02/08/2017

பேரிக்காய்...


சீசன் காலங்களில் மட்டும் கிடைக்கக்கூடியது பேரிக்காய். காய் என்ற அடைமொழியுடன் இருந்தாலும், இது உண்மையில் ஒரு வகை பழம்தான். மலைப்பகுதியில் விளையும் இந்த பேரிக்காயில், ஆப்பிளில் கூட இல்லாத நிறைய சத்துக்கள் உள்ளன.

செயல்திறன் மிக்க சத்துக்கள் பேரிக்காயில் அதிகம். உயர்தர நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதில் ஆன்டிஆக்ஸிடென்ட், உயர்தர பிளேவனாய்டுகள், பீட்டா கரோட்டீன் ஆகியவை உள்ளன. பேரிக்காயில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கழிவு மண்டலத்தை சுத்தம் செய்வதுடன், தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது.

உடலில் புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்கிறது. குறைந்த கலோரி கொண்ட பேரிக்காய் உடல் பருமனை குறைக்கிறது. இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பினை அகற்றுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி ஹார்மோன் வளர்ச்சிக்கு தூண்டுகோலாய் உள்ளது.

எலும்பு வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது. இதய பலவீனமாக உள்ளவர்களும், அதிக படபடப்பு உள்ளவர்களும் தினமும் 2 வேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும். கர்ப்பிணிகள் பேரிக்காய் சாப்பிட்டால் கருவில் உள்ள குழந்தையின் எலும்பு வலிமையடையும். தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும்.

கால்சியம், இரும்பு சத்துக்கள் குழந்தைகளின் தசை வளர்ச்சிக்கும் உடல் வலுவுக்கும் உதவுகிறது. இரவு உணவுக்குப் பின் பேரிக்காய் சாப்பிட்டால் மலச்சிக்கல் குறையும். பல் ஈறுகள் பலமாகவும், பல் வளர்ச்சிக்கும் பேரிக்காய் உதவுகிறது. இரைப்பை, குடல், பிற ஜீரண உறுப்புகளை பலமாக்கும் ஆற்றல் பேரிக்காய்க்கு உள்ளது. பசி உணர்வை தூண்டுகிறது.

கிராணி என்னும் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தும் ஆற்றல் பேரிக்காய்க்கு உள்ளது. சிலருக்கு திடீர் படபடப்பு, வியர்வை ஏற்பட்டு கை, கால்கள் உதறும். இவர்கள் பேரிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டால் இந்தப் பலவீனங்கள் நீங்கிவிடும். விட்டமின் பி சத்துக்கள் இதில் அதிகம் உள்ளதால் வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.

100 கிராம் பேரிக்காயில் உள்ள சத்துக்கள் :

கார்போஹைட்ரேட் - 15.23 கிராம்,
சர்க்கரை - 9.75 கிராம்,
நார்ச்சத்து - 3.1 கிராம்,
கொழுப்பு - 0.14 கிராம்,
புரதம் - 0.36 கிராம்,
விட்டமின் பி1 - 0.012 மி.கிராம்,
பி2 - 0.026 மி.கிராம்,
பி3 - 0.161 மி.கிராம்,
பி5 - 0.048 மி.கிராம்,
பி6 - 0.029 மி.கிராம்,
பி9 - 7 யூனிட்கள்,
சோலின் - 5.1 மி.கிராம்,
விட்டமின் சி - 4.3 மி.கிராம்,
விட்டமின் இ - 0.12 மி.கிராம், விட்டமின் கே - 4.4 யூனிட்,
கால்சியம்  - 9 மி.கிராம்,
இரும்பு - 0.18 மி.கிராம்,
மக்னீசியம் - 7 மி.கிராம்,
மாங்கனீசு - 0.048 மி.கிராம்,
பாஸ்பரஸ் - 12 மி.கிராம்,
பொட்டாசியம் - 116 மி.கிராம்,
சோடியம் - 1 மி.கிராம்,
துத்தநாகம் - 0.1 மி.கிராம்,
கலோரி சத்து - 239 ஜூல்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.