07/07/2017

இந்தியாவில் தேசிய இனங்களின் சமத்துவம் இருக்கிறதா?


சாதி ஆதிக்கமற்ற, வர்க்கச் சுரண்டலற்ற சமத்துவம் இருக்கிறதா?

தமிழ்நாட்டில் சாதி ஆதிக்கமற்ற, வர்க்கச் சுரண்டலற்ற சமத்துவம் இருக்கிறதா ?

இல்லை.

உலகத்தில் வாள் வலிமைக்கேற்ப அரசுகள் உருவாகக்கூடாது, ஒரு தேசிய இனத்திற்கு ஒரு தேசம் அமையவேண்டும் என்ற முதலாளிய ஜனநாயகக் கருத்து ஐரோப்பாவில் மறுமலர்ச்சிக் காலத்தை ஒட்டி எழுந்தது.

தேச அரசு உருவாக்கம் (Nation State formation ) என்று இதை அழைத்தார்கள்.

தேச அரசு உருவாக்கம் இன்னும் உலகில் முழுமை அடையவில்லை.

விடுதலையின்றி வேற்றார் ஆதிக்கத்தில் இருந்த தேசிய இனங்கள் ஒவ்வொன்றாக இப்பொழுது விடுதலைபெற்று சொந்த தேச அரசை உருவாக்கி வருகின்றன.

தேச அரசு நிறுவும் பணி நிறைவடைந்த பின், ஒரு தேசத்தின் உள்விவகாரத்தில் இன்னொரு தேசம் தலையிடக்கூடாது என்ற சனநாயகம் முழு அளவில் மலர்ச்சியடைந்த பிறகு, முடிந்தவர் முடியாதவரையும் ஏமாந்தவரையும் சுரண்டலாம், ஆதிக்கம் செய்யலாம் என்ற வர்க்க ஆதிக்கம்,   இனஆதிக்கம், சாதி ஆதிக்கம் ஆகியவை ஒழிந்த பிறகு உலக மனித குல ஒற்றுமை மெய்யாக உருவாகிடக் கதவு திறக்கும்.

அதற்க்குள் உலக ஒற்றுமை விரைவான எதிர்காலத்தில் உருவாகிவிடும் என்று கற்பனை செய்வது, நடைபழகும் குழந்தையை மோட்டார் சைக்கிள் ஒட்டச் சொல்வது போல் ஆகிவிடும்.

மிதிவண்டியைக் கண்டுபிடித்தவன் ஏன் விமானத்தைக் கண்டு பிடிக்கவில்லை என்று கேட்பது போல் ஆகிவிடும்.

உலக ஒற்றுமைக்கு முதல் தேவை ஒரு தேச மக்களின் ஒற்றுமை. உலக நாடுகள் ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட முதல் தேவை தேசங்களின் விடுதலை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.