29/09/2017

வெட்கக் கேடு: ஐநாவில் தமிழக அரசியல் கட்சிகள் சண்டை...


ஜெனீவா ஐநா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் ஒரு அரசியல் தலைவருடன் சிங்களர்கள் சண்டையிட்டார்கள் என்கிற செய்தி மட்டும்தான் தமிழக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. ஆனால், அங்கு தமிழக அரசியல் கட்சிகள் தங்களுக்குள் சண்டையிட்டு தமிழ்நாட்டு மானத்தை கப்பலேற்றிய நிகழ்வும் நடந்தது.

தமிழ்நாட்டின் மூன்று பிரபலங்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் தான் ஜெனீவாவில் சண்டை போட்டவர்கள் ஆகும். பிரபாகரனை அந்த காலத்திலேயே நேரில் சந்தித்த மூத்த 'திராவிட' அரசியல் தலைவர், பிரபாகரனை நேரில் சந்திததைச் சொல்லியே 'தமிழ்' கட்சி நடத்தும் இன்னொரு நடிகரின் தொண்டர்கள், ஒரு சினிமா இயக்குநர் ஆகிய மூன்று தரப்பினர் ஐநாவில் மோதிக்கொண்டனர்.

முதல் சம்பவம்: செப்டம்பர் 18 ஆம் தேதி அன்று ஈழத்தமிழர்கள் ஐநா சபைக்கு முன்பாக ஊர்வலம் நடத்தினர். அந்த ஊர்வலத்தின் முடிவில் தலைவர்களை மேடையில் ஏற்றினர். அப்போது மிகவும் இளையவரான சினிமா இயக்குநரை மேடையில் அமர வைத்து விட்டு, பிரபாகரனையே நேரில் சந்தித்த அந்த மூத்த 'திராவிட' தலைவரை பார்வையாளர்கள் வரிசையில் உட்கார வைத்துள்ளனர். இதனால் அவமானப்பட்ட அந்த திராவிடக் கட்சித் தலைவர் கூட்டத்திலிருந்து கோபித்துக்கொண்டு வெளியேறியுள்ளார். பின்னர் ஈழத்தமிழர்கள் சிலர் பஞ்சாயத்து செய்து, அந்த தலைவரையும் மேடையில் அமரச் செய்தனர்.

இரண்டாவது சம்பவம்: செப்டம்பர் 22 ஆம் தேதி அன்று மாலை 4 மணிக்கு ஐநா கூட்ட அரங்கு 28-ல் ஈழத்தமிழர்கள் நடத்திய ஒரு துணைக்கூட்டத்தில் அந்த 'திராவிட' அரசியல் தலைவர் பேச முற்பட்ட போது, பிரபாகரனை நேரில் சந்தித்ததைச் சொல்லியே 'தமிழ்' கட்சி நடத்தும் நடிகரின் ஆதரவு ஈழத்தமிழர்கள் சர்ச்சையில் ஈடுபட்டனர். அந்த 'திராவிட' அரசியல் தலைவர் ஒரு தெலுங்கர். அவர் எப்படி தன்னை தமிழர் என்று கூறிக்கொள்ளலாம் என்று அவர்கள் சண்டையிட்டனர்.

தமிழ்நாட்டு அரசியல் தெருச்சண்டை இப்போது ஐநாவில் சந்தி சிரிக்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.