12/09/2017

பிற மாநில மொழிப் பற்றாளர்கள் அவர்கள் மாநில வங்கியில் பணம் செலுத்தும் போது அவர்களின் மொழியில் படிவத்தை நிரப்புகிறார்கள்...


இதில் என்ன அதிசயம் உள்ளது என்று நினைகிறீர்கள் அல்லவா?

ஒரு உதாரணம் கர்நாடக மாநிலம்...

அவர்கள் எழுத்துக்களை மட்டும் கன்னடத்தில் எழுதவில்லை.

வங்கிக் கணக்கு எண்ணையும் கன்னடத்தில் எழுதி உள்ளதை கவனியுங்கள்...

தமிழகத்தின் இந்தி வங்கிகளில் தமிழில் படிவத்தை நிரப்பிக் கொடுத்தாலே நம்மை ஏற இறங்க பார்க்கிறார்கள் வங்கி ஊழியர்கள்.

இந்த நிலையில் நாம் தமிழில் எண்களை நிரப்பினால் நம் படிவத்தை வாங்கவே மாட்டார்கள் வங்கி அதிகாரிகள்.

ஆனால் கர்நாடகத்தில் அந்த வங்கிப்படிவத்தை வாங்கிக் கொண்டு ஒப்புதலும் கொடுத்துள்ளது வங்கி.

கர்நாடகம் அல்லது தமிழகம், எந்த தேசமாக இருந்தாலும் இந்தி அரசு அலுவலகங்களில் அவரவர் மாநில மொழியை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்பதை மாநில அரசுகள் உறுதி செய்யாதவரை இந்தியின் ஆதிக்கம் தொடரும்.

இது போன்ற செய்கைகள் மூலமாக நாம் நமது மொழி மற்றும் மாநில உரிமையை நிலைநாட்டலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.