15/05/2017

மீண்டும் வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனை: 700 கிலோ மீட்டர் பறந்தது...


வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளதாக தென் கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.
வட கொரியா தொடர்ச்சியாக பல அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது.

இதற்கு அமெரிக்கா, சீனா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன.

ஆனாலும், இதை வட கொரியா காது கொடுத்து கேட்பதாக இல்லை.

இவ்வளவு கண்டனங்களுக்கு மத்தியிலும், வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை நேற்று நடத்தியுள்ளது.

வட கொரிய தலைநகர் பியோங்யாங்கின் உள்ள குஸாங்கிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை 700 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்துள்ளது.

இதை தென் கொரியா உறுதி செய்துள்ளது.

கடந்த மாதம் வட கொரியா மேற்கொண்ட இரு ஏவுகணை சோதனைகளில், ஏவுகணைகள் ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே வெடித்த நிலையில், இது 700 கிலோ மீட்டர் பறந்துள்ளது முக்கிய விடயமாகும்.

இந்த சோதனைக்கு தென் கொரியா மற்றும் ஜப்பான் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தென் கொரிய தலைவர் மூன் ஜே-இன் இது குறித்து அவசரமாக விவாதிக்க பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்டியுள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.