17/12/2017

திராவிடமே தமிழினத்தின் முதல் எதிரி...


வருடம் 1965...

தமிழ் தேசியத்தின் ஒரு பகுதியாக தமிழக மாணவர்களால் தன்னிச்சையாக எழுந்த போராட்டம் 'இந்தி எதிர்ப்பு போராட்டம்'. உண்மையில் அது தமிழருக்கான ஒரு தமிழ் தேசிய இனப் போராட்டம்.

தமிழர் என்ற ஒரு தேசிய இனத்தை மதித்து நடக்காத இந்திய அரசை எதிர்த்து தமிழக மாணவர்கள் தன்னிச்சையாக கொதித்து எழுந்தனர். மேலே சொன்ன போராட்டத்தில் பெரியாரோ, திராவிட கட்சிகளோ எந்த அக்கறையும் காட்டியது இல்லை.

ஆனால் அவர்கள் தான் அனைத்தையும் செய்தார்கள் என்றும், 'இனப்போராட்டம்' என்பது 'மொழிப்போராட்டமாக' சுருக்கப்பட்டு காயடிக்கப்பட்டதும் இதே திராவிடர்கள் தான் என்பதும், நோகாமல் நொங்கு தின்பதை போல, போராட்டத்தில் பெரிதும் பங்கு ஆற்றாமலேயே, அதன் பலன் மொத்தத்தையும் அனுபவித்து ஆட்சிக்கு வந்ததும் இதே திராவிட கயவர்கள் தான் என்பதையும் சற்று ஆதாரங்களுடன் பார்ப்போம்.

சென்னையில் நடந்த இந்தி எதிர்ப்பு பேரணி -- இந்து நாளிதழ்.

பெரியாரின் இந்தி எதிர்ப்பு யோக்கிதை..

இந்தி போராட்டத்தை எதித்த பெரியார் தான், தமிழகத்தில் ராஜாஜிக்கு முன்பாகவே  இந்தியை கொண்டு வந்தவர் என்பதும்,அதை போற்றி வளர்த்தவர் என்பதும் எத்தனை பேருக்கு தெரியும்?

"இவர் 1922-ல் ஈரோட்டில் ஹிந்திப்பள்ளி ஒன்றை ஆரம்பிக்க இலவசமாக இடம் கொடுத்தார்.இராமசாமி நாயக்கர் காங்கிரசில் தொண்டாற்றிய காலத்தில் அவர் முயற்சியால் ஈரோட்டில் ஹிந்தி வகுப்பொன்று நடைபெற்றது. திறப்பு விழாவுக்கு யானுஞ் சென்றிருந்தேன். தென்னாட்டில் ஹிந்திக்கு விதை இட்டவர் நாயக்கரே"  -- "திரு.வி.க.வின் வாழ்க்கைக் குறிப்புகள்" என்ற நூலில் பக்கம் 436

பின்பு இதே பெரியார் தான், பெருவாரியான பிராமணர்கள் இந்தியை கற்று பயின்று இருக்கிறார்கள் என்பதால், பிராமணர்களை எதிர்க்கும் பொருட்டு இந்தியை எதிர்த்தார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

ஆக, ஆதரித்தாலும், எதிர்த்தாலும் அதனால் தமிழுக்கோ,தமிழருக்கோ நன்மை பயக்கும் என்ற பதத்தில் பெரியார் செயல்பட்டதே இல்லை என்பதும், இந்திக்கு மாறாக அவர் 'ஆங்கிலத்தை தான்' முன் வைத்தார், செயல்படுத்தினார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

Source: http://newindian.activeboard.com/t44595205/topic-44595205/?sort=oldestFirst&page=2

என்றுமே ஆங்கிலத்துக்கு ஆதரவாக நின்று இந்தியை எதிர்ப்பது என்னும் திராவிடர் கழக நிலைப்பாட்டில் இருந்து முற்றிலும் மாறுபட்டு மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட தமிழுக்கென்று - தமிழர் சார்பாக - நடத்தப்பட்ட இந்தி எதிர்ப்பு போராட்டத்தையும் பெரியார் 'காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து' நடக்கும் போராடம்மாக வர்ணித்து கொச்சை படுத்தினார்.

"இந்தியைத் திணிப்பதில்லை என்று அன்றே காமராசர் எனக்கு எழுதித் தந்திருக்கிறாரே! அந்த உறுதிமொழியை அரசினரும் மீறாதபோது, ஏன் கிளர்ச்சி செய வேண்டும்? பதவியைப் பிடிப்பதற்காகக் கண்ணீர்த்துளிகள் (திமுக) செத்த பாம்பை (இந்தி எதிர்ப்பு) எடுத்து ஆட்டுகின்றனர்".கவிஞர் கருணானந்தம்: "தந்தை பெரியார்" புத்தகம், பக்கம் 416-418.

என்று 1965 ஜனவரி 19 அரகண்டநல்லூரில் பேசினார்.

இப்படி 'வெறும் வாயை மட்டும் மெல்லுங்கள், போராட்டம் கீராட்டம் எல்லாம் வேண்டாம்' என்று தமிழருக்கு பொல்லாத அறிவுரை வழங்கினார் பெரியார். ஆனால், அவர் நினைத்ததற்கு மாறாக தமிழனுக்கே உரிய போராட்ட குணத்தால் வரலாற்று சிறப்புமிக்க அந்த போராட்டம் வெடித்தே விட்டது.

விளைவாக இந்திய வான்படைகள் தமிழரின் மீது பெரியார் இனப்போரையே தொடுத்தன. பல உயிர்கள் செத்து விழுந்தன.

ஈழ விடுதலை விசயத்தில் பெரியார் இன்னும் மோசம். தந்தை செல்வாவிடம் "ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும்" என்று சப்பை கட்டி அனுப்பி விட்டார் தமிழக அரசிலில் தனித்து பார்க்க முடியாத சக்தியாக பெருமையோடு பேசப்படும் பெரியார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.