15/07/2018

தாமரையின் மீது அமர்ந்திருக்கும் இந்துக் கடவுள்கள் எல்லாம் தங்களின் வலது கையை மேல்நோக்கியும், இடது கையை கீழ்நோக்கிக் காட்டியவாறும் இருப்பதைச் சுட்டிக்காட்டி இதில் ஏதோ ரகசியம் இருக்கலாம் என ஒரு நண்பர் வினவியிருந்தார்?


பொதுவாக Martial Art (முருகனின் காப்பு) எனப்படும் இக்கலை சூரிய வழிபாட்டோடு தொடர்புடையதாகும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சமண புத்த மதத் துறவிகள் மற்றும் மன்னர் குடும்பத்தின் மெய்க்காப்பாளர்களால் மட்டுமே இக்கலை பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

காட்டு விலங்குகளால் ஆபத்து நேரும் போது இம்முத்திரையைப் பயன்படுத்தி ஒருவித ஒலி எழுப்பினால் அவைகள் விலகிச் செல்வதை நாம் கண்கூடாகக் காணலாம்.

இது ஒரு குறிப்பிட்ட மனிதர் தன்னைச் சுற்றியிருக்கும் சகஉயிர்களை தனது கட்டுப்பாட்டில் வைக்கும் ஒரு தந்திரமாகும். ஆனால் சந்திர வழிபாட்டு முறையிலோ இதற்கு நேர்எதிர்திசையில் தனது இரு கைகளையும் ஒன்று சேர்த்து விரித்து முகத்தைப் பார்பதைப் போல பயிற்றுவிப்பார்கள்.

இது தன்னுள் இருக்கும் ஆற்றலை உணர்ந்து தன்னைத்தானே கட்டுப்படுத்தும் இசுலாமிய தொழுகை முறையினை ஒத்தது.

நம்ம ஊரு கிராமப்புறங்களில் கூட அதிகாலையில் தூங்கி எழுந்தவுடன் கண்விழிக்காமல் தனது இரு உள்ளங்கைகளிலும் கண்விழிக்கச் சொல்லுவார்கள்.

சரி அதில் அப்படி என்னதான் ரகசியம் இருக்கும்? என நீங்கள் என்னிடம் வினவினால், நிச்சயமாக சந்திரவழிபாட்டின் ஒட்டுமொத்த ரகசியமும் அதற்குள்தான் ஒளிந்திருக்கிறது என்பேன் நான்.

எடுத்துக்காட்டாக, உருவவழிபாடே இல்லாத இசுலாமிய வழிபாட்டில் ஒரு நாளைக்கு 6 முறை தொழுகை செய்யும் போதும் அடிக்கடி தங்களின் இரு கைககளில் தெரியும் ஒரு புனித உருவத்தைப் பார்க்கச் சொல்லுவார்கள்.

ஒருவேளை உண்மையான சந்திர வழிபாடு பிற்காலத்தில் எதிரிகளால் அழிக்கப்படுமேயானால் அதனை மீட்பதற்கான உத்தியை ஒரு சாதாரன பாமரன் கூடத் தெரிந்து கொள்ளும் வகையில் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு சங்கேதத் குறியீடே அது.

சந்தேகமாய் இருந்தால் நீங்களே உங்களது உள்ளங்கைகளின் இருமேற்புற ரேகைகளையும் சேர்த்து உற்றுப்பாருங்கள் பிறை தெரியும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.