25/06/2018

2ஆம் உலகம் கண்டுபிடிப்பு...


நாம் வசிக்கும் பூமியை ஒத்த மற்றுமொரு கிரகத்தை, கெப்லர் தொலைநோக்கி மூலம் கண்டு பிடித்துள்ளதாக நாசா நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுவரை காலமும் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களில் இதுவே, பூமியை மிகவும் ஒத்த விதத்தில் அமைந்துள்ளது என்று நாசா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சற்று குளிர்ச்சியான, அளவில் பெரிதற்ற, புறத்தோற்றத்தில் நீரைக் கொண்டமைந்துள்ளது மாத்திரமன்றி உயிரினங்கள் வாழக்கூடிய அனைத்து சூழலையும் இந்த கிரகம் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.

இந்த கிரகத்துக்கு ஏர்த் 2.0 (Earth 2.0) என நாசா நிநுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஜோன் க்ரண்ட்பெல் பெயர் சூட்டியுள்ளார்.

இந்த கிரகமானது, பூமியிலிருந்து 1,400 ஒளியாண்டுகள் தூரத்தில் அமைந்துள்ளது எனவும் விஞ்ஞானி ஜோன் க்ரண்ட்பெல் கூறியுள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.