28/06/2017

விவசாயத் தேவைக்காக கன்று குட்டிகளை விவசாயி ஏற்றி சென்றதால் பழனியில் கலவரம், தடியடி நடத்தி தடுத்து நிறுத்திய காவல் துறை...


விவசாயத்திற்காக விலைக்கு வாங்கி பழனியில் இருந்து  7 கன்று குட்டிகளை விவசாயி ஒருவர் வேனில் ஏற்றி சென்றுள்ளார்.

அதை பார்த்த சிலர் பசு பாதுகாவலர்கள் என தங்களை கூறிக் கொண்டு வண்டியை நிறுத்தி அவரையும் கன்று குட்டிகளையும் பழனி காவல் நிலையத்திற்கு வலு கட்டாயமாக அழைத்து சென்றுள்ளனர், வழக்கு பதிவு செய்யுமாறு போலிசாரை வற்புறுத்தியுள்ளனர். விவசாயியை அவர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகின்றது.

இதை பார்த்ததும் விவசாயிக்கு ஆதரவாக பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்களும் அங்கு கூடியுள்ளனர்.

கன்று குட்டிகள் விவசாயத் தேவைகளுக்காக கொண்டு செல்லப்படுகின்றது எனக் கூறி இரு தரப்பினரையும் போலிசார் சாமாதானம் செய்து கொண்டிருந்த நிலையில் வெளியே இருந்த இரு தரப்பினருக்கிடையே காவல் நிலையும் முன்பு கலவரம் வெடித்தது கற்களை வீசத் தொடங்கி அரசு பேருந்துகளை சேதப்படுத்தனர்.

உடனடியாக களத்தில் இறங்கிய அதிரடி படை போலிசார் கலவரக்காரர்கள் மீது தடியடி நடத்தி கலவரத்தை தடுத்து நிறுத்தினர்.

போலிசார் உடனடியாக செயல்பட்டதால் கலவரம் பெரிய அளவில் மாறி உயிர் சேதங்கள் ஏற்படமால் தடுத்து நிறுத்தப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மாட்டு இறைச்சிக்காக மாடுகளை விற்கக் கூடாது என்ற மத்திய அரசின் உத்தரவிற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது குறிப்பிடதக்கது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.