26/07/2018

காவிரி நீர் இப்பதான் திருவாரூர் மாவட்ட எல்லையை தொட்டிருக்கு...


கல்லணையிலிருந்து கொள்ளிடத்தில் திறந்துவிடப்பட்ட காவிரி நீர் வீராணம் ஏரியை ஆகஸ்ட் 1ம் தேதிதான் வந்தடையும்.

இன்னும் நாகப்பட்டிணம் மாவட்டத்திற்கே காவிரி நீர் போகலை. அந்த பக்கம் காரைக்காலையும் இன்னும் சென்றடையலை. காவிரி தண்ணீர் வானத்திலேயே பறந்துபோய் கடல்ல பாய்ந்திருக்கு. அதை செத்துப்போன ராமசுப்பையர் ஆவி பார்த்துட்டு வந்து தினமாலர்ல எழுத சொல்லியிருக்கு.

மேட்டூர் அணையோட ஒட்டுமொத்த கொள்ளளவுமே 93 டி.எம்.சிதான். கடந்த 5 வருடத்துல நேற்று முன்தினம்தான் மேட்டூர் அணை முழுமையா நிரம்பியிருக்கு.

இந்த லட்சனத்துல மேட்டூருக்கே வராம எப்படி 321 டி.எம்.சி தண்ணீரும் கடலுக்கு போச்சி? ஒரே மாயாஜாலமா இருக்கு.

மேட்டூரில் திறந்துவிடப்படும் நீர் நாகப்பட்டிணம் மாவட்டம்வரை செல்ல 6-7 டி.எம்.சி தண்ணீரை பூமி உரிந்துகொள்ளும். 7 டி.எம்.சி தண்ணீர் போகத்தான் மீதித்தண்ணீரை பயன்படுத்த முடியும்.

இந்த 321 டி.எம்.சி கடந்த 13 வருடமா கடலில் கலந்த காவிரி நீரோட கணக்காம். நல்லவேளை மேட்டூர் அணை கட்டப்பட்ட காலத்துலேர்ந்து கணக்கெடுக்காம விட்டானுக.

தமிழ்நாடு பாண்டிச்சேரிக்கு (காரைக்கால் காவிரி பாசன பகுதி) ஆண்டுக்கு 7 டி.எம்.சி தண்ணீர் கொடுக்கனும். அதுல பாதிக்கூட கொடுக்க மாட்டேங்குறோம்னு பாண்டிச்சேரி பல காலமா நம்ம மேல குற்றம்சாட்டு சொல்லிட்டிருக்கு.
காரணம் என்னன்னா மேட்டூரில் திறந்துவிடப்படும் நீர் தஞ்சை, திருவாரூர் மாவட்டத்தின் பல பாசன கால்வாய்களில் பிரித்துவிடப்படுவதால் காரைக்கால்வரை தண்ணீர் போவது கிடையாது.

 இவனுக என்னடான்னா முன்னுத்தி இருவத்தியொன்னு நானூத்தி இருவத்தியொன்னுன்னு கதை எழுதிட்டிருக்கானுக...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.