22/06/2018

பாலஸ்தீனத்தில் புலிகள்...


உங்களுக்கு பாலஸ்தீன விடுதலைத் தலைவர் திரு.யாசர் அராபத் அவர்களைத் தெரிந்திருக்கும்.

பாலஸ்தீன அரபுத் தந்தைக்கும் எகிப்து அரபித் தாய்க்கும் பிறந்தவர்.

எகிப்திலேயே வளர்ந்து கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வீட்டுக்குக்கூட போகாமல் நேராக தனது இனத்தை இனவெறி யூதர்களிடமிருந்து காக்க பாய்ந்தோடியவர்.

அங்கீகரிக்கப்படாத ஒரு நாட்டில் ஆயுதவழியில் போராடி அதிபராக உயர்ந்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்.

அவருக்கும் புலிகளுக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா?இருக்கிறது..

அவர் தலைவராக இருந்த பாலஸ்தீன விடுதலை இயக்கத்தில் (P.L.O) புலிகள் பயிற்சி எடுத்துள்ளனர்.

இதை ஏற்பாடு செய்தவர் ஈழப் புரட்சிகர மாணவர் அமைப்பை (E.R.O.S) நிறுவிய திரு.இளையதம்பி இரத்தின சபாபதி ஆவார்.

இவர் இலண்டன் வாழ் ஈழத்தமிழர்.

பாலஸ்தீன விடுதலை அமைப்பைச் சேர்ந்த இங்கிலாந்துக்கான பாலஸ்தீனத் தொடர்பாளர் திரு.சையது அமீது அவர்களுடன் நட்பு ஏற்பட்டபோது,
அவருடன் பேசி தமது இயக்கத்திற்காக பயிற்சி தர ஏற்பாடு செய்தார்.

பிறகு 1976 மே மாதம் பெய்ரூட் சென்று பாலசுத்தீனப் போராளி திரு.அபு ஜேஹத் என்பவரை (இசுரேலிய உளவுத்துறையால் கொல்லப்பட்டவர்) சந்தித்துப் பேசி  நேரில் பார்த்து விபரங்களை தெரிந்து கொண்டு
வவுனியாவிலும் சென்னையிலும் இயங்கிக் கொண்டிருந்த தமது இயக்கத்தினரையும், வவுனியாவில் ஈரோசுடன் கூட்டாக இயங்கிக் கொண்டிருந்த பிரபாகரனின் குழுவையும் (அப்போது இயக்கத்திற்கு பெயர் இல்லை) லெபனானுக்கு அழைத்துச் சென்று பாலஸ்தீன விடுதலை இயத்தினரிடம் பயிற்சி பெறச் செய்தார்.

இந்தப்பயிற்சி 1976ன் பிற்பகுதியில் தொடங்கி 1977 முற்பகுதி வரை நடந்தது.

1983லும் புலிகள் மீண்டும் பாலசுத்தீனப் போராளிகளிடம் பயிற்சி பெற்றதாகவும் கூறுவர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.