16/02/2018

பழந்தமிழர் வாழ்வில் முக்கிய பங்கு வகித்த கருப்பட்டி இன்று தமிழர்களால் முற்றிலும் மறக்கப்பட்டு வருகிறது...


ஆளுக்கொரு பனங்கருப்பட்டி பயன்படுத்தினால் பல லட்சம் பனைமரங்கள் வெட்டாமல் காக்கப்படும் என்பதே மறைமுக உண்மை.

பனை வளர்ப்பு பற்றி பெரிதாக பேசும் நாம் இருக்கும் பனைகளை காப்பதற்கு அதை சார்ந்து வாழும் மக்களை வளப்படுத்துவோம்.

பனங்கருப்பட்டியில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

விட்டமின்-பி, மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள கருப்பட்டி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.

பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத் தால் கருப்பை ஆரோக்கியமாக இருக்கும். நார்ச்சத்தும் இதில் அதிகம்.

வறட்டு இருமல், நாள்பட்ட சளித் தொல்லை நீங்கும்.

கருப்பட்டி மற்றும் பனங்கல்கண்டில் எண்ணற்ற விட்டமின்களும், மினரல் சத்துக்களும் உள்ளன.

கருப் பட்டி இயற்கையாகவே உடலை குளிர்ச்சியடையச் செய்யும்.

சர்க்கரைக்குப் பதிலாக கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதி கமாக இருக்கிறது.கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.