22/06/2018

சாகர்மாலா உண்மைகள் - 3...


எந்தந்த துறைக்கு எந்தந்த நாடு பொறுப்பேற்க போகிறது என்பதின் பட்டியல்...

இந்தியா-சுற்றுலா, போக்குவரத்து மற்றும் தொலைதொடர்பு, சுற்றுசூழல் மற்றும் இயற்கை பேரிடர் மேலாண்மை (ஒகி புயலின் போது இவர்கள் செய்த மேலாண்மையை மக்கள் கவனிக்கனும்), பயங்கரவாதம்.

தாய்லாந்து-மனித உறவு மேம்பாடு, மீன்பிடித்துறை, பொது நலம்
வங்கதேசம்-வணகிம் மற்றும் முதலீடு
மியான்மர்-ஆற்றல், வேளாண்மை
இலங்கை-தொழில்நுட்பம்
பூட்டான்-பண்பாடு.. நேப்பாளம்-வறுமை ஒழிப்பு..

பாதுகாப்பு-வணிகம்-முதலீடு-தொழில்நுட்பம் போன்ற அறிக்கைகள் பொதுவாகவே கூட்டமைப்பு நாடுகளில் இருப்பது தான். ஆனால், வேளாண்மை, மீன்வளம், மனிதவளம், சுற்றுலா போன்ற மற்றவைகளை இவர்கள் கவனித்துக் கொண்டார்கள் என்றால் தமிழக மக்கள் (குமரி மக்கள்)  அப்போ என்ன தலைல துண்ட போட்டு தூங்கனுமா?

நன்கு சிந்திக்கவும் மக்களே எல்லாத்தையும் அவர்கள் வசம் பிடுங்க போகிறார்கள் அதற்கு அவர்கள் கொடுக்கும் பெயர் வளர்ச்சி, வேலைவாய்ப்பு. ஒரே கேள்வி கேட்கிறேன், என் நிலத்தை புடுங்கி எனக்கே வேலை போட்டு தருவது என்ன வளர்ச்சி இது சர்வாதிகாரம் இல்லயா...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.