30/08/2017

விவசாயத்தில் சாதிக்கும் மாணவர்கள் வாழ்த்துக்கள்...


பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில், மாணவ மாணவியரே, காய்கறித் தோட்டம் அமைத்து, காய்கறிகள் மற்றும் கீரைகளை, சத்துணவுக்கு வழங்கி வருகின்றனர்.

பெரம்பலுார் மாவட்டம், வேப்பூர் ஒன்றியத்தில் உள்ளது, கொத்தவாசல் கிராமம். இங்கு, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, 151 மாணவ மாணவியர் படிக்கும் ஊராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. காய்கறி சாகுபடிபள்ளி வளாகத்தில்,5 சென்ட் நிலத்தில், மாணவ மாணவியரால், காய்கறித் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியர் இளங்கோவன், பள்ளியின் சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் இளவழகன் மற்றும் மாணவ மாணவியரின் கூட்டு முயற்சியால், முள்ளங்கி, கத்திரி, தக்காளி, வெண்டை, கொத்தவரங்காய் போன்றவை சாகுபடி செய்து, வாரத்திற்கு, 10 கிலோ அறுவடை செய்யப்படுகிறது.

வாரம், இரண்டு நாட்கள் மட்டுமே சாம்பார் சாதம் போடுவதால், தலா, 5 கிலோ காய்கறிகளை, ஒரு நாளைக்கு பயன்படுத்திக் கொள்ள முடிகிறது. இது மட்டுமல்லாமல் அகத்திக்கீரை, முருங்கைக் கீரை, அரைக்கீரை, தண்டுக்கீரை, முளைக்கீரை, கொத்தமல்லி உள்ளிட்ட கீரை வகைகளும் இங்கு பயிரிடப்பட்டுள்ளன. எஞ்சிய காய்கறிகளை விற்பனை செய்து, சாகுபடி செலவுக்காக பயன்படுத்திக் கொள்வதற்கான ஏற்பாட்டையும், மாணவர்கள் விரைவில் செய்ய உள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.