20/05/2017

இலுமினாட்டி கார்ல் மார்க்ஸ் (Karl Marx)..


கார்ல் மார்க்ஸ் இந்தப் பெயர் எனக்கு பதிமூன்று  வயதிலேயே அறிமுகமாகி விட்டது. கம்யூனிச சித்தாந்தம் குறித்தோ மார்க்சின்  பிற எழுத்துக்கள் குறித்தோ அப்பொழுது தெரியாது.

மனிதர்களின் பிரச்சனைக்கு இவர் ஏதோ ஒரு தீர்வு சொல்லியிருக்கிறார் போலிருக்கிறது என்பது அந்த வயதுப் புரிதல்.

பிறகு எனக்கு மார்சை ஒரு  கம்யூனிஸ்ட்டாகத் தான் தெரியும்..

சில வருடங்களுக்கு முன்பு இலுமினாட்டிகள்  குறித்த தேடலைத் தொடங்கினேன்.

வழக்கம் போல நம்முடைய மொழியில் அதற்கான தரவுகள் அவ்வளவாக இல்லை.

வெள்ளைக்காரன் காலைத் தானே பிடிக்க வேண்டும். பிடித்தேன்.

இலுமினாட்டிகள் குறித்து நம்பகமான புத்தகங்களாக எனக்கு அறிமுகப்படுத்தப்பட்ட புத்தகங்களில் முதல் புத்தகம் தொடங்கியே சோசலிச கொள்கைக்கும் இலுமினாட்டிகளின் இரகசிய திட்டங்களுக்கும் தொடர்பு இருப்பதாக சொல்லப்பட்டிருந்தது.

அந்த வகையில் மார்க்சுக்கும் இலுமினாட்டிகளுடன் தொடர்பு  உண்டு என்று சொல்லப்பட்டிருந்தது.

கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு குறித்து படித்த எந்த புத்தகமும் இதைப்பற்றி ஒருவரிக் கூட மூச்சுவிட்டது கிடையாது.

மிஞ்சிப் போனால் அவர் ஒரு யூத இனத்தை சேர்ந்தவர் என்பது மாத்திரம் இருக்கும்.

இலுமினாட்டிக் குறித்த புத்தகங்களே மார்க்ஸ் இரகசிய குழுக்களுடன் தொடர்புக் கொண்டவர் என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தது.

ஒருவேளை இது வலதுசாரி முதலாளித்துவத்தின் சூழ்ச்சியாக இருக்குமோ என்பது என்னுடைய முதல் கட்ட சந்தேகம்.

கார்ல்மார்க்ஸ் இலுமினாட்டிப் போன்ற சாத்தானிய வழிபாடு செய்யும் இரகசிய குழுக்களுடன் தொடர்பு கொண்டவர் என்று பொய்யைப் பரப்பி அதன் மூலம் கம்யூனிசத்தை பங்கப்படுத்த இதுவும் ஒரு சூழ்ச்சியாக இருக்கும் என்று முதலில் இதை ஒதுக்கித் தள்ளிவிட்டேன்.

ஆனால் பிறகு எழுந்த சந்தேகங்கள்...

அப்படியானால் வெகு சன முதலாளித்துவ சார்புநிலை புத்தகங்கள் ஏன் இந்த சூழ்ச்சியை பெரும் அளவில் பயன்படுத்தவில்லை?

உண்மையில் மார்க்ஸ் சாத்தானிய வழிபாடு செய்யும் குழுக்களுடன் தொடர்பிலிருந்தார். அதுவே அவருடைய படைப்புகளின் பிரதிபலிப்பு என்றால் கம்யூனிச கொள்கையை பலவீனமாக்க இதை விட ஒரு சிறந்த ஆயுதம் இருக்க முடியுமா என்ன?

கம்யூனிசத்தையும் மார்க்சையும் சமூக விரோதிகள், தீவிரவாதிகள் என்கிற அளவிற்கு புரட்டி எடுக்கும் முதலாளித்துவ பிரச்சார பீரங்கிகள் வதந்தி என்கிற அளவில் கூட இதைக் குறித்து வாய்திறக்காதது ஏன்?

இலுமினாட்டித் தொடர்பான புத்தகங்கள் மட்டுமே திரும்ப திரும்ப மார்க்சுக்கும் இரகசிய குழுவான இலுமினாட்டி களுக்கும் இருந்த தொடர்பை வலியுருத்தி வருவது ஏன் என்றுத் தெரிந்துக் கொள்ள மேலும் தேடியதில் கிடைத்த துப்பு மார்க்சின் இளமைக் கால படைப்புகளை அலச வேண்டும் என்பது.

