06/09/2017

​​​மக்கள் திரள் போராட்டங்கள் தான் அரசை அசைக்கும்...


அமெரிக்காவின் தெற்காசிய பிராந்தியத்திற்கான அதிகாரி அவர். ​ராபர்ட் பிளேக், கிட்டத்தட்ட 10-15 நாடுகளின்  கொள்கையையே முடிவு செய்யும் அதிகாரம்.

பல லட்சம் ஈழ மக்களின் படுகொலையின் சூத்திரதாரி.

2013 மாணவர் போராட்டம்தான் அவரின் அதிகாரத்தை அசைத்து பார்த்தது.

ஈழ போரில் நாங்கள் நேரடியாக ஈடுபடவில்லை, இந்தியாவின் வழிகாட்டுதலின்படி சில உதவிகள்தான் செய்தோம் என்று அறிக்கை விட்டார்.    

அதுதான் மக்கள்திரள் போராட்டங்களின் சக்தி, இங்கு KFC யும் மெக்டொனால்டும் தாக்குதலுக்கு உள்ளானபின் அமேரிக்கா பின்வாங்கியது இது வரலாறு..

2012 ல் ப.சிதம்பரம் அரசு தூக்கு அறிவித்த போது யாரும் நம்பவில்லை, பேரறிவாளனும், முருகனும் சாந்தனும் இன்று உயிரோடு இருப்பார்கள் என்று,

10 ஆயிரம் இளைஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தை முற்றுகையிட்டததும் வரலாறு,

கூட்டுமனசாட்சி என்று அப்சல் குருவை நீதிமன்றங்கள் கொன்றபோது கொண்டாடியவர்கள், மூவர் விடுதலையில் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு நீதிமன்றம் ஆட்பாட கூடாது என்று கதறியது வரலாறு..

ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றி சொல்லவே தேவையில்லை, உச்சநீதிமன்ற தீர்ப்பை உடைத்து அரசியலமைப்பு உரிமையை வென்று காட்டியது வரலாறு..

இதெல்லாம் ஏனென்றால் பொதுமக்கள் பங்களிக்காத அரசியல் மாற்றத்தை தாராது என்பதை புரிந்து கொள்ளத்தான்.

எதிர்ப்பை வெளிப்படுத்தும் வடிவங்கள் பற்றி குழம்பிக்க வேண்டியதில்லை,  கூடும் இடங்களுக்கு கருப்பு சட்டையுடனோ, பட்டையுடனோ போகலாம், விளக்கம் கேட்பவரிடம், சக மனிதனிடம் நம்முடைய அரசியல் உரிமைகள் பற்றி பேசுவது கூச்சபட வேண்டியதில்லை.

எதிர்ப்பை பதிவு செய்து கொண்டே இருக்க வேண்டும், இன்றைக்கு சாத்தியமில்லாமல் கூட போகலாம், ஆனால் எதிர்காலம் கனியும். எத்தனை நாள் ஆனாலும் பேசிக்கொண்டே இருக்கலாம், பவ்திக மாற்றம் அடைவது அப்படித்தான்.

கோரிக்கையில் தெளிவாக இருக்கணும் வடிவ நேர்த்தி அனுபவத்தில் கிடைக்கும்.

காந்தியின் மீது பல்வேறு விமர்சனங்கள் இருக்கலாம், ஆனால் மக்கள் திரள் அரசியலின் வித்தகன் அவர், ராட்டினமும், உப்பும் இந்த துணைக்கண்டம் முழுதும் உள்ள மக்களோடு அவரை உரையாட வைத்தது என்பதை படிக்க வேண்டும்.

பிரிட்டிஷார் வருகைக்கு முன்புவரை விவசாயிகளுக்கு இணையான நெசவாளர்களை கொண்டிருந்த நாடு இது, அதுதான் ராட்டினத்தை சுதேசி ஆடைகளை மிகப்பெரிய மக்கள் இயக்கமாக மாற்றி காந்திக்கு கை கொடுக்கிறது..

ஆகையினாலே உள்ளடக்கத்தில் உறுதியாக இருங்கள் வடிவ நேர்த்தி அனுபவத்தில் அமையும்..

நீட் தமிழகத்திற்கு வேண்டாம்.  அதுவரை என் எதிர்ப்பு தொடரும்..

மக்கள் திரள் போராட்டங்கள்தான் அரசை அசைக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.