05/05/2018

ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த இரவுக் கிளிகள் கண்டுபிடிப்பு...


100 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அரிய வகை பறவை இனமான இரவுக் கிளிகள் அவுஸ்திரேலிய காடுகளில் உயிர் வாழ்வது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. பெருகி வரும் சுற்றுச்சூழல் சீர்கேட்டால் உலகின் பல வகை உயிரினங்களும் அழிந்து வருகின்றன.

அவ்வகையில் 100 ஆண்டுகளுக்கு முன் காணப்பட்ட அரிய வகை பறவை இனமான இரவுக் கிளிகள் அழிந்து விட்டதாகவே கூறப்பட்டது.

இந்நிலையில், அவுஸ்திரேலிய காடுகளில் வன விலங்குகள் மற்றும் பறவை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஜோன் யங், இந்த கிளிகள் உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்....

அவுசுத்திரேலியாவின் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள யங், 15 ஆண்டுகளாக இரவுக் கிளிகள் பற்றிய தேடலில் ஈடுபட்டுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக 2007ஆம் ஆண்டு இரவுக் கிளிகளின் குரல்கள் காடுகளில் வைக்கப்பட்டிருந்த ஒலிப்பதிவு கருவிகளில் பதிவாகியிருந்தன.

இதையடுத்து, புதிய நம்பிக்கையுடன் கிளிகளைப் படம் பிடிக்கும் முயற்சியில் யங் ஈடுபட்டார். அவரின் அயராத உழைப்பின் பயனாக, அவுசுத்திரேலியாவின் அடர்ந்த காட்டுப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஒளிப்பதிவு கருவிகளில் அரிய வகை கிளிகளின் படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.