15/05/2017

அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் ஏன் ? அரசியல்வாதிகளின் சுருட்டலால் அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்...


அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 7000 கோடி பாக்கி வைத்துள்ளது தமிழக அரசு, அவர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளம், பென்சன், என ஊழியர்களுக்கு சேர வேண்டிய 7000 கோடி ரூபாயை கொடுக்காமல் நிலுவையில் வைத்துள்ளது தமிழக அரசு.

மேலும் ஆளுங்கட்சியினர் தலையீட்டில் பல கோடி சுருட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதை கண்டித்தும் நிலுவையில் உள்ள பணத்தை தரும் படியும் கோரிக்கை வைத்தே இந்த போராட்டம் நடைபெறுகின்றது.

அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் சம்மேளனத்தின் மாநில பொது செயலாளர் லட்சுமணன் இது தொடர்பாக முன்னர் கூறிய போது...

மாநிலம் முழுவதும், எட்டு போக்குவரத்து கோட்டங்களில், 1.40 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 65 ஆயிரம் தொழிலாளர்கள் ஓய்வு பெற்றனர். தினமும், 1 கோடி கி.மீ., பஸ்களின் பயண ஓட்டம் உள்ளது. 2.26 லட்சம் பயணாளிகள் தினமும் பயணம் செய்து வருகின்றனர்.

ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு எந்த விதமான பணபலன்கள் வழங்கப்படாமல் உள்ளது. தமிழகம் முழுவதும், 319 பணி மனைகளில், நாள்தோறும், 3000 பேர், ஆளுங்கட்சியின் ஆதரவுடன் எவ்வித பணியும் செய்யாமல், சம்பளம் பெற்று வருகின்றனர். இதன் மூலம் ஆண்டுக்கு சராசரியாக ஒன்றரை கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. பஸ்களுக்கு தேவையான உதரி பாகங்கள் இல்லாத அவல நிலையில், பஸ்களை இயக்க வேண்டிய நிலை உள்ளது.

போக்குவரத்து தொழிலாளர்களின், பி.எப்., தொகை, இன்சூரன்ஸ் தொகை, வங்கியில் வாங்கிய கடன் தொகை என தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்த தொகையை, அந்தந்த துறைக்கு செலுத்தாமல், 6000 கோடி ரூபாய் வரை போக்குவரத்து துறையினர் சுருட்டியுள்ளனர்.

இது போன்ற நிலையால் தொழிலாளர்கள் மிகுந்த மன வேதனைக்கு ஆளாகியுள்ளனர். எனத் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகளின் சுருட்டலாலும் பொறுப்பற்ற நிர்வாகத்தாலும் கடைசியில் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான்..

பொதுமக்கள் வருடத்தில் 364 நாட்கள் படும் கஷ்டத்தை ஓட்டு போடும் ஒரு நாளில் மறக்கடித்து விடுகின்றது பணம்..

பிறகு யாரை குறை சொல்லி என்ன பயன் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.