08/11/2017

புட்டிகளில் விற்கப்படும் தண்ணீரில் தாதுப் பொருட்களின் அளவு சரிவரப் பராமரிக்கபடாததால் எலும்பு, சிறுநீரகப் பாதிப்புகள் அதிகரிக்கும்...


இவற்றில் 70%க்கு மேல் உணவுப் பாதுகாப்புத் துறை நிர்ணயம் செய்துள்ள அளவுகோலைப் பின்பற்றி தயாரிக்கப் படுவதில்லை.

சுத்திகரிக்கப்பட்டதாகக் கூறப்படும் நீரில், மணம்,சுவை,நிறம்,கலங்கும் தன்மை, கார,அமிலத் தன்மை (PH) , நீரில் கலந்துள்ள தனிமம் (TDS=Total dissolved solutes) ஆகியவற்றுக்கு மட்டுமே புட்டிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் முக்கியத்துவம் அளிக்கின்றன.

வயிற்றுப்போக்கு, டைபாய்டு நோய்க் கிருமிகளை கட்டுப்படுத்துவதற்கு நுண்ணுயிரி பகுப்பாய்வுக்கூடம் இந்நிறுவனங்களில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்திய தர நிர்ணய ஆணையத்திடம் சான்றிதழ் பெறும் சமயத்தில், இக்கூடம் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறும் பல குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள், அதன்பின்னர் ஆய்வுக்கூடத்தை முறையாகப் பயன்படுத்துவதில்லை.

குடிநீர் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் தன்சுத்தம், சுற்றுப்புறத்தூய்மை, மறு பயன்பாட்டுக்குக் கொண்டௌவர்ப்படும் கேன்களைச் சுத்தம் செய்தல் போன்றவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.

ஒரு நிறுவனத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை 48 மணி நேரம், ஆலை வளாகத்தில் வைத்து கண்காணித்து, நுண்ணுயிரி பகுப்பாய்வு செய்து, அதன் தரத்தை உறுதி செய்தபின்னரே விற்பனைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற விதிமுறையை முன்னணி நிறுவனங்களே கூட பின்பற்றுவதில்லை.

தொழில்போட்டி காரணமாக, பல முகவர்கள், கேன்களைச் சுத்தம் செய்யாமலும், சம்பந்தப்பட்ட தயாரிப்பு ஆலைகளுக்கு செல்வதைத் தவிர்த்து, அருகில் அமைந்துள்ள மாற்று நிறுவனங்களில் தண்ணீரைப் பிடித்து விற்பனை செய்வதால், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரின் சுத்தம் கேள்விக்குறியாகவே உள்ளது.

நாளொன்றுக்கு குறிப்பிட்ட அளவு தண்ணீரை மட்டுமே நிலத்தடியிலிருந்து எடுக்க வேண்டும் என்பதன் அடிப்படையிலேயே அனுமதி பெறப்பட்டாலும்கூட, இந்நிறுவனங்கள் இந்த அளவுகோலை மீறுவது குறித்து அரசு அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுவதில்லை.

காந்தி கிராம் பல்கைக்கழக மனையியல்துறை உதவிப் பேராசிரியை விஜயாஞலி கூறியது...

உள்ளாட்சி அமைப்புகள் வினியோகிக்கும் குடிநீரைக் காய்ச்சி குடிப்பதே உடல்நலத்துக்கு சிறந்தது.

தண்ணீர் மூலம் ஏற்படும் பாதிப்புகள் உடனடியாகத் தெரியாததால், பொதுமக்கள் இதுகுறித்துக் கவலைப்படுவதில்லை.

ஆனால், எதிர்காலத்தில், அதிக ஆபத்து ஏற்படப்போவது குறித்து விழிப்புணர்வு அவசியம்...

தினமணி (07.11.2016) பக்கம்7ல் வெளிவந்துள்ள கட்டுரையிலிருந்து..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.