22/11/2017

கரூர் மாவட்டம் ப.உடையாப்பட்டியில் பிறந்தவர் தமிழ் ஆசிரியர் வீரப்பன்...


1965-ல் நடைப்பெற்ற இந்தி எதிர்ப்பு போரட்டத்தின் போது தனது உடலை தீக்கு இரையாக்கி ஹிந்தி. ஒழிக. தமிழ் வாழ்க. என  கரும்பலகையில் எழுதி அவர் பணியாற்றிய பள்ளி அருகே 11.02.1965-ம்.. ஆண்டு கடவூரை அடுத்த அய்யம்பாளையத்தில் வீரமரணம் அடைந்தார்.

இவரது உடல் மணப்பாறை மாமுண்டி ஆற்றங்கரையில் அடக்கம் செய்யப்பட்டது.


கடந்த 2015 ம் ஆண்டு இவ்வாசிரியருக்கு வெண்கலசிலை உருவாக்கி ஊர் பகுதியில் நிறுவ முயன்று விழா ஒன்றை 30.01.2016 அன்று ஏற்பாடு செய்தனர்.

இதற்கு அரசு தடைவிதித்ததால் வீடு ஒன்றில் சாக்கில் கட்டியவாறு சிலை வைக்கப்பட்டு படத்திறப்பு மட்டுமே நடந்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் அரசு அனுமதி அளிக்காதல் இன்றும் அதே நிலையே.!நிலவுகிறது.

மேலும் தற்போது பெய்த மழையினால் சிலை வைப்பதற்கு பல லட்சம் செலவில்  உருவாக்கப்பட்ட மணிமண்டபத்தில் செடிகள் வளர்ந்துவிட்டுன.


எனவே  எதிர்வரும் தலைமுறையினர் மொழியுணர்வை  ஊட்டும் வழிகாட்டியாகவும் விளங்க.

மொழிப்போர் தியாகிகள் தினத்திற்கு இரு மாதங்களே.!உள்ள நிலையில் இந்த பழுதுகளை நீக்கி சரிசெய்வதற்கு ஏதுவாக

இந்த ஆண்டாவது மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என்பது ஊர் பொதுமக்கள் & தமிழ் ஆர்வலர்கள் அரசுக்கு வேண்டுகோளாக தெரிவிக்கின்றனர்.

னவே அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊடகங்கள் மறைத்த உண்மை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.