25/10/2017

சேலத்தில் தவணை முறையில் மோட்டார் சைக்கிள் தருவதாக மோசடி...


சேலம் மாவட்டத்தில் நூதன முறையில் ரூ.5 கோடி ரூபாய் வரை மோசடி செய்த நபரின் அலுவலகத்தை பொதுமக்கள் அடித்து உடைத்தனர்.

சேலம்,புதிய பஸ் நிலையம் அருகில் அமேஸ் என்ற பெயரில் மார்க்கெட்டிங் நிறுவனத்தை சேலம், அம்மாப் பேட்டையை சேர்ந்த கோபிநாத் என்பவர் கடந்த 5 மாதங்களாக நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தில் 2 ஆயிரம் ரூபாய் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை முன்பணமாக வாங்கிக் கொண்டு 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புதிய மோட்டார் சைக்கிள்களை தவணை முறையில் கொடுப்பதாக கோபிநாத் அறிவித்திருந்தார். ஆனால் கூறியபடி மோட்டார் சைக்கிள் தராததால், கோபம் அடைந்த பொதுமக்கள் கோபிநாத் நிறுவனத்துக்குள் புகுந்து அங்கிருந்த கணிணி, குளிர் சாதன பெட்டி உள்ளிட்ட பொருட்கள் சூறையாடினர்.

மேலும் மேஜை நாற்காலி, ஏ.சி உள்ளிட்ட பொருட்களை தூக்கி சென்றனர். இதை அறிந்த சேலம், பள்ளப்பட்டி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பொது மக்கள் தூக்கி சென்ற பொருட்களை பறிமுதல் செய்தனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.