15/05/2018

வரலாற்றில் மனிதனை கடவுளாக ஆக்கப்பட்ட தருணம்...


நான் சொல்ல போகும் விஷயத்தை நன்றாக கூர்ந்து கவனித்து படியுங்கள்..

கொஞ்சம் சிந்தனையை மாற்றுனீர்கலாயின் பதிவு திசை திரும்பி விடும் ..

இது மேம்படுத்தி சொல்வதில்லை..

இதுவரை உங்களுக்கு யாரும் சொல்லாத செய்தி..

அதுவும் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன் உள்ள ஒரு விஷயம் அதன் தாக்கம் இன்றும் நம்மிடம் உள்ளது.

என்ற ரீதியின் அடிப்படையில் கூறுகிறேன்..

இறைவன் = இறையன்..

இந்த இரண்டு வார்த்தையும் ஒன்று போன்று இருந்தாலும் அர்த்தங்கள் வேறு  வேறானது.

இறைவன் என்றால் கடவுள்..

இறையன் என்றால் புலவன் அதாவது மனிதன் ...

இந்த இரண்டு வார்த்தைக்கும் நடுவில் உள்ள வார்த்தை

ய மற்றும் வ

என்கிற வார்த்தை தான்...

உதாரனத்திற்க்கு  துறைவன் + துறையன்..

இரண்டு வார்த்தையும் ஒன்றாக இருந்தாலும் இரண்டுமே வேறு வேறு அர்த்தம் உள்ளவை..

கடல் துறையின் தலைவன் துறைவன்...

கடல் துறையில் வாழ்பவன் துறையன்..

இரண்டும் கிட்டத்தட்ட ஒரே வார்த்தை ஆனால் பெரிய வித்யாசம் உள்ளது...

அதே போன்று தான் இறைவன் + இறையன்..

அதாவது கடவுள் + மனிதன்..

குழப்பமாக இருந்தால் இதுவரை மட்டும் மீண்டும் ஒரு முறை படித்து விட்டு வாருங்கள்...

இப்பொழுது பாருங்கள்....

சங்க கால புலவர்களில் ஒருவர் நல்லிரையனார் இவர் கிள்ளிவளவன் 
காலத்தில் வாழ்ந்தவர்..

இந்த கிள்ளிவளவன் யார் தெரியுமா ?

சோழன் வம்சத்தில் வந்த ஒருவர்

அதாவது செம்பியன், அடுத்த தலைமுறை எல்லாளன், இளஞ்சேட்சென்னி, கரிகால் சோழன் நெடுங்கிள்ளி, நலங்கிள்ளி,  அடுத்த தலைமுறை கிள்ளிவளவன்..

இந்த கிள்ளிவளவனின் ஆட்சியை புகழ்ந்து பாடும் பொழுது..

நல்லருள்  புரியும் இறைவன் கிள்ளிவளவன்.. என்று பாடியுள்ளனர்..

அதாவது நல்லருள் புரியும் இறையன் என்று பாடுவதற்கு பதிலாக இறைவன் என்று பாடியுள்ளனர்..

இங்கு தான் மனிதனை கடவுளாக மாற்றக்கூடிய விஷ[ய]ம் முதன் முதலில் தூவப்படுகிறது...

பிறகு ஆட்சியாளனை கடவுள் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டு   புலவர்களை கடவுளின் சீடர்களாக மாற்றப்பட்டு..

[அதாவது மன்னரின் உதவியாளர்கள்]

இப்படியே பரிணாமம் பெற்று  கடவுள் ஸ்தானத்தை இன்று மலத்தையும் சுமந்து கொண்டு இருக்கும் சக மனிதனுக்கு கொடுக்கபடுகிறது..

சங்க காலத்தில் கடவுளை கடவுளாக இறைவனுக்கு கொடுக்கும் மரியாதையை தமிழர்கள் கொடுத்து கொண்டு தான் இருந்தனர்.

அதன் காரணமாக தான் திருவள்ளுவர் முதல் குறளே ஆதி பகவன் முதற்றே உலகு என்றால்...

அண்டம் பேரண்டம் ஆதி பகவன் ஒன்று பேரண்டத்தின் கடவுள் அவனுக்கே....

ஆதியும் அந்தமும் அவனே என்ற சங்க கால இலக்கணங்கள் எல்லாம் கடவுளை ஒருவனாகவும் மனித தன்மை அற்றவனாகவும் சரியாக மதித்து எழுதப்பட்டது....

களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் பாவை இவற்றை அழகாக கூறும்..

இன்று கடவுளின் தன்மையை புரிந்து கொள்ளாமல் மனிதனிடமும் கடவுள் தன்மை வரும் என்று தவறாக நினைக்க.

இறையன் + இறைவன்..

நடுவில் உள்ள ய என்கிற வார்த்தையும்
காரணமாக இருக்கலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.