09/08/2017

இரண்டு விதமான சைஸ் மற்றும் டிசைனில் 500 ரூபாய் நோட்டு, பாராளுமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்திய எதிர்கட்சி தலைவருக்கு பேச அனுமதி மறுப்பு...


எதிர்கட்சியை சேர்ந்த கபில் சிபல் இன்று பாராளுமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்,

நாட்டில் மிகப் பெரும் ஊழல் நடந்துள்ளது எனக் கூறி 2 விதமான சைஸ் மற்றும் டிசைனில் 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது ஒன்று நாட்டிற்கு மற்றொன்று கட்சிக்கு   எனக் கூறினார். மாறுபட்ட விதத்தில் உள்ள நோட்டுக்களை அவர் பாராளுமன்றத்தில் காண்பித்தார்.

அவரின் கருத்தை ஆதரித்து திருனாமுல் காங்கிரஸ் , சமாஜ்வாடி கட்சி , ஜனதாதல் உள்ளிட்ட கட்சிகள் பாராளுமன்றத்தில் பேசின, அவர்களிடம் உள்ள 500 ரூபாய் நோட்டுக்களையும் அவர்கள் காட்டினர்.

அவையில் இருந்த நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இதற்கு பதில் அளிக்க மறுத்து ”கேள்வி நேரத்தை எதிர் கட்சிகள் தவறாக பயன்படுத்துகின்றது, இது போன்று பேப்பரை காட்டி பேசுவதற்கு அவர்கள் முன் கூட்டியே அனுமதி வாங்கி இருக்க வேண்டும்” என தொடர்ந்து கூறி வந்தார்.

இது குறித்து தொடர்ச்சியாக பேச கபில் சிபலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

மேலும் இது குறித்து பேசிய பாஜக அமைச்சர் நக்வி அப்பாஸ் கபில் சிபலுக்கு இந்த நோட்டுக்கள் எங்கிருந்து கிடைத்தது இதன் நம்பக தன்மை என்ன எனக் கேள்வி எழுப்பினார்.

பின்னர் அருண் ஜெட்லி தரப்பில் ” நோட்டுக்களில் சிறிய அளவில் வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும் ஒரு பிரிண்டிங் பிரஸ் மற்றும் இன்னோரு பிரிண்டிங் ப்ரஸ்சில் அச்சிடப்படும் நோட்டுகளில் சிறு வித்தியாசங்கள் வரத்தான் செய்யும் எனக் கூறப்படது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.