08/01/2018

2018 ஆம் ஆண்டை ஊழல் ஒழிப்பு ஆண்டு - பண்ருட்டியில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் பாமக நிறுவனர் இராமதாஸ் பேச்சு...


கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள  தனியார் மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் 2018 ஆம் ஆண்டை ஊழல் ஒழிப்பு ஆண்டாக உறுதி ஏற்கும் பொதுக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இதில்,பாமக  நிறுவனர் ராமதாஸ் , மாநில தலைவர் ஜி கே .மணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இப்பொதுக்குழு கூட்டத்தில்,மருத்துவர் இராமதாஸ் பேசுகையில்.... கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து சிறப்புரையாற்றிவர்... 50 ஆண்டுகால திராவிட கட்சி ஆட்சியில் ஊழல், லஞ்சம் இரண்டு மட்டுமே வளர்ச்சி அடைந்திருக்கிறது என்றும், சாராயத்தை ஒழிக்க 35 வருடமாக போராடி வருவதாகவும், ஊழலை ஒழிக்க 10 ஆண்டு காலமாக போராடிக் கொண்டு வருவதாகவும், ஊழல் ஒழிப்பு ஆண்டாக 2018 ஐ அறிவித்திருப்பதாகவும்..

இன்று கடலூர் மாவட்டத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தை பார்த்தவுடன் அதில் பங்கேற்ற இளைஞ்சர்கள் கூட்டத்தை பார்த்து இளைஞர் சக்திக்கு முன்னாள் எதுவும் இல்லை என்றும் எனவே இந்த ஆண்டை இளைஞ்சர்கள் எழுச்சி நாளாகவும் அறிவிப்பதாகவும் அவர் கூறினார்.

திராவிட கழகங்கள் இலவசங்களை கொடுத்து ஏமாற்றி வருகிறார்கள் என்றும், மக்களின் முக்கிய வாழ்வாதாரம் விவசாயம்..

விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் இல்லை என்றும், இதையெல்லாம் சரி செய்ய வேண்டுமென்றால் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்றும், பாமக ஆட்சியில் அமருவதற்கு பாமகவினர்  அயராது பாடுபட வேண்டும் என்று  பேசினார்.

இதில் அதிமுக , திமுக-வை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாமகவில் இணைந்தனர் இதில் கடலூர்  மேற்கு, தெற்கு மாவட்டத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பாமகவினர்  கலந்து கொண்டனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.