14/02/2018

ஆட்சிமொழி ஆகக்கூடிய தமிழ் வழக்காடு மொழியாகக்கூட இல்லையே?


ஜனநாயகப் படுகொலையாளர்கள் பாதுகாப்பாக ஒழிந்து கொள்ள ஒரு இடம் இருக்கிறது என்றால் அது அம்பேத்கர் எனும் மாய பிம்பம்.

ஒவ்வொரு மாநிலமும் அந்தந்த மாநில மொழியைத் தான் உயர்நீதிமன்றத்தில் பயன்படுத்த முடிவெடுத்தால் அப்புறம் உச்சநீதிமன்றத்தை மூடிவிட்டு போக வேண்டியது தான்.. என்று 1948ல் மொழிவாரி மாநில அமைப்பின் வாரியத்திடம் சமர்ப்பித்த அறிக்கையில் அம்பேத்கரே சொல்லி விட்டாராம்.

அது என்ன அம்பேத்கரே ? அவரென்ன கடவுளா?

எல்லா ஹிந்தியனும் எப்படி சுற்றி வளைத்தாலும் இறுதியில் தமிழனுக்கு எதிராகவே வந்து நிற்கிறான்.

எங்கள் மாநிலத்தில் எங்கள் உயர்நீதிமன்றத்தில் எங்கள் மொழியில் வழக்காட உரிமை கொடுக்காத இந்த அராஜக நாடும் அதன் கையாலாக திகழும் உச்ச நீதிமன்றமும் எங்களுக்குத் தேவையில்லை.

எங்கள் மாநிலத்தை  நாடாக்குவோம்...

எங்கள் மொழி ஆட்சிமொழி ஆகும்...

பிறகு எங்கள் உயர்நீதிமன்றமே உச்சநீதிமன்றம் ஆகும்...

அதற்கு மேல் ஐ.நா சபை அல்லது போர் என்ற நிலையே உருவாகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.