24/04/2018

கோக், பெப்ஸியால், பக்கவாதம் வரும்.. பைத்தியம் பிடிக்கும் - அமெரிக்க ஆய்வாளர்கள் அதிர்ச்சித் தகவல்...


கோக், பெப்ஸியை பற்றி பல அதிர்ச்சி தரும் உண்மைகள்  வெளிவந்தாலும், நமது நடிகர்களை வைத்து, விளம்பரப்படுத்தி அதனை மறக்கடிக்கச் செய்து விடுகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவின் போஸ்டன் பல்கலைக்கழகத்தின் மருத்துவ குழு ஒன்று நடத்திய ஆய்வில் அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன.

கடந்த 10 வருடங்களாக பக்கவாதம், dementia எனப்படும் மனக்குழப்பம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட 4300 பேரிடம் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.

இதன் மூலம் தெரியவந்தது என்னவென்றால், ஒரு நாளைக்கு ஒரு முறை செயற்கையாக இனிப்பூட்டப்பட்ட டயட்  கோக்,  பெப்ஸி மேக்ஸ் குடித்தாலே, பக்கவாதம் மற்றும் dementia வரும் ஆபத்து 3 மடங்கு அதிகமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த ஆய்விற்கு கோக், பெப்ஸி நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், இதுபற்றி விரிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆதாரம் : JUST ONE DIET COKE OR PEPSI MAX A DAY CAN ‘TRIPLE THE RISK OF A DEADLY STROKE’ AND DEMENTIA, RESEARCHERS CLAIM...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.