17/08/2018

பாகிஸ்தானை ஒரு நொடியில் அழித்து விடுவோம்.. கார்கில் போரின் போது அமெரிக்க அதிபரை எச்சரித்த வாஜ்பாய்...


1998-ம் ஆண்டு மே 11-ம் தேதி பொக்ரானில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியது. நாடு நடத்திய இரண்டாவது அணுகுண்டு சோதனை அதுவாகும். அணுகுண்டு சோதனைக்கு பிறகு 1999 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் லாகூருக்கு பஸ் மூலம் பயணித்து பாகிஸ்தானுடன் உறவை விரும்பியவர் வாஜ்பாய்.

ஆனால் இதன் பிறகு மூன்று மாதத்திலேயே அதாவது, மே மாதம் பாகிஸ்தான் ராணுவம், கார்கில் பகுதியில் ஊடுருவி தாக்குதல் நடத்தியது. பதிலடி கொடுத்து, இந்தியா வெற்றிக் கொடி நாட்டியது.

கார்கில் போர் சமயத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்க அதிபர், பாகிஸ்தானிடம் சக்தி வாய்ந்த அணுகுண்டுகள் உள்ளது. அதில் ஒன்றை பயன்படுத்தினால் போதும், உங்கள் பாதி இந்தியா காலியாகிவிடும். எனவே போரை நிறுத்துங்கள் என்று மிரட்டினார்.

ஆனால் இதற்கு அடிபணியாத வாஜ்பாய், எங்களுக்கு வேண்டுமானால் பாதி காலியாகி விடும். ஆனால் அதற்குள் பாகிஸ்தான் இருந்த தடமே தெரியாமல் அழித்து விடுவோம். அந்த நாடு வரைபடத்திலேயே இருக்காது என்று பதிலடி கொடுத்தார். இதனை சற்றும் எதிர்பாராத அமெரிக்க அதிபர் ஆடிப்போனார். அதன்பிறகு தொடர்ந்து போரிட்டு இந்தியா கார்கிலை வென்றது குறிப்பிடத்கத்கது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.