19/04/2018

யார் உவன் ?


1989ஆம் ஆண்டு பல்லாயிரக்கணக்கான சீன மக்கள் அன்றைய சீன அரசை எதிர்த்து போராடினர்..

போராட்டத்தை கலைக்க அரசு ராணுவத்தை பயன்படுத்தியது. அரசு நடத்திய வெறியாட்டத்தில் 300இல் இருந்து 1000 பேர் வரை அன்று கொல்லப்பட்டிருக்கலாம்.

போராட்ட குழுவை நோக்கி சீன ராணுவ பீரங்கிகள் செல்லும் பொழுது ஒற்றை ஆளாய் ஒருவன் வழிமறித்தான். அணிவகுத்த பீரங்கிகள் முன் நிராயுதபாணியாக நின்று எதிர்த்தான் அந்த மாவீரன்.

இன்று வரை அவனது உண்மையான  அடையாளம் தெரியாது...
அவனது நோக்கம் அரசின் அடக்குமுறையை எதிர்ப்பதே..

அவனே உவன்...

அதிகாரத்தை எதிர்த்த அடையாளமற்றவன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.