04/08/2018

பண்டைய வரலாற்றில் குதிரைகளும்.. ராவுத்தர்களும்...


இரண்டாவது பாகம்...

குதிரைகள் பற்றிய தொகுப்பில் உள்ள ஒரு விஷயம் தான் அரபுநாட்டு குதிரைகளுக்கு தனி மவுசு இருந்தது குறிப்பிடத்தக்கது

சேர சோழன் பாண்டிய மன்னர்கள் அல்லாது தஜிகிஸ்தான் கஜகஸ்தான் போன்ற அரசர்களும் பாரசீக நாட்டு அரசர்களும் இந்த வியாபாரத்தில் இருந்துள்ளனர். .

குதிரை வணிகம் பெரிதாக நடந்தது தமிழகத்தில் தான்..

பாரசீகத்தில் இருந்து குதிரைகளை விலைக்கு அனுப்பும் சுல்தான் குலி என்ற பாரசீகர்  கி பி 1518 ல் நமது அரசர்களை நேரில் சந்தித்து பேச வந்துள்ளார் என்று ஆதாரப்பூர்வமான அறிவிப்பு உள்ளது.

குதிரை வணிகம் பெரிகியதால்
தமிழக அரசர்கள் வருவாயை அதிகப்படுத்தும் நோக்கில் மூன்று புதிய திட்டத்தை செயல்படுத்தினார்கள் என்ற வரலாறும் உண்டு.

குதிரை வரி
குதிரை பந்தி
குதிரை காணிக்கை என்று மூன்று விதமான வருவாய் இனங்கள். ஏற்படுத்தப்பட்டது...

இந்த குதிரைகளை படைக்கு தயாராகிக் கொடுப்பவர்கள் தான்
ராவுத்தர்கள்..

ராவுத்தர் என்ற பெயர் ஒரு அன்னியப் பெயர் போலவும் ராவுத்தர்கள் ஒரு அன்னியர்கள் போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

உண்மையில் ராவுத்தர் என்ற வார்தை சங்க கால இலக்கியங்களில் பல இடங்களில் வருகிறது.

திருவிளையாடல் புராணத்தில் பரஞ்சோதி முனிவர் குதிரை வணிகர்கள் வேடத்தில் வந்த
கடவுளை போற்ற..

இன்னைறி மன்னர் மன்னர்
இனிமை கர்த்து ராவுத்தருக்கு.

என குதிரையை வைத்து இருந்தார் என்பதற்கு ராவுத்தர் என்று குறிப்பிடுகிறார்.

பதினைந்தாம் நூற்றாண்டு இலக்கியமான கலிவெண்பாவில்
கந்தர் அலங்காரத்திலும் அருணகிரிநாதர் முருகனை போற்ற..

சூர்க்கொன்ற ராவுத்தனே
மாமயிலேறும்  ராவுத்தனே
என்று பாடினார்..

இதிலிருந்தே தெரிகிறது ராவுத்தர் என்றால் மிகவும் கண்ணியமான
சொல் என்று...

ராவுத்தர் என்றால் என்னசொல் இது குறித்து முடிவுக்கு வரமுடியாத நிலையே உள்ளது.

பாரசீக மொழியில் ராபித்தூ என்றால் எதிரியை எதிர்க காத்துக்கொண்டு இருப்பவன் என்று பொருள்.

பிரச்சனை என்னவென்றால் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் உள்ளது.

இம்மாடி ராவுத்தராயண்
ராகுத்த சிங்கப்பராயன்
பர்வத ராகுத்தன்.

ராஜ ராஜ சோழன் சோழனது விருதுகளில்  ராகுத்தமிண்டன்
என்ற பெயரில் ஒரு விருதும் உள்ளது என்ற வரலாறும் உண்டு.

வட ஆற்காடு மாவட்டம் காவேரிப்பாக்கம்  கல்வெட்டில்  கி.பி 1500 களில் சிங்கய ராவுத்தன் தங்கல் கிராமமும் அருகே காமாட்சி ராவுத்தன் தங்கல் என்ற பெயரில் கிராமம் இருந்ததாக பதியப்பட்டுள்ளது.

மதுரை சொக்கேசர் ஆலயத்தில் பாதுகாப்பு பணி செய்தவர் திம்மு ராவுத்தர் என்ற பெயருடையவர்.

அதெல்லாம் சரி ராவுத்தர் என்றால் யார் தான் என்ற இறுதி கேள்விக்கு தெளிவான பதில். .

தமிழகத்தில் வாழ்ந்து இசுலாமிய மதத்தை ஏற்றுக்கொண்டவர்கள் ..
ஆம் இசுலாமியர்கள் தான். .

அதெப்படி ஒரு முஸ்லிம் கோவிலுக்கு பாதுகாப்பு பணி செய்திருக்க முடியும்? என்ற கேள்விக்கு பதில் இதோ

தண்டமிழ்க் கச்சி வளம்பதி வாழும் சதுரன் தீண்டரும் கீர்த்தி மிக்க சுவப்பையன் திம்மு ராவுத்தனே என்று புகழ்ந்து கூறியுள்ளது (மதுரை திருப்பணி மாலை )

ராவுத்தர் என்றால் இசுலாமியன் என்று ஒதுக்கிய நமக்கு பிரபந்த திரட்டு பாடல் எண்  362 இல்

தமிழகத்தின் மூத்த குடிகள் பட்டியலில் ராவுத்தர்களையும் சேர்ந்தே கூறியுள்ளது.

ராவுத்தராயன் என்ற பெயர் வரலாற்றில்  சில இடங்களில் வருகிறது.

அதேப்போன்று ராவுத்த கர்ததன் எனவும் வருகிறது.

குதிரைக்கு பயிற்சி கொடுத்த ராவுத்தர்கள்... அரசனின் படையிலும் போர் வீரணாக பங்கெடுத்துள்ளனர்.

ராவுத்த கர்தன் என்பது போர்படை தளபதிகளுக்கு தருகிற பெயர்.

பாண்டிய மன்னன் படையில் உள்ள முஸ்லீமுகளுக்கு ராவுத்த கர்தன் என்ற பெயர் ஏற்பட்டது என்று வரலாறு கூறுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் குதிரைக்காக ராவுத்தர் கொக்காக பறந்தார் என்ற பழமொழி உள்ளது எத்த அளவிற்கு ராவுத்தருக்கும் குதிரைக்கும் தொடர்பு இருக்கிறது என்ற  உண்மை தெரியவருகிறது. .

அந்த பூர்வீகம் தான் எதற்கும் குதிரையை வைத்து கொண்டாடும் அம்மக்கள்.

திருமணத்தின் போதும் மாப்பிள்ளையை குதிரையில் வைத்து கொண்டுவருகின்றனர். ..

இப்போது குதிரை வாணிபம் செய்வதில்லை ஆனாலும் பல ஆண்டு பழக்கம் காரணமாக வாடகைக்கு குதிரைகளை எடுத்து திருமணத்தின் போதுமட்டும் ஊர்வலம் வருகின்றனர் அம்மக்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.