29/09/2017

அமானுஷ்யம் : மர்மமும் டுமாஸ் கடற்கரையும்...


குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரத்தில்  அமைந்துள்ள கடற்கரையின் பெயர் தான் டுமாஸ் (dumas). டுமாஸ் என்னும் கிராமபுரம் ஒட்டி அமைந்துள்ளது.

டுமாஸ் கடற்கரையின் மணல் கருப்பு நிறமாகவும் சிறிது சாம்பல் நிறமாகவும் காணப்படுகிறது. இதுவே இதன் திகில் கதைகளுக்கு ஆரம்பம்.


அங்கு பல மக்கள் காணாமல் போனதாகவும், சில இரவுகளில் விசித்திரமான விஷயங்கள் நடைபெருவதாகவும் கூறப்படுகிறது.

முன்னோர் காலங்களில் அங்கு இடுகாடு (சுடுகாடு)  இருந்துள்ளது அதன் காரணமாகவே அங்கு கருப்பு நிற மணல் காணப்டுகிறது.

அங்கு இருக்கும் மக்கள்,இங்கு கடற்கரையில் மக்கள் காணாமல் போவதுபோல் ஏதும் நிகழ்வது இல்லை என்று மறுக்கிறார்கள்.


இந்தியாவில் அதிக திகிழ்வவூட்டும் இடங்கள் பட்டியலில் முதல் பத்தில் இன்றும் இடம் பிடிக்கிறது.

அதற்கு காரணம் அங்கு நிகழும் கருப்பு நிற மணல் மற்றும் இரவில் சூழும் திகில் இருட்டு தான்.

சுற்றுலா பயணிகள் அங்கு புகைப்படம் எடுக்கும் போது அதில் எதோ மர்மமான உருவங்கள் தென்படுவதாக
கூறுகின்றனர்.


அதற்கு காரணம் அங்கு அதிகளவில் காணப்படும் தூசு மற்றும் சாம்பலே என்றும் சிலர் கருதுகின்றனர்.

இன்றும் இரவில் அங்கு யாரும் செல்வதில்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.