11/05/2017

தொகுதி மாறி போட்டியிட அமைச்சரிடம் ரூ10 கோடி வாங்கிய கொங்கு பாஜக பிரமுகர் - பகீர் தகவல்கள்...


சட்டசபை தேர்தலில் தொகுதி மாறி போட்டியிடுவதற்காக மூத்த அமைச்சர் ஒருவரிடம் கொங்கு பாஜக பிரமுகர் ரூ10 கோடி பணம் வாங்கியதாக டெல்லி மேலிடத்துக்கு புகார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸைவிட பாஜகவில் கோஷ்டி பூசல் உக்கிரத்தில் இருக்கிறது. டெல்லி மேலிடத்துக்கு இந்த கோஷ்டிகளின் தலைவர்கள் புகார் பட்டியல் அனுப்புவதையே வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

தமிழகத்தில் பாஜக காலூன்றுகிறதோ இல்லையோ அக்கட்சியின் தலைவர்கள் தங்களை வலிமையாக்கி கொண்டு வருகிறார்கள். அதுவும் தற்போதைய குழப்பமான அரசியல் சூழலைப் பயன்படுத்தி செம அறுவடையில் இறங்கிவிட்டனராம் பாஜக தலைவர்கள்.

இந்த நிலையில் டெல்லிக்கு தமிழக பாஜகவின் கோஷ்டி ஒரு புகாரை அனுப்பி வைத்தது. அதில் பல பகீர் விவகாரங்கள் இடம்பெற்றிருக்கிறதாம்.

மிக முக்கியமாக கொங்கு பாஜக பிரமுகர் ஒருவர் அமைச்சர் ஒருவரிடம் ரூ10 கோடி வாங்கினார் என்பதை பார்த்து அதிர்ந்தே போனதாம் டெல்லி.

சட்டசபை தேர்தலில் சொந்த தொகுதியில் போட்டியிடாமல் வேறு இடத்தில் போட்டியிடுவதற்காக பாஜக பிரமுகர் அந்த மூத்த அமைச்சர் ஒருவரிடம் ரூ10 கோடி பணம் வாங்கினாராம்.

அத்துடன் அந்த அமைச்சரின் பினாமி வீட்டிலேயே தங்கி அதையே தேர்தல் பணிமனையாகவும் மாற்றினார் என போட்டோ ஆதாரங்களுடன் டெல்லிக்கு இப்போது போட்டு கொடுத்துள்ளனர்.

கொங்கு பகுதியில் பெயர்பெற்ற 'பகவான்' கல்வி நிறுவனத்தில்தான் மூத்த அமைச்சர் பெருமளவில் முதலீடு செய்திருக்கிறாராம். அந்த கல்வி நிறுவனத்தை நடத்துவதாக சொல்லும் பினாமிதான் அவராம்.

தமிழகத்தில் இருந்து வரிசை கட்டி வரும் இந்த பகீர் தகவல்களை வைத்து கை பிசைந்து நிற்கிறதாம் டெல்லி மேலிடம்.

அதே நேரத்தில் நாங்க ரொம்ப நல்லவங்க என்கிற ரீதியில் மறுப்பு விளக்கத்தையும் அந்த பாஜக பிரமுகர் அனுப்பியிருக்கிறாராம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.