16/10/2017

சாதிப்பெயர் வேண்டாம் என முதன் முதலாகத் தீர்மானம் கொண்டு வந்தது தமிழர் தான்...


1929 பெப்ரவரி 17,18 ஆம் திகதிகளில் செங்கல்பட்டிலுள்ள தியாகராயநகர் பனகல் அரசர் மண்டபத்தில் நடைபெற்ற தமிழ் மாகாண சுயமரியாதை மாநாட்டில் சாதி பட்டங்களை பெயருடன் பயன்படுத்துவதை விட்டுவிட வேண்டும் என்றும் மத, சாதி அடையாளங்களை அணிந்து கொள்ளக் கூடாது எனவும் தீர்மானத்தை சிவகங்கை தாலுக்கா போர்டு தலைவர் ராமச்சந்திரன் சேர்வை கொண்டு வந்தார்.

நானும் இன்றிலிருந்து என் பெயரை வெறும் ராமச்சந்திரன் என்று மாத்திரம் வைத்துக் கொள்கிறேன் எனக் கூறி அதற்குச் சட்டத்தின்படி என்ன வழி இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

இவர் இன்றைய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பாக்கியராசன் சேதுராமலிங்கத்தின் ( Packiarajan Sethuramalingam ) தாத்தா ஆவார்.

இது குறித்து அவர் எழுதிய பதிவை ஒளிப்பிரதியாகக் காணலாம்.

இவ்வாறு பெயருக்குப் பின்னால் சாதியை வைத்துக் கொள்ளக் கூடாது என்று சமத்துவ நோக்கத்தில் சிந்தித்தவர் ஒரு தமிழர்.

ஆனால் அதையும் இவர்கள் மறைத்து பிடுங்கி கன்னட ஈ.வெ.ராமசாமி நாயக்கருக்கு கொடுத்து விட்டனர்.

சரி இந்தக் கொள்கை நிறைவேற்றப்பட்டு 19 வருடங்களின் பின்னர் 1948 இல் நடந்த திருமண அழைப்பிதழ் ஒன்றைப் பார்ப்போம்.

தனது 14 வயதில் அரசியலுக்கு வந்ததாக பெருமையடித்துக் கொள்ளும் திமுக  கருணாநிதி அடைப்புக்குறிக்குள் தாயாளுவின் தந்தை பெயரை பிள்ளை என்ற பின் ஒட்டுடன் போட்டுள்ளார்.

சாதி ஒழிப்புப் போராளிகளில் ஒருவராக காட்டப்படும் கருணாநிதி தனது சின்னமேளம் சாதிக்கு இசைவேளாளர் என்று பெயரை மாற்றிய சாதனையாளர்.

ஒழிக்கிற சாதிக்கு ஏன் பெயரை மாற்றுவான்.

அது மட்டுமல்ல கருணாநிதியின் வீட்டில் நடந்த ஒழுங்கு செய்த திருமணங்கள் அனைத்தும் அவரின் சொந்தக் சாதிக்குள்ளேயே நடந்துள்ளன...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.