15/05/2018

பாவிகளின் பைபிள்...


புனித பைபிள் என்று தான் நாம் கேள்விப்பட்டு இருப்போம்..

பாவிகளின் பைபிள் என்றோ.. அல்லது ஒழுக்கம் கெட்ட பைபிள் என்றோ.. நாம் சிந்தித்தது கூட இல்லை.. அப்படி தானே..

ஆனால் (THE WICKED BIBLE).. என்று ஒரு பைபிள் உலகத்தில் இருந்தது (இருக்கிறது)..

இதற்கு தமிழ் அர்த்தம் மேலே குறிப்பிட்ட வார்த்தைகள் தான்..

இப்படி ஒழுக்கம் கெட்ட பைபிள் என்று பெயர் வைத்தவர்கள் கிருஸ்துவ சபையினர்கள் தான்...

ஏன் இப்படி தங்களுடைய புனித வேதத்திற்கு பெயர் வைத்தார்கள் தெரியுமா?

1631 ல் லண்டனிலுள்ள ராயல் பதிப்பகம் மூலமாக இந்த பைபிள் வெளியிடப்பட்டது..

கிங் ஜேம்ஸ் வர்ஷனின் மறுபதிப்பாக இவற்றை வெளியிட்டு இருந்தார்கள்..

கிருஸ்துவர்கள் மதிக்ககூடிய பர்கரும் லூக்காவும் எழுதியுள்ளார்கள்.

பிரபலமான  பத்து கட்டளையில் அதாவது (TEN COMENTMENTS)ல்.

ஏழாவது கட்டளையான விபச்சாரம் செய்யாதே என்ற வார்த்தையை மாற்றி விபச்சாரம் செய்..

என்று அச்சிட்டு வினியோகம் செய்யப்பட்டது.....

பரவலாக பரவியது இந்த பைபிள்..

பிறகு தான் இதை கண்டு பிடிக்கப்பட்டது.

உடனே அனைத்து பிரதிகளையும் இங்கிலாந்துக்கு அனுப்பி விட வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

இஸ்டார் சேம்பர் எனுமிடத்தில் அச்சிடப்பட்ட அனைத்து பைபிளையும் தீயிட்டு கொளுத்த பட்டது..

பதிப்பகத்தாருக்கு 300 பவுண்ட் அபராதம் விதிக்க பட்டது.

இருப்பினும் ஒரு சாரார் வேண்டுமென்று தான் இவர்கள் இப்படி பிரிண்ட் செய்தார்கள் என்று கருத்து தெரிவித்தார்கள்....

காரணம் சில வரலாற்று சம்பவங்களை அடிப்படையாக்கி வேண்டும் என்று தான் இவ்வாறு அச்சடிக்கப்பட்டு இருக்க வேண்டும் என்றும்.

ஒரு உலக வேதத்தில் பிழையுடன் எப்படி தெரியாமல் அச்சடித்து இருப்பார்கள் என்றும் விமர்சனம் வைக்கப்படுகிறது.

மற்றும் இந்த பைபிளில் ஏசுவை பற்றி நிறைய விஷயங்கள் இப்போது உள்ள பைபிளுக்கு மாற்றமாக இருக்கிறதாகவும் கூறப்படுகிறது..

இருப்பினும் இதுவே போதும் இதற்கு மேலுள்ள வாதம் பிறதி வாதத்தை பேசுவது சரியல்ல...

இப்போது விஷயம் எனனவென்றால்..

ஒழுக்கம் கெட்ட பைபிள் என்று சொல்லக் கூடிய தவறுதலாக அச்சடிக்கப்பட்ட பைபிளை முற்றுமுழுதாக அழித்து விட்டாலும் சில பிரதிகள் உலகத்தில் உள்ளது...

அதிகார பூர்வ அறிவிப்பாக டெக்சாசில் மற்றும் இங்கிலாந்திலுள்ள அருங்காட்சியகத்தில் இது பொது மக்கள் பார்வையில் படாமல் வைத்து இருந்தாலும்..

சில பிரதிகள் உலகத்தில் உள்ளதாக அறியப்படுகிறது..

இதன் சொர்ப அளவு  மற்றும் பழங்கால அச்சிப்பிரதியாதளால்.. இதற்கு மவுசு அதிகம் இந்திய மதிப்பில் கோடிக் கனக்கில் இந்த பைபிளுக்கு விலையுள்ளது இன்றும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.