08/09/2017

நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினால் நீதிமன்ற அவமதிப்பாம் - உச்சநீதிமன்றம்...


ஆமா,. இதுக்கு முன்னாடி நீங்க அவமானப்பட்டதே இல்ல..  காவிரிப் பிரச்சினையில காரித்துப்புனாங்களே கர்நாடகக்காரனுங்க,. மறந்துட்டீங்களா?.

காவேரிமேலாண்மை அமைக்கச்சொல்லி மத்திய அரசுக்கு உத்தரவு போட்ட்டீர்கள்.. உத்தரவுபோட உங்களுக்கு அதிகாரம் இல்லை என்றது மத்திய அரசு.அப்போது என்ன ஆனது உங்கள் அதிகாரம்?

ஆதாரைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று சொன்னீர்கள். இன்னமும் வேகமாக ஆதாரைக் கேட்கிறார்கள். எங்கே போனது உங்கள் அதிகாரம்?

சாமான்யமக்களின் உரிமைப்போரை நசுக்குவதற்கு மட்டும்தான் உங்களுக்கு அதிகாரம் இருக்கிறதா? எல்லா கன்றாவியும் நமக்கு மட்டும்தான் பொருந்தும் போல. மற்றவர்களிடம் எடுபடுவதில்லை.

ஜனநாயக நாட்டில் மக்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தும் அடிப்படை உரிமையை இந்திய அரசியலமைப்புச் சட்டம் கொடுத்திருக்கிறது.. ஒரு ஜனநாயக நாட்டில் உரிமையை வெளிப்படுத்த அடிப்படை உரிமை இருக்கும் போது அந்த உரிமையை நடைமுறைப்படுத்தாதே என்று சொல்வது எந்த வகையில் நியாயம் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.

உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு தவறாக இருப்பின் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை. நீதிபதிகளும் தவறு செய்வார்கள் என்றுதான் அப்பீல் என்ற ஒன்றே இருக்கிறது. ஆனால் அப்பீல் முடிவு மாறினால் முதலில் தீர்ப்பு கொடுத்த நீதிபதிக்கு தண்டனை கிடையாது. தவறான தீர்ப்பில் தண்டனை அனுபவித்தவன் அனுபவித்ததுதான்.

இப்படிப் பல வழக்குகளிலும் அப்பீல் செய்யப்பட்டு நீதிபதிகளின் முகத்திரையைக் கிழித்துத் தொங்கவிட்டிருக்கிறார்கள் என்பதை அவர்கள் மறந்துவிடக்கூடாது.

உங்களது அதிகாரத்தை எங்கள் மீது பாய்ச்சுவதற்கு முன்பாக, உண்மையிலேயே உங்களுக்கு என்னதான் அதிகாரம் இருக்கிறது என்பதையும், உங்கள் அவமானத்தின் அளவீடு எதுவரை என்பதையும் மீண்டும் ஒருமுறை நீங்கள் பரிசீலித்துக் கொள்வது நல்லது.

போராட்டத்தினால் பிறந்ததுதான் இன்றைய சுதந்திர இந்தியா. போராட்டத்திற்கு தடை என்பது அப்பட்டமான மனித உரிமை மீறல். மூளையைக் கழற்றிவிட்டு யோசிப்பதால் வந்த விளைவு இது. விடாதீர்கள், இன்னும் நிறைய அடியுங்கள். அப்போது தான் அடுத்த தேர்தல் வரை அந்த வலிகள் மறக்காமல் இருக்கும்.

நீட்டை எதிர்த்துப் போராடுவதற்கு மட்டும்தானே தடை. அனிதாவுக்கு அஞ்சலி என்ற பெயரில் கூடினால்?

சட்டம் உங்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் தெரியும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.