07/03/2018

பொது மனம் என்றால் என்ன? – ESP சக்தியின் அடிப்படை...


பொதுமனம் என்பது பலரால் நம்ப முடியாத ஒரு தேற்றமாகத்தான் இருக்கிறது. நம்புவோருக்காக…

பொது மனத்தை அறிய முன்னர், பிரபஞ்ச உருவாக்கத்தை சிம்பிளாக பார்த்தாக வேண்டும்…

பிரபஞ்சம் என்பது, பெரு வெடிப்பு மூலம் தோற்றுவிக்கப்பட்ட ஒன்று என விஞ்ஞானம் அறிந்துள்ளது.

அணுவொன்றின் அல்லது சிறிய பொருள் ஒன்றின் வெடிப்பின் மூலம் பிறப்பிக்கப்பட்ட அதீத சக்தியினால் வாயுக்கள் உருவாகியதாகவும், பின்னர் அவை தமக்குள் ஈர்ப்படைந்து இறுக்கமடைந்து திண்மங்களாகவும், திண்மத்தை அண்டி இருந்த வாயு குளிர்வடைந்து திரவமாகவும் மாறியதாக கூறப்படுகிறது.

அப்படி திண்மம், திரவம், வாயு , வாயுக்களின் சேர்க்கையால் உருவான அதீத வெப்பத்தாலான நட்சத்திரங்கள் என்பன தமது ஈர்ப்பின் சக்திக்கு ஏற்ப தனித்தனி கூட்டங்களாக உருவாகின. அப்படி உருவான ஒரு கூட்டம் தான் பூமி அடங்களான சூரிய குடும்பம்..

திண்ம, திரவம், வாயுவின் சேர்க்கையால் கலங்கள் உருவாகின, கலங்களின் சேர்க்கையால் தாவரங்கள், விலங்குகள், பறவைகள் என்பன படிப்படியாக உருவாகின.

பூச்சி, நாய், மனிதன், காகம் என அனைத்துமே அடிப்படையாக கலங்களில் இருந்தே உருவாகியுள்ளன.

இன்னும் கொஞ்சம் ஆழமாகப்போனால்; பூச்சியும், பிரபஞ்சமும் திண்மம், திரவம், வாயுவின் சேர்க்கையாலேயே உருவாகின என்றும் சொல்லலாம்.

நமது வீட்களில் செல்லப்பிராணிகள் இருக்கின்றன. உண்ணிப்பாக கவணித்துப் பாருங்கள், நாம் வீட்டிற்கு அதீத கோபமாகவோ டென்ஷனாகவோ வரும் போது அவை அதை உணர்ந்து கொண்டு நம்மை தொந்தரவு செய்யாமல் சென்றுவிடும்.

பாடசாலையில் இருந்து அல்லது அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு நாம் வரும் போதே, வீட்டில் இருக்கும் செல்லப்பிராணிகள் அதற்கு ஏற்ப விளைவுகளை வீட்டில் காட்டத் தொடங்கி விடும்..

நேரத்தை உணர்ந்து கொள்ள முடியாத அவை, நாம் நேர தாமதமால் வீட்டில் சற்று பதட்டத்தை காண்பிக்கும்.

நம்மிடையே பார்த்தால், நாம் பலர் இருந்து பேசிக்கொண்டிருப்போம், திடீரென நாம் சொல்ல நினைத்ததை அருகில் இங்கிருக்கும் ஒருவர் சொல்லிவிடுவார்.

எங்கோ தொலைவில் வேறு நாடுகளில் இருக்கும் நமது உறவினர் அல்லது நண்பரைப்பற்றி யோசித்துக் கொண்டிருப்போம். அவருடன் பேசினால் நன்றாக இருக்கும் என நினைப்போம், அவர் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்துவார்.

நமது நெருங்கிய உறவினர் ஒருவர் எங்கேயோ இறந்தாலும், நமக்கு இறந்த தகவல் தெரிய முன்னரே, குறிப்பிட்ட நபர் இறந்த அந்த நேரத்தில் பதட்டம், பயம், சோக உணர்வு என்பன உருவாகும். இதை பலர் உணர்ந்திருப்பீர்கள் அல்லது கேள்விப்பட்டிருப்பீர்கள்.

இன்னொரு பக்கம் பார்த்தால்,
இயற்கை சீற்றங்கள் வருவதை விலங்குகள் முன்னோக்கியே உணர்ந்து கொண்டு தமது பதட்டத்தை வெளிக்காட்டுவதுடன் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகரவும் ஆரம்பிக்கும். சுனாமி நேரத்தில் இதை பலர் உணர்ந்துள்ளார்கள்.

அதே போல் பாரிய விமான விபத்துக்கள், சாலை விபத்துக்கள் எதிர் பாராது நிகழ்ந்த நாட்களில், ஏனைய நாட்களில் பிரயாணிக்கும் மக்களை விட குறைந்த எண்ணிக்கையிலானவர்களே பயணித்துள்ளார்கள்..( உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையின் தரவிது.) இதை எச்சரிக்கை உணர்வு எனவும் சொல்லலாம்.

என்னடா பிரபஞ்சத்தை பற்றி பேசிக் கொண்டிருந்து விட்டு திடீரென சம்பந்தமில்லாத தகவல்களை பேசிக் கொண்டிருக்கிறேன் என நினைக்க வேண்டாம். நான் மேலே சொன்ன மூன்று தொகுதி உதாரணங்களும் ஏற்படுவதற்கு காரணம் பொது மனம் தான்.

