26/08/2018

கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து – 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள தீக்குச்சிகள் எரிந்து நாசம்...


கோவில்பட்டி அருகே கழுகுமலை வெங்கடேஸ்வரபுரத்தினை சேர்ந்த பெருமாள் என்பவரது மகன் ராஜேந்திரன்(56). இவர் கழுகுமலை புது பஸ்ஸ்டாண்டு செல்லும் சாலையில் தீப்பெட்டி ஆலை நடத்தி வருகிறார். மேலும் ஆலையின் ஒரு பகுதியில் குடும்பத்தினருடன் குடியிறுந்து வருகிறார். இன்று காலையில் இவரது தீப்பெட்டி ஆலையில் ஒரு பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. உடனடியாக ராஜேந்திரன் வந்து பார்த்த போது அங்கு இருந்து மருந்து தீக்குச்சிகள் வைத்திருந்த அறையில் தீ கொளுந்து விட்டு எரிந்து கொண்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனை தொடர்ந்து கழுகுமலை தீயணைப்பு நிலையத்திற்கும், கழுகுமலை போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்.

இதனை தொடர்ந்து தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) பொன்ராஜ் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.தீ ஆலையின் மற்ற பகுதிகளுக்கு செல்லவிடமால் தடுத்து அணைத்தனர். இருப்பினும் அறையின் கட்டிடம் சேதமடைந்தது மட்டுமின்றி, சுமார் 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள மருந்து தீக்குச்சிகள் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்து குறித்து கழுகுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.