01/02/2018

சுப்ரீம் கோர்ட்டில் பிப்ரவரி 23-ந் தேதிக்குள் தீர்ப்பு வழங்க வாய்ப்பு...


காவிரி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்து வந்தது.

இந்த வழக்கு மீதான இறுதி வாதங்கள் கடந்த ஆண்டு (2017) செப்டம்பர் 20-ந் தேதி முடிவடைந்த நிலையில் வழக்கின் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் மட்டுமின்றி நாடே இந்த வழக்கின் மீதான தீர்ப்பை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளது.

இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த 3 நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி அமிதவராய் வருகிற மார்ச் 1-ந் தேதி பணி ஓய்வு பெறுகிறார். மேலும், பிப்ரவரி 24-ந் தேதியில் இருந்து மார்ச் 5-ந் தேதி வரை ஹோலி பண்டிகையையொட்டி சுப்ரீம் கோர்ட்டுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

எனவே காவிரி நீர் பங்கீடு தொடர்பான இந்த வழக்கின் தீர்ப்பு பிப்ரவரி 23-ந் தேதிக்கு முன்னதாகவோ அல்லது பிப்ரவரி 23-ந் தேதி அன்றோ வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.