01/10/2017

மதம் மாறி திருமணம் செய்த 60 அப்பாவி பெண்களை அடைத்து வைத்து கொடுமை படுத்தும் பாஜக வின் ஆர்.எஸ்.எஸ் ஆசிரமம்...


கேரள மாநிலம் கொச்சியில் 28 வயது பெண் ஒருவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அஃபிடவிட்டில், இந்துப் பெண்ணாகிய தான் ஒரு கிறிஸ்தவரை மணமுடித்த காரணத்தினால் அந்த திருமணத்தை ரத்து செய்யக்கோரி திரிபுநிந்துராவில் உள்ள யோகா மையம் ஒன்றில் 22 நாட்கள் சிறை தான் வைக்கப்பட்டதாக கூறியுள்ளார். மேலும் அங்கு தான் உடல் ரீதியிலும் மன ரீதியிலும் கடுமையாக துன்புறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அந்த யோகா மையத்தில் தன்னைப் போன்றே வேற்று மதத்தினரை திருமணம் செய்த மேலும் 60க்கும் மேற்ப்பட்ட பெண்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 27 ஆம் தேதி மருத்துவர் சுவேதா காணாமல் போனதாக அவரது கணவர் ரிண்டு ஐசக் ஹேபியஸ் கார்பஸ் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இதற்கு முன்னர் இவர்கள் இருவரும் பீச்சியில் உள்ள கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். பின்னர் தங்களது திருமணத்தை சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் பதிவும் செய்துள்ளனர்.

ஸ்வேதாவின் கூற்றுப்படி, சுமார் பத்து மாத காலம் ஐசாக்குடன் அவர் வாழ்ந்ததாகவும், அவரை அவரது பெற்றோர் அந்த யோகா மையத்திற்கு ஆலோசனைக்காக செல்லுமாறு அறிவுறுத்தியதாகவும் தெரிகிறது.

அங்கு சென்றதும் தனக்கு பல சித்திரவதைகள் கொடுக்கப்பட்டது என்று அவர் தெரிவித்துள்ளார். யோகா மையத்தில் பெரும்பாலும் தனது கைகள் கட்டப்பட்ட நிலையில் இருக்கும் என்றும் அங்கு பைபிள் மற்றும் குர்ஆனில் உள்ள முரண்பாடுகள் என்று அங்கு அடைக்கப் பட்டவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இத்துடன் அங்குள்ள கழிப்பறைகளுக்கு கதவுகள் கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அங்குள்ளவர்களில் சிலர் பல வருடங்களாக அங்கு அடைக்கப்பட்டவர்கள் என்றும் பலருக்கு பெரும் நோய் இருத்தும் அவர்களுக்கு எந்தவித மருத்துவமும் வழங்கப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தனது மனுவில், அந்த யோகா மையத்தில் நடைபெறும் கொடுமைகளில் பெண்களை இந்து மதத்திற்கு மாற்றுகிறோம் என்கிற பெயரில் பாலியல் தொந்தரவுகளும் நடைபெறுகிறது என்றும் அந்த யோகா மையத்தில் உள்ள 65 பெண்களும் பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று மருத்துவர் சுவேதா குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த யோகா மையத்தில் சித்திரவதைக்கென்று தனி ஒரு கூடம் ஒன்றே உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தன்னை துன்புருத்துபவர்களிடம் இருந்து தப்ப, அவர்கள் கூறுவது அனைத்தையும் ஒப்புக்கொள்வது போல சுவேதா நடித்துள்ளார். ஒரு சமயம் சுவேதாவை அவரது பெற்றோர் முவட்டுபுழாவில் உள்ள அவரது சகோதரி வீட்டிற்கு அழைத்துச் சென்ற போது அங்கிருந்து அவர் தப்பியுள்ளார். தன்னை கொடுமை படுத்தியவர்களிடம் இருந்து தனக்கு பாதுகாப்பு கோரியதோடு இந்த சட்ட விரோத கிரிமினல் குற்றம் புரிந்தவர்கள் மீது நீதிமன்ற விசாரணை வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் இந்த வழக்கில் குறிப்பிட்ட அந்த யோகா மையத்தையும் ஒரு தரப்பினராக சேர்த்து அவர்களின் கருத்தைப் பெற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உதயம்பேரூர் பஞ்சாய்த், கண்டனாட்டில் மனோஜ் என்கிற குருஜி நடத்தும் யோகா வித்யா கேந்திராவை மூட உத்தரவிட்டுள்ளது. மேலும் ஸ்ரீஜீஷ் என்ற ஒருவரையும் கடந்த திங்கள் கிழமை காவல்துறை கைது செய்துள்ளது. அங்கு யோகா ஆசிரியர்களாக பணியாற்றி வந்த மனோஜ் உட்பட நான்கு பேர் தலைமறைவாக உள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.