02/01/2018

இன்றைக்கு நியூஸ் 18 விவாதத்தில், ரஜினி பேசிய காட்சி முடிந்தவுடன், குணசேகரன் முதலில் என்னிடம் தான் கேட்டு விவாதத்தைத் தொடங்கினார்...


சங் பரிவார் என்கிற குடும்பத்தில் மற்றுமொரு அமைப்பாகவே அவரது அமைப்பு இருக்கும் என்று கூறினேன். இதுதான் என் முதல் கருத்து.

மாலனும் ஜி.சி.சேகரும் அடுத்தடுத்து அப்படி இல்லை என்று சொல்வதற்கான வேலையில் இறங்கினார்கள்.

ஐயோ பாவம், அவர்கள். தமிழிசையும் அர்ஜூன் சம்பத்தும் நாராயணனும் உடனடியாக என் உதவிக்கு வந்தார்கள். நான் சொன்னக் கருத்தை உறுதி செய்தார்கள். 

ஆர் கே நகர் தோல்விக்குப் பிறகு தங்களுக்கு பலம் தேவைப்படுகிறது, அந்த பலத்தை ரஜினி அளிப்பார் என தமிழிசை நம்புகிறார். இந்து மக்கள் கட்சியும் பாஜகவும் ரஜினி பின்னால் செல்லும் என்கிறார் சம்பத்.

ரைட்டு. இனிமேல் ரஜினியை பாஜகவின் மறைமுக ஆதரவைப் பெற்றவர். பாஜகவின் பினாமி என்றெல்லாம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நேரடியாக ரஜினியின் அமைப்பை இந்துத்துவ அமைப்பு என்று சொல்லி வேலையைச் செய்ய வேண்டியது தான்.

2018 இல் மேலும் ஒரு முனையில் யுத்தம் வெடிக்கிறது. தட்ஸ் ஆல். பாத்துக்கலாம்.

ஆனால் ரஜினியின் இந்த நகர்வு நமக்கெல்லாம் நிறைய வேலையைக் கொடுத்திருக்கிறது. அவருக்கு எந்த அளவுக்கு வெற்றி கிடைக்கிறதோ அந்த அளவுக்கு அது மக்களின் தோல்வியாக இருக்கும்.

தமிழ்நாட்டின் அத்தனை நியாயஸ்தர்களும் தமிழருவி மணியன்களும் இப்போது ரஜினி பக்கம் வருவார்கள்.

மாலன்களும் சேகர்களும்  என மிகப்பெரிய ரஜினி மீடியா படை இன்றே உருவாகிவிட்டது.

மீடியாவுக்கு 2018 முழுமைக்குமான பிரேக்கிங் நியூஸ் கிடைத்துவிட்டது.

மீம்ஸ் இன்டஸ்ட்ரியின் வளர்ச்சி பல மடங்காக இருக்கும்.

நமக்குத்தான் வேலை அதிகம். மீம்ஸோடு முடங்கிவிடக்கூடாது, விவாதமேடைகளோடு நின்றுவிடக் கூடாது. செய்வோம்.  வச்சு செய்வோம். 

- தோழர் ஆழி செந்தில்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.