இரண்டாம் தொகுப்பை பார்த்தால்,
நாம் பேசிக் கொண்டிருக்கும் போதும் சிந்தித்திக் கொண்டிருக்கும் போதும், நமது உடலை விட்டு கண்ணிற்கு புலப்படாத எண்ண அலைகள் விரிந்து பரவிச்செல்கின்றன. அந்த எண்ண அலைகள் எம்மோடு தொடர்புடையவர்களின் எண்ண அலைகளுடன் ஒத்திசைவடையும் போது, அந்த செய்தியை உணர்ந்து கொள்ளும் திறன் நமது மனதிற்கு உண்டு.

அதன் விளைவே நாம் நினைப்பதை சொல்வதற்கும், நாம் நினைக்கும் போது தொலைபேசி அழைப்பை ஏற்படுத்துவதற்கும், இறப்புக்களை உணர்ந்து கொள்வதற்கும் இது தான் காரணம். இது தான் பொது மனம்.

முதலாம் தொகுப்பை இப்போது பார்ப்போம்..

மனித எண்ணங்களுக்கு அப்பாற்பட்டு விலங்குகளின் எண்ணங்களுடன் மனித எண்ணங்கள் ஒத்திசைவைடைவதால் ஏற்படும் விளைவுகளுக்கான உதாரணங்களே மேற்சொன்னவை.

இதில் ஒரு துரதிஷ்டமான விடையம் விலங்குகளின் எண்ணங்களை நமது மனம் உள்வாங்கிக் கொள்ளும் திறனை இழந்து விட்டது. அதற்கான தேவை குறைந்ததும், மனித மனதிற்குள் வேறு பல சிந்தனைகள் குடிகொண்டதும் காரணாம இருக்கலாம்.

இதைப்பற்றிய முழுமையான விளக்கம் கொடுக்காமலே, ஜென் கதைகளில் சிங்கத்தை கட்டுப்படுத்தும் மனிதர்களை பற்றி கூறப்பட்டுள்ளது..

அவை, நமது எண்ண அலைகள் பொது மனதில் சஞ்சரித்து விலங்குகளின் எண்ணங்களுடன் ஒத்திசைந்து விலங்குகளின் மனதினால் உணரப்பட்டு ஏற்படுத்தப்படும் நடத்தை விளைவுகளையே காட்டுகின்றன.

இறுதியாக மூன்றாவது தொகுப்பை பார்ப்போம்..

இது விளக்குவதற்கு சற்று கடினமானது, இது இயற்கை விதிகளுக்கும் மனித எண்ண அலைகளுக்கும் இடையிலான ஒத்திசைவினால் ஏற்படும் விளைவுகளாகும்.

இயற்கை விதிகள் என நான் சொல்வது கோயஸ் – வண்ணத்திப்பூச்சி விளைவு இனால் ஏற்படும் விளைவுகளை குறிக்கும்.

உதாரணமாக -  கோயஸ் தேற்றப்படி.. நாளை ஏற்படப்போகும் விபத்து, நேற்றோ பல நாட்களுக்கு முன்னரோ ஏற்பட்ட ஒரு விளைவினால் ஏற்படுவது என்பதை குறிக்கிறது. எனவே, நாளை ஏற்படப்போகும் விபத்து பற்றிய தகவல் அடங்கில அலைகள் எம்மை சூழவும் பிரபஞ்சத்தை சூழவும் வியாபித்திருக்கும்.. அவற்றுடன் எமது மன அலைகள் ஒத்திசைவடையும் போது நமக்கு எச்சரிக்கை உணர்வு ஏற்படுகிறது.

ஆகவே, உயிரினங்களின் எண்ணங்கள் அனைத்துமே பொது உலகில் வியாபித்திருக்கின்றன. உயிரினங்கள் மட்டும் அல்லாது உலக, பிரபஞ்ச தகவல்கள் கூட பொது மன உலகில் இருக்கலாம்.

அதனால் தான், நாஸ்ட்ரடாமஸ் போன்றவர்கள் எதிர்வுகூற முடிந்தது..

இங்கு இன்னோர் தகவலையும் குறிப்பிடலாம்..

ஐன்ஸ்டைனின் தோற்றத்தை அடிப்படையாக்கக்கொண்ட காலப் பயணத்தைப் பற்றி பேசும் போதே, சில விஞ்ஞானிகள் பண்டைய உலகை அறிந்து கொள்ள பொது மன அலைகளை உணர்ந்து கொள்ளும் ஒரு கருவியை கண்டறிந்தால் போதுமானது எனக்கூறுகிறார்கள்.

அவர்களின் எண்ணப்படி, அக்கருவி மூலம் அக்காலத்தில் வாழ்ந்தவர்களின் எண்ணங்களை ஒன்றினைத்து, அவற்றை அறிவதன் மூலம் அக்கால கட்டத்தை அறிந்து கொள்ள முடியும்.

ESP செயற்பாட்டின் அடிப்படையான பொது மனத்தைப் பற்றி பேசியுள்ளோம்.

இனி, ESP சக்தியை வெளிப்படுத்திய வினோத மனிதர்கள் பற்றியும், வினோத ESP சந்தர்ப்பங்களையும் இடையிடையே அது தொடர்பாக உள்ள தோற்றங்கள், மற்றும் புராண சம்பவங்களையும் பார்ப்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.