11/05/2017

குஜராத் ராணுவ வீரர்கள் மட்டும் எல்லையில் வீர மரணம் அடைவதில்லையே எப்படி? அகிலேஷ் யாதவ் கேள்வி...


குஜராத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் மட்டும் வீர மரணமடைவதில்லையே ஏன் என்ற உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் கமெண்ட், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது..

காஷ்மீரில் இந்திய ராணுவத்தை சேர்ந்த உர் பயாஸ், தீவிரவாதிகளால் நேற்று கொலை செய்யப்பட்ட நிலையில், இந்த கேள்வியை அகிலேஷ் யாதவ் எழுப்பியுள்ளார்.

மாநிலம், வட்டாரம் என்ற அளவில் ராணுவ வீரர்கள் தியாகத்தை அகிலேஷ் யாதவ் கொச்சைப்படுத்திவிட்டார் என்று வட இந்திய நெட்டிசன்கள் காரசாரமாக கருத்து கூறி வருகிறார்கள்..

உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், தென் இந்தியா மற்றும் பிற பகுதிகளை சேர்ந்த ராணுவ வீரர்கள் எல்லையில் வீரமரணமடையும் செய்திகள் வருகின்றன. ஏன் குஜராத்தை சேர்ந்த எந்த ஒரு ராணுவ வீரரும் வீரமரணமடையவில்லை?' என்று அகிலேஷ் யாதவ் கூறியிருந்தார்.

அகிலேஷ்யாதவ், மோடியை சீண்டுவதாக நினைத்து இக்கேள்வியை எழுப்பியிருந்தார். ஆனால் அது இப்போது அவருக்கு எதிராக திரும்பியுள்ளது. இணையதளங்களில் அகிலேஷ் யாதவுக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.

அகிலேஷ் யாதவ் கூற வந்ததை சரியாக கூறாமல் கூறியதால் அது சர்ச்சைக்குள்ளாகியதாக சமாஜ்வாதி கட்சியினர் கூறிவருகிறார்கள்.

சிலரோ, குஜராத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் மட்டும் ஏன் எல்லையில் பணியமர்த்தப்படவில்லையா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.

நீட் பொது நுழைவுத் தேர்வின் போது, குஜராத்தில் மட்டும் எளிதான கேள்விகள் கேட்கப்பட்டதாக சர்ச்சை வெளியாகியுள்ள நிலையில், அகிலேஷ் யாதவின் கேள்வி வேறு வகையில் முக்கியத்துவம் பெறுகிறது என்பது இதில் கவனிக்ககத்தக்கதாகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.