04/07/2017

உலகமே மரங்கள் நடுங்கள் வளருங்கள் என்று வலியுறுத்திக் கொண்டிருக்கும் போது மருத்துவக் குணங்கள் நிறைந்த அத்தி மரங்களை அபசகுனம் என்று வெட்டிச்சாய்க்கச் சொல்லும் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எந்தப் பட்டியலில் சேர்ப்பது?


அத்தி மரத்தின் பலன்கள் :

அத்திப் பழம் மருத்துவ குணங்கள் நிறைந்த பழமாகும். குறிப்பாக, சர்க்கரை நோய், சர்க்கரைப் புண், உடல் வீக்கம், கட்டிகள் நீர்க்கட்டிகள், புண், சொறி சிரங்கு, நமைச்சல் போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்கு அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது. மேலும் இவை கல்லீரல் – மண்ணீரல் அடைப்புகள், வீக்கங்களைப் போக்கப் பயன்படுகிறது.

கண்களின் பார்வையைக் கூட்டும் வைட்டமின் ஏ, நிக்கோடினிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் போன்றவை அத்திப் பழத்தில் பெருமளவில் அடங்கியிருக்கின்றன. மற்ற பழங்ளைக் காட்டிலும் அத்திப் பழத்தில் 2 முதல் 4 மடங்கு அதிகமாக தாது உப்புகளும், சத்துப் பொருட்களும் அடங்கியிருக்கின்றன. இரும்புச் சத்து அத்திப் பழத்தில் அதிகமாக இருப்பதால், இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இரத்தச் சோகை நோய் வராது. இரத்த உற்பத்தி அதிகரித்து, நோய் எதிர்ப்பாற்றலும் உடலில் அதிகரிக்கும்.

மூலிகையின் பெயர்- அத்தி
தாவரப்பெயர் – FICUS GLOMERATA, FICUS  AURICULATE
தாவரக்குடும்பம் – MORACEAE
பயன்தரும் பாகங்கள் – இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை ஆகியன.

மிக அரிதாகிக்கொண்டிருக்கும் இந்த மரங்களை பாதுகாக்க வேண்டியது காலத்தின் தேவை.

பதிவு - விஷ்வா விஸ்வநாத்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.