01/12/2017

44 ஆயிரம் கோடி நட்டத்தில் கொக்கக்கோலா.. இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்து இருக்கிறது கொக்கக்கோலா...


கொக்ககோலா கம்பெனி இந்தியாவில் இந்திராகாந்தி காலத்தில் தடை செய்யபப்ட்டது. கொக்கக்கோலா இந்திய குளிர்பானங்களை எல்லாம் காலி செய்து விட்டு மொத்த இந்தியாவின் மொத்த குளிர்பான சந்தையைப் பிடித்துக் கொண்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த இந்திய குளிர்பான முதலாளிகள் இந்திராவிடம் முறையிட இந்திரா காந்தி கொக்கக்கோலாவுக்குத் தடை விதித்தார். அன்று வெளியேறிய கொக்கக்கோலா அதன்பிறகு காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவ் காலத்தில் உலகமயமாக்கம் என்று போர்வையில் இந்தியாவினுள் நுழைந்தது.

இந்தமுறையும் கொக்கக்கோலா இந்திய குளிர்பான சந்தையை தன வசப்படுத்திக் கொண்டது. இந்திய குளிர்பான நிறுவனங்களை  எல்லாம் அழித்துப்போட்டது. மட்டுமல்லாமல் இந்திய குளிர்பான நிறுவங்களை எல்லாம் அது விலைக்கு வாங்கி கொண்டது.

1886  ஆம் ஆண்டு ஜான் பெம்பர்ட்டன் என்னும் ஒரு மருந்தாளுநரால் உருவாக்கப்பட்ட  கொக்கக்கோலா தனிப்பட்ட ரகசியமான கலவையை கொண்டு தயாரிக்கப்படுவதாய் சொல்லப்பட்டது. அதன் தயாரிப்பும், அதன் கலவை ரகசியமும் அந்த நிறுவனத்தின் மிக முக்கியமான நாலு பேருக்கு மட்டுமே தெரியும் என்றும், கொக்கக்கோலா தயாரிப்பு ரகசியத்தை எப்படியாவது தெரிந்து கொள்ளவேண்டும் என்று கொக்கக்கோலாவின் எதிரி நிறுவனங்கள் பலகோடி ரூபாய் செலவு செய்து  அந்த  நாலுபேரையும் தேடிப்பிடித்து கடத்தி செல்ல நினைத்தார்கள். 

ஆனால் அந்த நாலுபேரும்  ஒரே இடத்தில இருக்க மாட்டார்கள் என்றும், வெவ்வேறு நாடுகளில் வெவேறு விமானங்களில் இருபத்தி நான்கு மணி நேரமும் பறந்துகொண்டே இருப்பார்கள் என்றும் பல கதைகள்  நான் சிறுவயதில் கேட்டிருக்கிறேன். கொக்கக்கோலா தயாரிப்பு ரகசியம் இன்றுவரையில் மர்மமாகவே இருக்கிறது. அதுபோன்ற ஒரு பானத்தை இன்னொரு நிறுவனத்தால் தயாரிக்க முடியவில்லை என்பதாலேயே கொக்கக்கோலா நிறுவனம் உலகின் முதல் குளிர்பான நிறுவனமாக இருக்கிறது என்றும்  சொல்கிறார்கள்.

நான் கொக்கக் கோலாவை குடித்தவரையில் அதில் எந்த ரகசியமும் இருப்பதாக தெரியவில்லை. காப்பிக்கொட்டை தண்ணீரில் வெறுமனே  சோடா அடித்து  தருவதாகவே அதன் சுவை இருக்கிறதே தவிர பிரமாதமாக எதுவும் இல்லை.

அப்பேர்ப்பட்ட கொக்கக்கோலா நிறுவனம் இப்போது இந்தியாவை விட்டு வெளியேறுவதாக சொல்கிறது. அது இருப்பதால் எந்த லாபமும் நமக்கு இல்லை, நாட்டம் மட்டும் தான். என்பதால் அது வெளியேறுவதே நல்லது.

நம் தேசத்து தண்ணீரை எடுத்து அதில் காப்பிக்கொட்டை சாயத்தைக்  கரைத்து நமக்கே அநியாய விலைக்கு விற்கிறான் என்பதை விட என்ன இருக்கிறது. எண்பது பைசா தேறாத பானத்தை முப்பது ரூபாய்க்கு விற்கிறான் என்றால் அவன் வெளியேறுவது தானே நல்லது. சீக்கிரம் போய்த் தொலைடா ஒங்கக்கா... மவனே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.