மிகத் தீவிரமான மார்க்சிய அறிஞர்கள் கூட அவ்வளவாக மார்க்சின் இளமைக் கால படைப்புகளான கவிதைகளைப் பற்றிப் பொது வெளியில் பேச மாட்டார்கள். ஆனால் அதில் தான் இருக்கின்றன மார்க்சுக்கும் இலுமினாட்டிகளுக்கும் இருக்கும் தொடர்பு என்று சொன்னது அந்த துப்பு..

மார்க்சின் மீது இலுமினாட்டி குற்றச்சாட்டை வைக்கும் அனைத்து புத்தகங்களும் எடுத்துக்காட்டும் மார்க்சின் இளமைக் கால கவிதைப் படைப்பு ‘Invocation of One in Despair’ அதில் மார்க்ஸ் இப்படி எழுதுகிறார்…

So a god has snatched from me my all
In the curse and rack of destiny.
All his worlds are gone beyond recall!
Nothing but revenge is left to me.
I shall build my throne high overhead, Cold, tremendous shall its summit be.
For its bulwark - superstitious dread.
For its Marshal - blackest agony.
Who looks on it with a healthy eye,
Shall turn back, deathly pale and dumb,
Clutched by blind and chill mortality,
May his happiness prepare its tomb.

அவருடைய அடுத்த கவிதைப் படைப்பான Human Pride-ல் இப்படி எழுதுகிறார்….

With disdain I will throw my gauntlet
Full in the face of the world,
And see the collapse of this pygmy giant
Whose fall will not stifle my ardor.
Then I will be able to walk triumphantly
Like a god, through the ruins of their kingdom.
Every word of mine is fire and action.
My breast is equal to that of the Creator.

உங்களுக்கு John Milton எழுதிய The Paradise Lost காவியம் பரிட்சையம் என்றால் மார்க்சின் இந்த கவிதை வரிகளை இனம் கண்டுக் கொள்வதில் பிரச்சனையிருக்காது.

The Paradise Lost-ல் லூசிபர் (Lucifer) இறைவனுக்கு எதிராகப் பேசுவதுப் போல மில்டன் எழுதியிருப்பார். அந்த புத்தகத்தில் கதாநாயகன் அளவிற்கு லூசிபருக்கு வசனங்கள் இருக்கும். அந்த வசனங்களின் தன்மையை மேலே இருக்கும் மார்க்சின் கவிதைகளிலும் பார்க்கலாம்.

ஒரு விசயத்தைக் குறித்த கவிதையோ அல்லது கதையோ அந்த படைப்பிற்கு உரிய படைப்பாளனை அந்த விசயத்தோடு கண்டிப்பாக நூறு சதவிகிதம் தொடர்புடையவனாக கொண்டிருக்க வேண்டும் என்கிற கட்டாயமெல்லாம் கிடையாது என்பதால் இந்த கவிதை துப்பை ஒதுக்கினால் அடுத்த துப்பை எடுத்துப் போடுகின்றன இலுமினாட்டிக் குறித்த புத்தகங்கள்.

அது Moritz Moses Hess. ஜெர்மன் Social Democratic கட்சியை நிறுவியவர்களில் இவரும் ஒருவர்.

இவருக்கு கம்யூனிச ரப்பி (rabbi) மற்றும் நவீன சோசலிசத்தின் தந்தை என்கிற சிறப்பும் உண்டு. மார்க்சின் சிந்தினையில் பெரும் தாக்கத்தை செலுத்தியவர் இவர்.

மார்க்சின் சிந்தனைப் போக்கை மாற்றியவர் என்றுக் கூட சொல்லலாம்.

இவர் 1841-ல் Rheinische Zeitung என்கிறப் பத்திரிக்கையைத் தொடங்குகிறார்.

அதில் அப்பொழுது 24 வயதேயான மார்க்சை ஆசிரியர் ஆக்குகிறார். இவரே மார்க்சை இலுமினாட்டிக் குழுவிற்குள் கொண்டு வந்தவர் என்று சொல்லப்படுகிறது.

ஏங்கல்சை (Friedrich Engels) மார்க்சுக்கு முதலில் அறிமுகம் செய்து வைத்தவரும் இவரே. ஏங்கல்சும் முன்பே இவரால் இலுமினாட்டி குழுவிற்குள் கொண்டு வரப்பட்டவர் என்றும் சொல்லப்படுகிறது.

அன்றைய குழும்பிய ஜெர்மனிய இளைஞர்களின் குட்டையில் தனக்கான மீன்களைப் பிடித்தவர் Moritz Moses Hess. ஏங்கல்சை தான் எப்படி கம்யூனிஸ்டாக மாற்றினேன் என்பது குறித்து இப்படி எழுதுகிறார்….

என்னிடமிருந்து விடைப்பெற்று செல்லும் போது அவர் (ஏங்கல்ஸ்) முழுமையான துடிப்புமிக்க கம்யூனிஸ்டாக மாறியிருந்தார்.

இப்படித் தான் நான் அழிவிற்கான… (தொடரும்)...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.