள மனிதராக எண்ணினால், அந்த மனித உடலில் அமிலமும், நீரும் இருப்பது தெரியும். அந்தத் தண்ணீரில் சூரிய ஒளியாகிய எரிபொருள் புகுந்து மனிதன் வாழ்வதற்கான சக்தியை அளிக்கிறது. ரோமத்தில் செம்பு உள்ளது என்று சித்தர் நூல்கள் கூறுகின்றன. சோதனை செய்து பார்த்தால் களிம்பு இல்லாத சுத்த செம்பு முடியில் இருப்பது தெரியும் என போகர் கூறியுள்ளார். இரும்பை சுத்த செம்பாக்கும் வல்லமையுடையது ரோமம்.

சூரிய ஒளியில் இருந்து வரக்கூடிய ஹீலியம் என்ற வாயுவை சுத்தப்படுத்தி சரீரத்துக்குள் அனுப்புவதற்கு தலை முடி உதவி செய்கிறது.பூமியின் ஈர்ப்பு சக்தியில்லாமல் எப்படி ஒருவர் நிற்க முடியும். மனிதர்கள் ஏதோ ஒரு சக்தியின் உதவியால் தான் பூமியில் நிற்க முடியும். ஆனால் தாவரங்கள் தன வேர்கள் பூமியில் பிடித்திருந்ததால் தன்னிச்சையாக நிற்க முடிகிறது. தாவரங்களில் வேரிலுள்ள சக்தி, மனிதனின் தலை முடியிலுள்ள சக்தியை ஒக்கும்.

ஓவியத்தினால் உருவத்தைக் காட்ட இயலும். ஆனால் அவ்வுருவத்தில் உள்ள பொருட்கள் எதனால் ஆக்கப்பட்டவை என்று விளக்க முடியாது. எனினும் ஒரு சில உலோகங்களை நிறம் கொண்டு அடையாளம் காண முடியும்.

சித்த ஓவியர்கள் சிவனுக்கு நாகம் (Zinc- துத்தநாகம்) என்ற உலோகத்தை அணிவிக்க வேண்டியிருந்தது.அதை எப்படி உலகமக்கள் எல்லாரும் உணர்ந்து கொள்வது என யோசித்துப் பார்த்ததும், நாகம்(zinc) என்று தெரிந்து கொள்வதற்காக, உயிருள்ள நாகத்தை (Cobra) உலோக நாகமாக சித்தரித்தார்கள் ஓவிய சித்தர்கள்.

சிவனுக்கு செம்பினால்(Copper) ஆன ஒரு ஆபரணத்தை அணிவிக்க விரும்பிய சித்தர்கள் ஓவியத்தின் வழி இவ்வுலோகம் தான் இது என மக்களுக்கு உணர்த்த சிந்தித்தார்கள். தமிழ் அகராதியில் செம்புக்கு மதி (Moon) என்ற சொல் இருப்பதைக் கண்டனர். செம்பில் களிம்பு என்னும் விஷமான களங்கம் சேர்ந்த்திருக்கிறது. அதுபோலவே சந்திரனிலும் (Moon) களங்கம் இருப்பதை யாவரும் அறிவர். ஆகவே தான் செம்பு என்ற பொருள் கொண்ட பிறைச் சந்திரனை ஆபரணமாக அணிவித்தனர்.

சிவனது சடா முடியில் கங்கையை சித்தரிப்பது ஏன்? சிவன் அதீத சக்தி உடையவர். சக்தி (Energy) என்பதற்கு பெண் என்று ஓர் பொருள் உள்ளது. ஆகவே அந்தப் பெண்ணை, சக்தியின் அம்சமாக சித்திரத்தில் வரைந்தார்கள். சிவனின் சடா முடியில் உள்ள கங்கை என்றழைக்கப்படும் பெண்ணில் இருந்து வருவது சக்தி ஓட்டம் (Flow of energy) ஆகும்.

நம் நாட்டில் அவதரித்த சித்தர்கள் தங்களது சீவனையே சிவனாகக் கண்டார்கள். அந்தச் சீவனாகிய சிவனில் மின் சக்தியைச் சேகரித்துக் கொண்டார்கள். அவர்கள் ஒருவரைத் தொட்டால் மின்சக்தி அவரது உடலில் பாயும் என்பதையும் தெரிந்து இருந்தார்கள்.அதனால் தான் இந்தச் சித்தர்கள், தங்கள் சக்திகள் கால் வழியாக புவிக்கு சென்றுவிடாமல் தடுக்க மரத்தினால் ஆன பாதரட்சை அல்லது பாதக்குறடு அணிந்திருந்தார்கள்.

சித்தர்கள், மகான்கள் எல்லாம், தங்களது பாதத்தை தொட்டு வணங்க யாரையும் அனுமதிக்க மாட்டார்கள். ஏனெனில் பாதங்களின் விரல்கள் வழியாகவும் மின்சக்தி வெளியேறும் தன்மை கொண்டது. அதேபோல் கைவிரல்கள் வழியாகவும் மின்சக்திகள் வெளியே பாயும் அபாயம் உள்ளது. முக்கிய சீடர்களைத்தான் கையால் தலையைத் தொட்டு ஆசீர்வதிப்பார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.